Thursday, November 29, 2012

நிருவாக இயல் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்  படிப்புத துறையில் ஒரு கலையாகத்தோன்றுவதற்கு  முன்னாலேயே  அதன்  அடிப்படைத்தத்துவங்களை  நன்கு அறிந்து தமது நிருவாக அமைப்பில் அவற்றை ப பெரிதும் பயன்படுத்தி இருக்கிறார். கோடிக்கணக்கில் வரவு செலவுகள் இருந்தும் தனது சொந்தக்ண க்கில் காசோலை  எழுதுவதோ       
கையெழுத்து இடவோ  இல்லை.  உரிமை பெற்ற உதவியாளர்களை த திறன் அறிந்து பொ றுக்கி ப்  பொறுப்பை அவர்களிடம்  விட்டு மேற்பார்வையை மட்டும் தம்மிடம்  வைத்து  கொள்வார். தம்  அலுவல கங்களில் வேலை  பார்க்கும்  யாரையும்  துச்சமாககே கருதாமல்  எல்லோரிடனும்  அளவளாவி  விஷ யங்களைகே கிரகித்துக் கொண்டு  தவறு நடக்கும்  இடங்களைக்கண்டு  பிடித்து  குற்றங்களை   உடனுக்குடன்   களைந்து  எறிவார்.  யாரும் அவரை     ஏ மாற்றி விடஇயலாது.. 
  ஆழ்ந்த  சமயப்பற்றும்  திடமான கடவுள்  நம்பிக்கையும் என்றும் அவர் உள்ளத்தில்  கோயில் கொண்டு  இருந்தது.  விதியின்  வலிமையையும்  அறிந்தவர். அவர் தோல்விகளை கண்டு  அயரக் கூ டியவர் அல்ல . பெருஞ் சிக்கல்களை யும்  வழிய இன்னல்களையும்  சந்திக்கும் நே ரத்தில் தான் அவர் முழுப்பொலிவுடன்  திகழ்வார். எத்தனை இன்னல்கள் வந்த போதிலும்  அவர் முகம் வாட்டமடைந்ததைகே கண்டி லேன்.  அது  போன்ற  சமயங்களில்  வருவோ ர்களிடம்  ஏதும் நே ராதது போல இன்முகம் காட்டிப் பே சிடுவார்.

No comments:

Post a Comment