Friday, November 30, 2012

அவரைப் போற்றி புகழ த தவறியதை  என்றைக்கும்  மனதை உறுத்தும்  ஒரு மாபெருங் கு றை யாகவே யான் உணருகின்றேன்.
         பொறியியல்  நிபுணர்களும் , கட்டிடக் கலை வல்லுனர்களும்  மெச்சும்படியான பல சிறந்த ஆலைகளையும்  கலைக்கோ யில்களையும்  
கட்டிப் பெரும்புகழ்  ஈட்டிய  அமரர் செட்டியார்  அவர்கள்  ஆழ்ந்த கலை  ஞா னமும் உயர்ந்த  உள்ளுணர்வும்  பெற்றிருந்ததை ப போற்றாதார் யாரும்  இலர்.  அவரைப் போன்ற  பேராற்றல்  படைத்த பேரறிஞ்ர்கள்  ஆயிரம்  ஆண்டுகட்கு ஒருமுறை  தோன்றுவதும்  அபூர்வம்  என்றே கருதுகிறேன்.      
     வாழ்க  அவர் இலட்சியம்.
     வளர்க அவர் அமைத்தஆ  லைகளும் கலாசாலைகளும்.
ருக்மிணி அலையில் பணியாற்றிய  சமயம் எல்.என்எ ஸ அவர்களை  அவர்சந்திதேன். இப்பொழுது  அவரது கடடுரை உலகத்தமிழ் சங்கம் நடைபெற
இருக்கும் பொழுது  மாவட்ட் ஆட்சியாளரிடம்  தனி அதிகாரி மூலமாக சமர்ப்பிக்கின்றேன். ச. இளமுருகன்  மதுரை 30.11.2012 
கழித்தோம  என்பது தெரியாமல் பல செய்யுட்களைச சுவைபட ச சொல்லி  அவற்றின் அரிய  கருத்துகளையும் மனத்தில் என்றும் நீங்காது  நிலைத்து இருக்குமாறு  எடுத்துக்கூ றுவார்.  நல்ல நகைச்சுவைகளை ச சொன்னால்  மனம் திறந்து  வாய் விட்டு ச சிறுத்து விடுவார்.
      ஆங்கிலேய ஆசான்கள்  பலரிடம்  அவர்  ஆ ங்கிலம் கற்றதால்  மேலை நாட்டில் படித்தவர்களின் பாணியிலேயே  ஆங்கிலம் பேசுவார். இங்கிலாந்தில்
இருந்து வந்த வெள்ளைக்காரர்களும் அவர் பேச்சைக் கேட்டு வியந்து  அவர் ஆக்ஸ் போர்டில்  படித்தவரா என்று  என்னைக் கேட்டதுண்டு.
  கடைசி வரை நல்ல கையெழுத்தில் அச்செழுத்து ப போலவே துல்லியமாக எழுதுவார். 
       பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் பாலி டெக்னிக்குகளையும் கோடிக்
கணக்கில்  செலவிட்டு ஏற்படுத்திப பல்லாயிரக்கணக்கான  மாணவ மாணவிக ளை க் கல்வி  நலம் பெற்றுய்ய  வழிவகுத்த  அம்மாபெரும்  வள்ளல்
கலைத்தந்தை  எனப் போற்றிபுகழப்படுவது  சாலப்  பொருத்தமே கல்விக்காக . 
அவர் செய்த  செலவில்  ஒரு சின்னஞ் சிறிய  பகுதியை ச செலவிட்ட பலரை  ஆட்சியாளரும்  பலகலைக்   கழகத்தாரும்  பட்டங்கள்  வழங்கி கௌரவித்தனர். இவ்வுயர்ந்த  மனிதரை  அவர்தம்  வாழ்நாளில்  கௌரவப்படுத்த  அவர்கள் முன் வராதது. இந்நாட்டின்  அவல நிலையையே  காண்பிக்கின்றது.  
       பட்டம் பதவிக்கு  ஆசைப்பட்டு  அவர்  செலவு செய்தாரில்லை. எனினும்  ஆட்சியாளரும்  பல்கலைக்கழகத்தாரும் பட்டங்கள் 

Thursday, November 29, 2012

 அவர் மிகவும் தாராள  மனப்பான்மை கொண்டவர். பிறர் மனம் நோக நடந்து கொள்ள மாட்டார்.  யாரையேனும் வேலையிலிருந்து விளக்க நேரிட்டால்  அவர் எதிர்பார்க்கும் தொகையை விட  அதிகமாகவே கொடுத்து மனநிறைவோ டு வெளியே போகுமாறு செய்வார். வேலையை விட்டு சென்ற அநேகர்  அத்தருணங்களில் என்னிடம்  வந்து  அவரை மனமார வாழ்த்தி விட்டு சென்றிருக்கிறார்கள். 
      அவர் ஒரு பெரிய காருண்யமூர்த்தி.  அன்பே வடிவானவர். மீனாட்சி ஆலையில் சேர்ந்த சில ஆண்டுகளுக்கு ப பிறகு  ஒரு நாள் சென்னைக்கு செல்லும்  அவரை வழியனுப்ப  நான் இரயில் நிலையத்திற்கு ச சென்ற பொழுது  அடுத்த வாரம் ஒரு குறிப்பிட்ட கிழமையில் காலை  திருவனந்தபுரம் எக்ஸ்பிரசுக்கு  கார் அனுப்பச சொல்லியிருந்த தை  நான் எப்படியோ  மறந்து விட்டேன். கார் கிடைக்காததால்  அவர் இரயில் தண்டவாள வழியாகவே
நடந்து மில்லுக்கு  வந்து சே ர்ந்தார். எனக்கு 9 மணியளவில் திடீரெனஞாபகம் வந்து சொல்லொ ணா த துயரத்தில்  மூழகி  என்ன நேரூமோ  என்று அஞ்சி  இப்பெருந்தவறு  இழைத்த எனக்கு மூன்று வருட இன்கிரிமெண்டை நிறுத்தி  வைத்து  அல்லது சம்பளத்தைக்குறைத்து  அல்லது பெருநதொகை அபராதம்  விதித்து  அவசியம் என்னை தண்டிக்கவேண்டும்  என்றும்  அவ்வாறு தண்டனை வழங்கினால்  தன தன மனம் ஆ றும  என்று ஒரு குறிப்பு எழுதி க்         
கட்டிடசாரம்  ஒன்றில் அவர் நிற்கையில் கொடுத்தேன். வாங்கிப் படித்து பார்த்த ப பின்னர் கிழித்து போட்டு விட்டு சரி  போ வேலையைப்பார்  என்று என்னை அனுப்பிவிட்டார். என்ன உதார குணம்  யாருக்குத்தான்  இத்தனை பொறுமையும்  இளகிய மனமும் இருக்கமுடியும் .என் வாழ் நாள்  முழுவதும்  இச்சம்பவத்தை யான் மறக்க இயலாது. 
   ஸ்ரீலங் காவில்  திருவாளர் சிற் கைலாசம்  பிள்ளை என்ற தமிழ் விற்பன்னரிடம்  முறையாக த தமிழ் கற்றதாலும்  சங்க இலக்கியங்களில்  மாளாத காதல் கொண்டதாலும் அநேக செய்யுட்கள்  மனப்பாடமாக  இருந்தாலும்  வெளியூருக்கு  காரில்  செல்கையில் பல மணி நேரம்  எவ்வாறு  
அவரோடு  நான் 34 ஆண்டுகாலம்  நெருங்கி ப பழகியிருக்கிறேன்.  சற்றேனும்குரல் ஓங்கி ப்பேசியதே இல்லை.  என்னையும் தன மகன் மாதிரியே என்னை ம தித்து  மதிப்பு கே கொடுத்தார். அவரோடு யான்  சென்றஇடங்களில்  எல்லாம்  என்னுடன்  அவர் பழகும் பாங்கைகண்டவர்கள்  அவரிடமே நான்  அவர்  மகனா என்று கேட்டதுண்டு. கர்வம், மமதை . அறவே இல்லாத உயர்ந்த  ஒழுக்க சீலர்.      
நிருவாகத துறையில்  அவரை 
கலைத்தந்தை கருமுத்து தியாகராச செட்டியார். (  சுந்தரராமன் )எல்.என்.எஸ்

என் எஜமானர் வள்ளல் கலைத்தந்தை கருமுத்து தியாகராஜ செட்டியார் அவர்களை ப் பற்றி எழுத வாய்ப்பு க் கிடைத்ததை  ஒரு பெரும பாக்கியமாகக்
கருதுகிறேன் .
 அவர் மனித குலத்தில் ஒரு அரிய  மாணிக்கம் .அஞ்சா நெஞ்சமும் தள ராத
ஊக்கமும்  அயராத உழைப்பும்  வே று  யாருக்கும்  கிட்டாத  ஆற்றலும் 
கொண்டவர் .எந்த க் காரியத்தை எடுத்துக் கொண்டாலும் நன்கு  ஆ லோசித்து
பலாபலன்களை த தெள்ளத்தெளியசிந்தித்த  பிறகே  அதில் இறங்குவார். 
இறங்கியபின்னர் நோக்கார்.  கருமமே  கண்ணாய்  பணியாற்றுவார். ஒரு சிறு ஆலையில் தொடங்கி,வெளிநாட்டு வல்லுனரும் போற்றிட பல   நவீ ன ஆலைகளை  அமைத்து ப பல்லாயிரம்  மக்கள்  வாழ வழிவகுத்த அந்த உத்தமரை என்றும்  மறக்க இயலாது.  அவரது ஆலைகளும்  கல்விக்கூடங்க ளும   அவருக்கு  என்றும்  அழியாத  சின்னங்களாக என்றென்றும்  விளங்கும் .     
     சட்டம்  அவருக்கு இனிப்பு ப பண்டம் மாதிரி. சட்ட நுணுக்கங்களை  நன்கு  ஆராய்ந்து , சட்ட நிபுணர்களும் சிறந்த வழக்கறி ஞ்ர்களும் பரவசமாகி  வியக்கும்  வண்ணம்  அலசி எடுத்து க் கூ றுவார்.தம் சட்ட ஞா னத்தால்  அவர் வென்ற  வழக்குகள். பல பல. அவற்றில்  அவர் கண்ட  வெற்றியால்  பலன் அடைந்த ஆளை நிருவாகத்தினர்  இந்தியா  முழுவதும்  இருக்கின்றார்கள்.
  அவர்கள் அவரைத தெய்வாமகவே  போற்றி ப புகழ்கிறார் கள் . 
நிருவாக இயல் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்  படிப்புத துறையில் ஒரு கலையாகத்தோன்றுவதற்கு  முன்னாலேயே  அதன்  அடிப்படைத்தத்துவங்களை  நன்கு அறிந்து தமது நிருவாக அமைப்பில் அவற்றை ப பெரிதும் பயன்படுத்தி இருக்கிறார். கோடிக்கணக்கில் வரவு செலவுகள் இருந்தும் தனது சொந்தக்ண க்கில் காசோலை  எழுதுவதோ       
கையெழுத்து இடவோ  இல்லை.  உரிமை பெற்ற உதவியாளர்களை த திறன் அறிந்து பொ றுக்கி ப்  பொறுப்பை அவர்களிடம்  விட்டு மேற்பார்வையை மட்டும் தம்மிடம்  வைத்து  கொள்வார். தம்  அலுவல கங்களில் வேலை  பார்க்கும்  யாரையும்  துச்சமாககே கருதாமல்  எல்லோரிடனும்  அளவளாவி  விஷ யங்களைகே கிரகித்துக் கொண்டு  தவறு நடக்கும்  இடங்களைக்கண்டு  பிடித்து  குற்றங்களை   உடனுக்குடன்   களைந்து  எறிவார்.  யாரும் அவரை     ஏ மாற்றி விடஇயலாது.. 
  ஆழ்ந்த  சமயப்பற்றும்  திடமான கடவுள்  நம்பிக்கையும் என்றும் அவர் உள்ளத்தில்  கோயில் கொண்டு  இருந்தது.  விதியின்  வலிமையையும்  அறிந்தவர். அவர் தோல்விகளை கண்டு  அயரக் கூ டியவர் அல்ல . பெருஞ் சிக்கல்களை யும்  வழிய இன்னல்களையும்  சந்திக்கும் நே ரத்தில் தான் அவர் முழுப்பொலிவுடன்  திகழ்வார். எத்தனை இன்னல்கள் வந்த போதிலும்  அவர் முகம் வாட்டமடைந்ததைகே கண்டி லேன்.  அது  போன்ற  சமயங்களில்  வருவோ ர்களிடம்  ஏதும் நே ராதது போல இன்முகம் காட்டிப் பே சிடுவார்.

karumuththu thiagarajn chettiar by L.N.S.Sundararaman


மதுரையில் உலகத்தமிழ் சங்கம் மீண்டும் விரைவில் கூடஉள்ளது. மாவட்ட
தமிழ் வளர்ச்சி த துறை  அதிகாரி உயர்திரு  பசும்பொன் அவர்கள்  அதன் தனி அதிகாரியாக  நியமிக்கப்பட்டுள்ளார்கள். கருமுத்து தியாகராசர்  அவர்கள்  தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள்கி.பழனியப்பனார்  ஆற்றிய தமிழ் த்தொண்டு  அச்சிட்டு  வழங்க அனுமதி தர  வே ண்டுகின்றே ன்  ச. இளமுருகன்