Wednesday, December 29, 2010

பயனையும் இன்னும் அவர்கள் எண்ணியிருக்கும் அறங்களின்பயனையும் தமிழ்நாடு விரைவில் எய்தும் என்பது உறுதியே. குறிப்பு: ச.இளமுருகன் அவர்கள் ருக்மிணி ஆலையில் பணியாற்றினார்கள். பண்டிதமணி அவர்களின் மகன் சுப்ரமணியன் அவர்கள் மேலாளர் . அத்தை மகளை திரு மணம் செய்த பிறகு தனது தந்தையை தன்னுடன் தங்கி உணவு உண்ண வேண்டினார். எதற்கு சிரமம் என தந்தை மறுக்க இளமுருகன் தனது மேலாளர் அவர்களிடம் வாய்மொழியாக கேட்டு க்கொண்டு தலைமறைவு ஆனார். தந்தையும் இளமுருகனுடன் சேர்ந்தார். மேலாளர் ஒத்துழைத்தார்கள்.

கலைத்தந்தை-பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்

பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் அவர்கள் தனது திருவாசகம்-திருச்சதகம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ள செய்தி. அறிவு, அன்பு முதலிய நற்குணங்களும் கடவுள் வழிபாடு ஒழுக்க முதலிய நற்செயல்களும் ஒருங்கு வாய்க்கப பெற்றவர் என் இனிய நண்பர் ஆ.தெற்கூர் திருவாளர் கருமுத்து தியாகராசச்செட்டியார். இவர்கள் நல்லூழ் வய த்தாலும் தம் முயற்சியாலும் மதுரை, கோயம்பத்தூர் சேலம் புதுக்கோட்டை முதலிய நகரங்களில் நூற்றல் நெய்தல் தொழில்களுக்கு உரிய பெரிய எந்திர சாலைகளை அமைத்து பல ஏழை மக்கள் பிழைப்பதற்கு வழியுண்டாக்கினார். அத்தொழில் பெருஞ் செல்வம் அடைந்தார்கள். இளம்பருவத்தே இலங்கையில் தமிழ் புலமை மிக்க சிற்கைலாசம்பிள்ளை அவர்களிடம் குறிஞ்சி பாட்டு சிலப்பதிகாரம் நூல்களை பயின்றார்கள். தமிழ் இலக்கிய சுவையில் ஈடுபாடும் அதன் வளர்ச்சியில் பேரார்வமும் உடையவர்கள். திருவாசகத்தையும் திருக்குறளையும் தம் கண் போல் போற்றி வருபவர்கள். சிறு பருவம் தொட்டு என்பால் பிறழாத அன்பும் மதிப்பும் உடையவர்கள். இவர்கள் பிறந்த ஊரில் ஒரு கல்வி நிலையம் நிறுவி யுள்ளார்கள். மேலும் தாம் பிறந்த ஊரில் ஒரு கல்வி நிலையம் நிறுவியுள்ளார். மலும் தம் வாழ்க்கைக்கு நல்லிடனாக அமைத்துக் கொண்ட மதுரை மாநகரில் கல்லூரிகள் காணும் வேட்கை மிகுந்து முயன்று வருகின்றார்கள். அம்முயற்சியின்

Tuesday, December 28, 2010

கலைஅன்னை சுழல் கோப்பை வழங்கினார்கள். ஏ.ஏஸ் .பிரகாசம் ஜெயா தொலைக்காட்சியில் குறிப்பிட்டார்கள். கருமுத்து தோற்றுவித்த ஆலைகளின் நுழைவாயிலில் வெண்கலத் தகடுகளால் ஆன யானை இருக்கும். பள பள வென்று வெங்கலம் மின்னும். காண்போரை வியக்க வைக்கும். அதை த தாண்டி நுழைந்தால் தோட்டக்காரன் சிலையினையும் இருமடங்கும் மகளிர் விளக்கேந்தி இருக்கும் பளிங்கு சிலையில் இருப்பதைக்காணலாம் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பே . விசுவநாதம் அவர்கள் இந்தி எதிர்ப்பு மாநாட்டினை திருச்சிராப்பள்ளியில் கூட்டினார்கள். கருமுத்து தியாகராசர் தமிழ் வாழ்க என தமிழ்க்கொடி ஏற்றினார்கள். முத்தமிழ் காவலர் விசுவநாதம் வாழ்க்கை வரலாற்றினை சந்தோசம் அவர்கள் தயாரிக்க முத்துராமன் இயக்கினார்கள்..

Monday, December 27, 2010

திரை உலகினில் ஜெமினி நிறுவனம் இரும்புத்திரை திரைப்படத்தினை மீனாட்சி ஆளை பரவையில்திரைப்படமாக்கியது. தி.மு.க. வை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா அவர்கள் தியாகராசர் பொறியியல் கல்லூரி கட்ட இலவசமாக இடத்தினை வழங்கிட ஆணையிட்டார்கள்.
புரட்சி தலைவர் பொன்மனசெம்மல் அவர்கள் தியாகராசர் கல்லூரிக்கு சுழற்கோப்பை ஒன்றை வழங்கினார்கள். ஆண்டு தோறும் கல்லூரிகள் இடையே நாடகப் போட்டியினை நடத்தி வெற்றி பெறும்நாடகக்குழுவிற்கு அச்சுழல் கோப்பையை வழங்க சொன்னார்கள்.பிரகாசம் எழுதிய மாண்டவன் மீண்டான் நாடகம் தியாகராசர் கல்லூரிக்கு சுழல் கோப்பையை பெற்றுத் தந்தது. சாலமன் பாப்பையா அவர்கள் தந்தையாகவு ம இளமுருகன் மகனாகவும் நடித்தனர்.
பஞ்சு கொள்முதல் வழக்கு பஞ்சு விலை பேரம் பற்றிய வழக்கு நூல்விலை கட்டுப்பாடு பற்றிய வழக்கு நூல்கட்டுகள் பறிமுதல் வழக்கு என மீனாட்சி ஆலையில் வழக்கறிஞர்கள் குழு அமைத்து நீதி மன்றங்களில் வெற்றி பெற்றார்.
கலைத்தந்தை க்கு கோவில் கட்டும் அளவிற்கு அகில இந்திய ஆலை முதலாளிகள் பயன்பெற்றனர். ஆயிரம் பிரச்னைகள் பற்றித்தான் என ஆனந்த விகடன் தனது மதுரை மாவட்ட மலரில் எழுபதில் குறிப்பிட்டு இருந்தது. குடும்பங்களில் சந்ததிகளிடம் மரபணுக்கள் வழியாக சில அபூர்வ பண்புகள் நீடித்து நிலவி வருவதாக நவீன விஞ்ஞான ம கூறுகின்றது. கருமுத்து தியாகராசரின் குணநலன்களை அவரது மகன் கருமுத்து கண்ணனிடம் காணலாம்.
விரித்த படியே கவிழ்த்து மேசை மீது வைத்தார். ஆனால் மீண்டும் பயன்படவில்லை இறக்கின்ற தருவாயில் கூட தமிழ்புலவர்களே அவரது நெஞ்சில் நிறைந்துள்ளார்கள். முன்னால் குடியரசுத் தலைவர்கள் வி.வி.கிரி வெங்கட்டராமன் ஆகியோர் அவரது மாளிகைக்கு பதவியில் இருந்த போது வருகை புரிந்து உள்ளார்கள். ஜெயப்பிரகாச நாராயணன் மீனாட்சி ஆலைக்கு வந்துள்ளார்கள். வருமான வரி இலாகாவினர் நிர்வாக இயக்குனர் சம்பளத்திற்கு வரிவிதித்த பொழுது வரிகட்டாமல் வழக்கிட்டு வென்றார். அகமதாபாத் ஜவுளிக் கழகம் மலர் ஒன்றினை கருமுத்துவிற்காகவெளியிட்டு கௌரவித்தது.
காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க. சொற்பொழி வாளர்களை பேரறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி நாவலர் நெடுஞ்செழியன் கவியரசு கண்ணதாசன் ஆகியோர்களை தியாகராசர் கலைகல்லூரியில் உரையாற்ற அழைத்தார். சென்னைக்கு வந்திருந்த உலகத்தமிழ் மாநாட்டில் கலந்து கொண்ட உள்நாடு வெளிநாடு தமிழ் அறிஞர்கட்கு விருந்தும் பரிசும் அளித்தார். திருக்குற்றாலத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை புறநானுற்றில் மோசி கீரனார் பாடிய மாசற விசித்த என த்தொடர் வரும் பாடல் எழுந்த சூழலை டாக்டர் மூ.வ. அவர்கள் எடுத்து கூறினார்கள். அதைப்பக்கம் பிறழாமல் வை. அதனை தனியே எழுதி வைக்கவேண்டும் என்று கருமுத்து கூற கலைஅன்னை அந்நூலை
மதராஸ் வானொலி நிலையத்தில் கல்வி பற்றி பேசினார். சித்த மருத்துவ மாநாட்டில் பேசினார். பறவை மீனாட்சி ஆலைத்தொழிலாளர் குடியிருப்பு தனது நீண்ட நாள் கனவு என்று திறப்பு விழாவில் உரையாற்றினார். நகரத்தார் சங்க ஆண்டு விழா வில் தமது சமூக முதுகன்னியரை தத்தம் உடன் பிறந்த சகோதரியாக பாவிக்க வேண்டும் என்றார். கல்கி கிருபானந்த வாரியாருடன் நட்புக் கொண்டிருந்தார்கள்.
பழமுதிர்சோலையில் முருகன் படை வீட்டினை மீண்டும் அமைக்க மேற்கொள்ள ப்பட்ட முயற்சிகளை கலைத்தந்தை வரவேற்றார்கள். அறநெறி அண்ணல் பொன்னம்பலம் தியாகராசன் அவர்களது கூட்டு முயற்சி . சிவன் ஆசாரி சண்முகசுந்தரம் மீயன்னசாம்பசிவனார் ஆகியோர் உடன் இருந்தனர்.
மதுரைத்திருவள்ளுவர் கழகத்தில் சிலப்பதிகாரம் பற்றிய சொற்பொழிவினை கந்தசாமிப்பிள்ளை அவ்வை சு.துரைசாமிப்பிள்ளை அறநெறி அண்ணல் முன்னிலையில் கலையன்னை சொற்பொழிவு ஆற்றினார்கள். திருவாசக ஆய்வு நூலை கலையன்னை வெளியிட்டார்கள். கம்பர் சமாதியிருக்கும் நாட்டரசங் கோட்டையில் இளங்கோவும் கம்பரும் என்கின்ற தலைப்பினில் சிலம்புஸ் செல்வர் ம.போ.சி. முன்னிலையில் கலையன்னை நிகழ்த்தினார்கள்.
பெரிய தொழில் அதிபர்களில் தியாகராசச்செட்டியார் ஒருவர் தான் தம் தொழிற்சாலைக்குள் வீடு கட்டி வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார்.தொல்காப்பியம் உள்பட பல நூல்கள் வெளிவர பொருள் உதவி செய்தார். இராஜாஜி எழுதிய திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பினை திருவள்ளுவர் கழகத்தில் வெளியிட்டார்கள்.
சொற்படி அவ்வை சு, துரைசாமிப் பிள்ளை அவர்களிடம் தமிழை கற்று அழகப்பா பல்கலைகழக துணைவேந்தர் ஆன கலையன்னை திருமதி இராதா தியாகராசன் அவர்கள் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு. கணவரின் வரலாற்றினை மனைவி எழுதுவது எளிதான காரியமல்ல. திருமதி இராதா தியாகராசன் அவர்கள் சுயசரிதையில் தனி சகாபதத்தினை ஏற்படுத்தி உள்ளார். ஆலை அரசர் கருமுத்து தியாகராசர் நூல் மூலம் எனலாம். புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் தியாகராசர் பொறியியல் கல்லூரியில் வெளியிட்டார்கள்.

Sunday, December 26, 2010

தமிழ்த்துறை தலைவர்களை தியாகராசர் கல்லூரி முதல்வர் ஆக்கினார்.மதுரையினை எத்திக்கில் இருந்து நுழைந்தாலும் அவரது தொழிற்சாலைகள் அல்லது கல்லூரிகள் நம்மை வரவேற்கும். மதுரையின் இன்றைய நிலை உருவாக காரணமானவர். தம் மக்களுக்கு தேவார நாயன்மார்களின் பெயர்களை இட்டார். சுந்தரம் மாணிக்கவாசகம் அவர்கள். கட்டிடக்கலையில் தனி இன்பமும் பாணியும் கண்டவர். தமிழ் பயில எளிமையான மொழி. திருமணத்திற்கு பிறகு கருமுத்து தியாகராசர்

தொலைவில் வரும் நபர் அணிந்திருக்கும் சட்டை வேட்டி இன்னின்ன நூலில் தயாரிக்கப்பட்டது என்று சொல்லும் ஆற்றல் பெற்றவரும் தனது தந்தைக்குப்பின்னர் தன்னை வளர்த்து ஆளாக்கிய அருணாசல செட்டியார் அவர்கள் மகன் தியாகராசன் அழகப்பன் மருமகன் சேதுராமன் ஆகியோர்க்கு தனது ஆலையில் உயர் பதவிகளை நன்றிக்கடனாக வழங்கினார்.

தேவிகுளம் பீர்மேடு எல்லைப்போராட்டத்தை சக்கரவர்த்தி இராசாசி ஜீடிநாயுடு பி .ட்டி .இராசன் ஆகியோர்களுடன் முன்னின்று போராடினார். தொழிலதிபர்களில் அவர் ஒருவரே இப்படி செயல்பட்டவர்.

மகாத்மா காந்தியடிகள் மதுரைக்கு வந்திருந்த போது தியாகராச செட்டியாரின் மேலமாசி வீதி வீட்டில் தங்கினார். அப்பொழுது அரை ஆடை அணிந்தார்கள். முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் அரசாணையிட்டு காதி கடை மாடியில் ஐம்பத்தொரு லட்சம் மதிப்பீட்டில் நினைவுச்சின்னம் அமைத்துள்ளார்கள். இப்பொழுதும் அங்கே காணலாம். நேதாஜி சுபாஷ் சந்திர போசினை தனது விருந்தினராக அழைத்து வந்தார். தனது மூத்த மனைவி விசாலாட்சி ஆச்சிக்கு அவரது பெயரில் நிறுவிய கலாசாலைக்கு பாரதப்பிரதமர் ஆசிய ஜோதி நேருவினை யும் பெருந்தலைவர் காமராசர் அவர்களையும் அழைத்தார்.
வழங்கி வாழுகின்ற மக்கள் இறந்தும் வாழுகின்றார்கள் . நல்ல வழியில் பொருளைத் தேடி சமயத்தொண்டு , கல்வித்தொண்டு ,கலைத்தொண்டு , கலைத்தொண்டு வங்கிகளைத்தொடங்கி பொருளாதாரத் தொண்டையும் ஆற்றினார். வாழ்நாளில் காசோலை வழங்கியதில்லை. வளரும் மேலை நாடுகளுக்கு ச செல்ல விரும்ப வில்லை. பட்டம் பதவிகளை விரும்பியது இல்லை. தனது அலுவலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பினார். தனது மகன் மாணிக்கவாசகம் செட்டியாரை ஜப்பானுக்கு அனுப்பி வைத்தார்கள். அரசின் மான்யம் பெற வளைந்து கொடுத்தது இல்லை.
வாங்கி பதினைந்து லட்சம் மதிப்புள்ள பங்குதாரர்களை மீனாட்சி ஆலைக்கு சேர்த்தார். தனது மூத்த மகளுக்கும் முதல் ஆலைக்கும் மீனாட்சி எனப் பெயரிட்டார்கள். பணம் பத்தாதகுடும்பத்தில் பத்தாவதாக பிறந்த கருமுத்து பதினெட்டு ஆலைகளை நிறுவி லாபம் ஈட்டி அறுபது லட்சம் கல்விக்காக வழங்கினார்.
தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாத்மா காந்தி இந்தியா திரும்பிய ஆண்டு இலங்கையில் இருந்து கருமுத்து இந்தியா திரும்பினார். வெள்ளையர் ஆட்சியில் காங்கிரஸ் இயக்கத்தில் ஒரு கால கட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக விளங்கி பாரதப்பெருந்தளைவரின் காமராசரின் அன்பிற்குரிய சகாவாக எனப் பழ நெடுமாறன் ஐயா அவர்கள் கூறுகின்றார்கள். ஹார்வி நிர்வாகம் தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு ஆலையை மூடிய சமயம் தொழிலாளர் தலைவர் வரதராசு நாயுடு அவர்கள் உதவியோடு ருபாய் ஐந்து லட்சம் மூலதனத்துடன் இருபது ஈக்கர் நிலத்தினை ஆண்டாள்புரத்தில்
அசைவ உணவு கேட்டு கிளர்ச்சி செய்த தமது கல்லூரி மாணவர்கட்கு திட்ட வட்டமாக வழங்க மறுத்தார்கள். அசைவ உணவை உண்பவர்களுக்கு தனது மாளிகையில் தங்க இடம் தர மாட்டார் என்கிறார். சிலம்பு செல்வர் . எப்போதும் தூய வல்லை ஆடை உடை உடுத்தி வந்தார். எண்பதுவயதிலும் அவருடைய உடற்கட்டு அனைவரையும் வியக்கஸ் செய்தது. ஒரு போதும் கூனிக் குறுகி அவர் இருந்ததில்லை. நிமிர்ந்த நெஞ்சினராய் இருந்தார். லிப்டுகளில் செல்ல விரும்பவில்லை. மாடிப்படிகளை ஏறிச்செல்லுவார். என விவரிக்கின்றார் சோமலே.
செட்டி கண்டதெல்லாம் வட்டி என நிலவும் வன்சொல்லை மாற்றி பஞ்சாலைகளை நிறுவி ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். இலங்கைக்கு பிழைக்க வரும் தமிழர்களின் உடலில் அடையாளமாக சூடு போடும் முறையைத்தடுத்து நிறுத்தினார். நகரத்தார் சமூகத்தில் திருமணங்களில் மணமகன் மணமகளுக்கு தாலி கட்டும் வழக்கம் கருமுத்து தியாகராசர் குடும்பம் செல்வாக்கு பெறும்முன்பு இல்லை என்கின்றார் திருமதி ராதா தியாகராசன் . தன்னுடன் படித்த தன்னை விடப் படித்த பி.தி.இராசன் அவர்கள் ஆயிரம் பிறை கண்ட விழாவினை தலைமையேற்றார். சைவ உணவை உட்கொள்வதெனபிடிவாதமாக இருந்தார்கள்.
ஏசாசிறப்பின் இசை விளங்க பெருங்குடி என்று இளங்கோவடிகளும் மானமிகு தருமத்தின் வழிவந்த ஊனமில் சீர்பெருவணிகர் என்று சேக்கிழாரும் சிறப்பாகப் பாடியுள்ள நகரத்தார் குலத்தில் ஆ.தெற்கூரில் முத்துக்கருப்பன் செட்டியார் - வினைதீர்த்தான் ஆச்சி தம்பதி யருக்குபத்தாவது பிள்ளையாக கருமுத்து தியாகராசர் பிறந்தார்.
ஆத்திக்காடு தெற்கூரில் திண்ணை ப பள்ளிக்கூடத்திலும் மதுரையில் சேதுபதி உயர்நிலைப்பள்ளியிலும் இலங்கையில் செயின்ட் தாமஸ் கல்லூரியிலும் படித்தார்கள். மார்னிங் லீடர் ஆங்கில நாளிதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்கள். சென்னை இராசதானியின் ஆளுநராக இருந்த பென்லாண்டு பிரபுவிற்கு இலங்கையில் நகரத்தார்குநேர்ந்த சிக்கல்களை குறித்து எழுதிய கடிதம் இன்றும் சென்னை எழும்பூரில் ஆவணக் காப்பகத்தில் பேணப்பட்டு வருகின்றது.

Saturday, December 25, 2010

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோயம்புத்தூர்ர் கருமுத்து தியாகராசர்

எழுதியவர் பஞ்சாலைக் கவிஞ்ர ச. இளமுருகன்
உலகெங்கிலும் வாழுகின்ற மறைந்த தொழிலதிபர்களிடம் உணர முடியாத மெச்சத்தகுந்த குணநலன்கள் பலவற்றினை கருமுத்து தியாகராசரிடம் காணலாம்.
தியாகராசர் பொறியியல் கல்லூரிபொன்விழா ஆண்டு விழாவில் சொற்பொழிவு ஆற்றிய முதல்வர் டாக்டர் கலைஞ் ர அவர்கள் சோனியா வழியில் மகளிர் நடக்க கே ட்டுக்கொண்டார். கருமுத்து தியாகராசர் மறைந்த பொழுது கலைஞர் அவர்கள் எதிர்க்கட்சி த தலைவர். தொழில் வளர்ச்சிக்கு மட்டுமல்ல தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டார் என்ற செய்தியினை தமிழ்நாடு இதழ் வெளியிட்டது.

Sunday, December 19, 2010

பேணும் முறைமையை ஒரு தன்மையான கலைமரபையே யாண்டும் என்றும் பின்பற்றும் அழகை யான் கண்டு மனதுள் போற்றி வந்ததுண்டு.

ஒரு திருவிளக்கு ஆயிரம் விளக்குகளை ஏற்றி வைக்கிறது. கலைத்தந்தையின் இப்பெருவாழ்வு இந்நாட்டில் ஆயிரம் ஆயிரம் தன்முயற்சிசெய்பவர்களை

உருவாகும் என நெஞ்சம் நிறைந்து போற்றுகின்றேன்.

அமர்ந்திருந்தனர். என் உரைநடையைப்படித்த கலைத்தந்தை அதிலே இருந்த ஒரே ஒரு வடசொல் கலப்பையும் கடிந்துரைத்தார், மறைமலையடிகள் தவிர மற்றவர்களுக்கு சிறந்த உரைநடை எழுத த தெரியவில்லை என அவர் திட்ட வட்டமாக விவரித்தார். சரிதான் இனி நமக்கு வேலை கிடைக்காது என அஞ்சி நின்றேன். பரிந்துரைகள் பல அரசியலிலிருந்தும் உயர்நிலையில் இருந்தும் தம்மை அழுத்திகொண்டிருந்த போதிலும் அவற்றிற்காக சிறிதும் விட்டுக் கொடுக்காது அவ்வேலையை கலைத்தந்தை அன்று எனக்கு அளித்தார். அன்று முதல் அப்பெரியவருடைய கட்டுதிட்டமும் வரன் முறையுமாய் அமைந்த வாழ்வை ஒரு சொற்பொழிவு என்றால் பலநாள் ஆயத்தம் செய்து மொழி நலம்
என் நூல்களை கலைத்தந்தை பார்வையிட்டார். இலக்கியத்தில் இன்பச்சுவை என்ற நூலின் முதற்கட்டுரை முழுவதையும் படித்தார். தாலாட்டு என்ற எனது தொகுப்பு நூலின் முன்னுரையைப்படித்தார். யான் எழுதிய தாலாட்டுப்பாடலில் ஈடுபட்டு மௌனமாகப்படித்தார். குறிஞ்சிப் பாட்டு திறனாய்வு என்ற நூலைபார்வையிட்ட அவர் அப்பாட்டினை ஒப்பிக்கும் படி ஆணையிட்டார்.
அன்னை வாழி வேண்டான் என்ற தொடக்க சொற்களை கூறவே அன்று அந்நிலையில் யான் தடுமாறினேன். அவரொஅ நூற்றைம்பது அடிகள் வரை அப்பாட்டினை ஒப்பித்து கொண்டே போனார், உரைவேந்தர் அவ்வை சு. துரைசாமிப்பிள்ளை , மொழிக்காவலர் சி.இலக்குவனார் எல்லோரும் வியந்த படி

கலைத்தந்தை _ தமிழண்ணல்

கலைத்தந்தை கருமுத்து தியாகராசரின் கலைக்கோயிலாம் தியாகராசர் கலை க்கல்லூரியில் பத்தாண்டுகள் பணியாற்றும்போது அடிக்கடி ஒன்றை நினைப்பதுண்டு.
நாம் நல்ல நல்ல நூல்களைத் தேடிப் படிக்கின்றோம் . அதைப்போல நல்ல திறமை வாய்ந்த மனிதர்களையும் படிக்கவேண்டும். நூல்களை ப படிப்பது போலவே மனிதர்களையும் படிப்பதும் மேலானது. மிகவும் பயனுள்ளது. கலைத்தந்தையின் வாழ்க்கை அவ்வாறு படிக்கத்தகுந்த ஒன்று என்பதே அந்நினைவாகும்.
கலைத்தந்தை அவர்களால் அன்று ஒருநாள் காலையிலும் மாலையிலும் இருமுறை நேர்முகப்போட்டி செய்யப்பெற்று தியாகராசர் கல்லூரியில் விரிவுரையாளர் ஆனவன் யான். எனக்கென்று எவ்விதப்பரிந்துரையும் இல்லை.
ஆயிற்றே என்று கூ றினாராம். இது போன்ற காரணங்களால் நமது செட்டியார் அவர்கள் வெளிநாடு சென்றுவர விரும்பியது இல்லை போலும். முப்பத்தி இரண்டு ஆண்டுகள் ஸ்ரீ செட்டியார் அவர்கள் போன்ற மேதையிடம் நெருங்கிப் பழகி அவருடன் மாதக்கணக்கில் நம் நாட்டிலேயே சேர்ந்து பிரயாணம் செய்து முழுமையாக அவரை அறிந்து கொள்ளும் வாய்ப்பினையும் பாக்கியத்தையும் பெற்றதை எண்ணி எண்ணி பெருமிதம் கொள்கிறேன். அந்த இனிய அரியமேதை நம்மிடையே இருந்து மறைந்து விட்ட போதிலும் அவர் விட்டு சென்ற பல அரிய நினைவுசின்னங்கள் வாயிலாக அவர் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
வெளிநாடுகளில் எது சைவ உணவு எது அசைவ உணவு என்பதை அவர்களுக்கு புரிய வைப்பதே மிக்ஸ் சிரமமான காரியம், அவர்களின் எண்ணப்படி முட்டை சைவ உணவாகும். நம் நாட்டவர் ஒருவர் வெளிநாடு சென்று அங்கு இருந்த விடுதிப்பணி யாரிடம் நான் சுத்த சைவம் தாகத்திற்கு அருந்த என்ன கொடுக்க முடியும் என்று விசாரித்தார். அதற்கு அவர் பிராந்தி அல்லது விஸ்கி சோடா சகிதம் கொணர்வதாக அங்குள்ள வழக்கப்படி கூறினார். அதை மறுத்து சே சே இதை எல்லாம் நாம் சாப்பிட மாட்டோம் சுத்த பால் சாப்பிடுகிறேன் என்று சொன்னதற்கு அந்த பணியாள்அடடா பால் மாட்டு ரத்தத்தில் இருந்து வரும் அசல் அசைவ பானம் ஆச்சே விஸ்கி பிராந்தி அவ்வாறின்றி சுத்த சைவ பானம்
அன்னாரின் தாராள குணத்திற்கு இன்னுமொரு உதாரணமும் சொல்வேன் . எனக்கு எகிப்தில் இருந்து அழைப்பு வந்திருந்தது. அதை செட்டியார் அவர்களிடம் காட்டி அவருடைய அபிப்ராயம் தெரிய விரும்பினேன். அவர்கள் கூறினார்கள். நீயும் தம்பி மாணிக்க வாசகமும் இருவருமாக போய் வாருங்கள் என்றார். அதன் பயனாக எகிப்து நாடு மட்டுமின்றி கிழக்கு ஆப்பிரிக்கா சூடான் ஐரோப்பாவில் யாவற்று நாடுகள் நாங்கள் இருவரும் நான்கு மாதங்கள் சுற்றுப்பயணம் முடித்து கொண்டு திரும்பினோம், அதே போல் நான் தனியாக மற்றுமொருமுறை மேலை நாட்டு வழியாக அமெரிக்காஹவாய் ஜப்பான் ஹாங்காங் சிங்கப்பூர் மலேயா பினாங்கு சென்று உலகத்தையே சுற்றி வரும் நல்வாய்ப்பு எனக்கு கிட்டியதென்றால் அவருடைய அளவிட முடியாத தாராள மனமும் தயாள சுபாவத்தையும் நிருபிக்கின்றது அல்லவா.

Saturday, December 18, 2010

இல்லவே இல்லை ஒரு கரண்டி பெட்ரோலில் பல மைல்கள் ஓடும் என்றான் சொந்தக்காரன். அதற்கு வாங்க வந்தவன் தேனீர் கரண்டியா அல்லது டேபிள் கரண்டியா என்று கேட்டானாம். ஆனால் இப்பொழுது நான் சிக்கனம் ஆனவனாக இல்லை. ஏனெனில் செட்டியார் அவர்கள் தர்மத்திற்கும் கல்விக்கும் அள்ளி அள்ளி கொடுத்தது போல் அவரிடம் வேலை பார்த்த யாவர்க்கும் தாராளமாக வாரிக் கொடுத்தார் என்பதற்கு இதுவே சான்றாகும். முன்பெல்லாம் எனக்கு கிடைத்த ஊதியத்தில் வேறுவிதமாக இருந்திருக்க முடியவில்லை. ஆனால் இப்பொழுது இருக்கவும் முடிகிறது.
தொழிலாளர்கள் மீது மிக்க ஆர்வம் கொண்டவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ஸ்ரீ கிரி அவர்கள் செட்டியாரவர்களின் உற்ற நண்பராவார். அவரைப்போன்ற பெரும் தலைவர்களும் நாட்டின் பிதாவாகிய மகாத்மா காந்தியும் அவரில்லத்தில் வந்து தங்கியுள்ளார்கள். செட்டியார் அவர்களின் தாராள மனப்பான்மையை பாராட்டாமல் இருக்கமுடியாது. நான் சிறு வயதினன் ஆக
இருந்த பொழுது என்னை சிக்கனக்காரன் என்று கேலி செய்வார்கள். உதாரணத்திற்கு மேலை நாட்டில் மோட்டார் கார் வாங்கும் நோக்குடன் கஞ்சன் ஒருவன் பழைய காரை பார்வையிட்டு கொண்டிருந்தான் . அப்பொழுது அவன் இந்த கார் அதிக பெட் ரோல் குடிக்குமா என்று வினவினான்.

சீரிய தெய்வப்பக்தியும் சுத்த சைவ உணவும் மது அருந்தாமையும் விரதமாக பூண்டு ஒழுகியவர் . வெளிநாட்டவர் வந்து அவருடன் தங்கும் பொழுதும் விருந்துகளில் சைவ இனிய எளிய அமுது உணவை படைத்தது உபசரிப்பார். அவர்களும் அப்புதுமையான உணவை விரும்பி உண்பார்கள். பொருள் செறிந்த உரையாடல்களில் அவர்களின் மது அருந்தும் பழக்கத்தையும் கூட அச்சுவாரச்யத்தில் மறந்து விடுவார்கள். அவர் மனதிற்கு நியாயமெனத தோன்றி விட்டால் அச்சமின்றி அரசாங்கம் என்றாலும் சட்ட ரீதியாக எதிர்த்து போராடி வெற்றியும் கொள்வார்.

ஸ்ரீ செட்டியார் அவர்கள் என்றும் யாரிடமும் மிக்க கோபத்துடன்அதிர்ந்து பேசும் சுபாவம் அவரிடம் ஒருபொழுதும் காணமுடியாது. யாருடனும் நட்பு பூண்டு
அன்புடன் பேசிப்பழக்கப்பட்டவர் . நம் போன்றவர்கள் அவரைக்கண்டு பேச அவரில்லத்திற்கு சென்றால் முதலில் உட்காரச்சொல்லிவிட்டுத்தான் மற்ற யாவையும் பேச ஆரம்பிப்பார். மிகவும் எளிமையான அடக்கமான வாழ்க்கையை மேற்கொண்டவர் . ஆடைகள் முதலான நடை உடை பாவனைகளிலே இது நன்கு புலனாகும்.
தொழிலாளர்களிடையே கொந்தளிப்பான நிலை ஏற்பட்டிருந்தாலும் அபபதட்டமான நிலையிலும் சற்றும் மனக்கலக்கமும நிதானமும் இழந்து விடாமல் அச்சமின்றி ஆலைக்குள் அவர்கள் இருக்குமிடத்திற்கே நேரிடையாக சென்று விடுவார்கள். அவ்வித சந்தர்ப்பத்திலும் இவரைக்கண்டவுடன் யாவரும் அடங்கி ஒடுங்கி ஒதுங்கி பயபக்தியுடன் விலகி நின்று விடுவார்கள். தவிரவும் அவரிடம் கடுமையாக பேசவும் அஞ்சுவார்கள் என்றால் அப்பேர்ப்பட்ட பெற்றோர் பாசத்தை அவர்களிடையே வளர்த்து விட்டிருந்தார்.

எனது சிந்தனையில்....

தமக்கென்று வாழாமல் மற்ற யாவற்ற மக்களின் நலன்களுக்காக வாழ்ந்த உத்தமர். அவருடைய தர்ம தயாளகுணங்களினால் பல்லாயிரகணக்கான ஏழை எளிய மத்தியதரக்குடும்பங்கள் ஆதரவு பெற்று மேம்பட்டிருக்கிறார்கள் . அதே போல் அவர்கள் இன்றும் அவர் அளித்த ஆதரவுடன் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். செட்டியார் அவர்கள் தெளிந்த சிந்தனையையும் நீதியையும் , நம்பிக்கை நிறைந்த தைரியத்தையும் , யாவரையும் வசீகரிக்கும் சுபாவத்தையும் கைக்கொண்டு நிதானத்துடன் செயல்படும் திறன் படைத்தவர் ஆவார்.

எனது சிந்தனையில் ஸ்ரீ கருமுத்து தியாகராஜன் செட்டியார் சி.வே.ரெங்காச்சாரி

நாட்டு மேதைகள் சிலரின் உயரிய உள்ளக்கிடக்கையில் உதயமாகும் சின்னஞ்
சிறு மின்பொறி போன்று ஜீவாணுவாக தோற்றமேடுக்கும் சீரிய் எண்ணங்களே நாளடைவில் கருவென வளர்ந்து உருவெடுத்து நுட்ப யந்திரமய தொழிற்புரட்சியை ஏற்படுத்தும் சாதனையாக அமைகின்றது.
அத்தகைய மேதைகள் சிலரில் ஒருவரே தவப்புதல்வரான ஸ்ரீ கருமுத்து தியாகராஜன் செட்டியாராவார்கள். அன்னாருடைய தொழில் நுட்ப ஆர்வமும் ஊக்கமுமே பெருங்கொண்ட நூற்பு ஆலைகளையும்சர்க்கரை ஆலைகளையும் நஷ்டஈட்டு காப்பு நிலையம் , வங்கி செய்தித்தாள் பிரசுரம் மற்றும் பொறியியல் கலைக்கல்லூரிகள் நமக்கு ஈந்து தந்துள்ளது.