Wednesday, December 29, 2010

கலைத்தந்தை-பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்

பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் அவர்கள் தனது திருவாசகம்-திருச்சதகம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ள செய்தி. அறிவு, அன்பு முதலிய நற்குணங்களும் கடவுள் வழிபாடு ஒழுக்க முதலிய நற்செயல்களும் ஒருங்கு வாய்க்கப பெற்றவர் என் இனிய நண்பர் ஆ.தெற்கூர் திருவாளர் கருமுத்து தியாகராசச்செட்டியார். இவர்கள் நல்லூழ் வய த்தாலும் தம் முயற்சியாலும் மதுரை, கோயம்பத்தூர் சேலம் புதுக்கோட்டை முதலிய நகரங்களில் நூற்றல் நெய்தல் தொழில்களுக்கு உரிய பெரிய எந்திர சாலைகளை அமைத்து பல ஏழை மக்கள் பிழைப்பதற்கு வழியுண்டாக்கினார். அத்தொழில் பெருஞ் செல்வம் அடைந்தார்கள். இளம்பருவத்தே இலங்கையில் தமிழ் புலமை மிக்க சிற்கைலாசம்பிள்ளை அவர்களிடம் குறிஞ்சி பாட்டு சிலப்பதிகாரம் நூல்களை பயின்றார்கள். தமிழ் இலக்கிய சுவையில் ஈடுபாடும் அதன் வளர்ச்சியில் பேரார்வமும் உடையவர்கள். திருவாசகத்தையும் திருக்குறளையும் தம் கண் போல் போற்றி வருபவர்கள். சிறு பருவம் தொட்டு என்பால் பிறழாத அன்பும் மதிப்பும் உடையவர்கள். இவர்கள் பிறந்த ஊரில் ஒரு கல்வி நிலையம் நிறுவி யுள்ளார்கள். மேலும் தாம் பிறந்த ஊரில் ஒரு கல்வி நிலையம் நிறுவியுள்ளார். மலும் தம் வாழ்க்கைக்கு நல்லிடனாக அமைத்துக் கொண்ட மதுரை மாநகரில் கல்லூரிகள் காணும் வேட்கை மிகுந்து முயன்று வருகின்றார்கள். அம்முயற்சியின்

No comments:

Post a Comment