Wednesday, December 29, 2010

பயனையும் இன்னும் அவர்கள் எண்ணியிருக்கும் அறங்களின்பயனையும் தமிழ்நாடு விரைவில் எய்தும் என்பது உறுதியே. குறிப்பு: ச.இளமுருகன் அவர்கள் ருக்மிணி ஆலையில் பணியாற்றினார்கள். பண்டிதமணி அவர்களின் மகன் சுப்ரமணியன் அவர்கள் மேலாளர் . அத்தை மகளை திரு மணம் செய்த பிறகு தனது தந்தையை தன்னுடன் தங்கி உணவு உண்ண வேண்டினார். எதற்கு சிரமம் என தந்தை மறுக்க இளமுருகன் தனது மேலாளர் அவர்களிடம் வாய்மொழியாக கேட்டு க்கொண்டு தலைமறைவு ஆனார். தந்தையும் இளமுருகனுடன் சேர்ந்தார். மேலாளர் ஒத்துழைத்தார்கள்.

கலைத்தந்தை-பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்

பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் அவர்கள் தனது திருவாசகம்-திருச்சதகம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ள செய்தி. அறிவு, அன்பு முதலிய நற்குணங்களும் கடவுள் வழிபாடு ஒழுக்க முதலிய நற்செயல்களும் ஒருங்கு வாய்க்கப பெற்றவர் என் இனிய நண்பர் ஆ.தெற்கூர் திருவாளர் கருமுத்து தியாகராசச்செட்டியார். இவர்கள் நல்லூழ் வய த்தாலும் தம் முயற்சியாலும் மதுரை, கோயம்பத்தூர் சேலம் புதுக்கோட்டை முதலிய நகரங்களில் நூற்றல் நெய்தல் தொழில்களுக்கு உரிய பெரிய எந்திர சாலைகளை அமைத்து பல ஏழை மக்கள் பிழைப்பதற்கு வழியுண்டாக்கினார். அத்தொழில் பெருஞ் செல்வம் அடைந்தார்கள். இளம்பருவத்தே இலங்கையில் தமிழ் புலமை மிக்க சிற்கைலாசம்பிள்ளை அவர்களிடம் குறிஞ்சி பாட்டு சிலப்பதிகாரம் நூல்களை பயின்றார்கள். தமிழ் இலக்கிய சுவையில் ஈடுபாடும் அதன் வளர்ச்சியில் பேரார்வமும் உடையவர்கள். திருவாசகத்தையும் திருக்குறளையும் தம் கண் போல் போற்றி வருபவர்கள். சிறு பருவம் தொட்டு என்பால் பிறழாத அன்பும் மதிப்பும் உடையவர்கள். இவர்கள் பிறந்த ஊரில் ஒரு கல்வி நிலையம் நிறுவி யுள்ளார்கள். மேலும் தாம் பிறந்த ஊரில் ஒரு கல்வி நிலையம் நிறுவியுள்ளார். மலும் தம் வாழ்க்கைக்கு நல்லிடனாக அமைத்துக் கொண்ட மதுரை மாநகரில் கல்லூரிகள் காணும் வேட்கை மிகுந்து முயன்று வருகின்றார்கள். அம்முயற்சியின்

Tuesday, December 28, 2010

கலைஅன்னை சுழல் கோப்பை வழங்கினார்கள். ஏ.ஏஸ் .பிரகாசம் ஜெயா தொலைக்காட்சியில் குறிப்பிட்டார்கள். கருமுத்து தோற்றுவித்த ஆலைகளின் நுழைவாயிலில் வெண்கலத் தகடுகளால் ஆன யானை இருக்கும். பள பள வென்று வெங்கலம் மின்னும். காண்போரை வியக்க வைக்கும். அதை த தாண்டி நுழைந்தால் தோட்டக்காரன் சிலையினையும் இருமடங்கும் மகளிர் விளக்கேந்தி இருக்கும் பளிங்கு சிலையில் இருப்பதைக்காணலாம் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பே . விசுவநாதம் அவர்கள் இந்தி எதிர்ப்பு மாநாட்டினை திருச்சிராப்பள்ளியில் கூட்டினார்கள். கருமுத்து தியாகராசர் தமிழ் வாழ்க என தமிழ்க்கொடி ஏற்றினார்கள். முத்தமிழ் காவலர் விசுவநாதம் வாழ்க்கை வரலாற்றினை சந்தோசம் அவர்கள் தயாரிக்க முத்துராமன் இயக்கினார்கள்..

Monday, December 27, 2010

திரை உலகினில் ஜெமினி நிறுவனம் இரும்புத்திரை திரைப்படத்தினை மீனாட்சி ஆளை பரவையில்திரைப்படமாக்கியது. தி.மு.க. வை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா அவர்கள் தியாகராசர் பொறியியல் கல்லூரி கட்ட இலவசமாக இடத்தினை வழங்கிட ஆணையிட்டார்கள்.
புரட்சி தலைவர் பொன்மனசெம்மல் அவர்கள் தியாகராசர் கல்லூரிக்கு சுழற்கோப்பை ஒன்றை வழங்கினார்கள். ஆண்டு தோறும் கல்லூரிகள் இடையே நாடகப் போட்டியினை நடத்தி வெற்றி பெறும்நாடகக்குழுவிற்கு அச்சுழல் கோப்பையை வழங்க சொன்னார்கள்.பிரகாசம் எழுதிய மாண்டவன் மீண்டான் நாடகம் தியாகராசர் கல்லூரிக்கு சுழல் கோப்பையை பெற்றுத் தந்தது. சாலமன் பாப்பையா அவர்கள் தந்தையாகவு ம இளமுருகன் மகனாகவும் நடித்தனர்.
பஞ்சு கொள்முதல் வழக்கு பஞ்சு விலை பேரம் பற்றிய வழக்கு நூல்விலை கட்டுப்பாடு பற்றிய வழக்கு நூல்கட்டுகள் பறிமுதல் வழக்கு என மீனாட்சி ஆலையில் வழக்கறிஞர்கள் குழு அமைத்து நீதி மன்றங்களில் வெற்றி பெற்றார்.
கலைத்தந்தை க்கு கோவில் கட்டும் அளவிற்கு அகில இந்திய ஆலை முதலாளிகள் பயன்பெற்றனர். ஆயிரம் பிரச்னைகள் பற்றித்தான் என ஆனந்த விகடன் தனது மதுரை மாவட்ட மலரில் எழுபதில் குறிப்பிட்டு இருந்தது. குடும்பங்களில் சந்ததிகளிடம் மரபணுக்கள் வழியாக சில அபூர்வ பண்புகள் நீடித்து நிலவி வருவதாக நவீன விஞ்ஞான ம கூறுகின்றது. கருமுத்து தியாகராசரின் குணநலன்களை அவரது மகன் கருமுத்து கண்ணனிடம் காணலாம்.
விரித்த படியே கவிழ்த்து மேசை மீது வைத்தார். ஆனால் மீண்டும் பயன்படவில்லை இறக்கின்ற தருவாயில் கூட தமிழ்புலவர்களே அவரது நெஞ்சில் நிறைந்துள்ளார்கள். முன்னால் குடியரசுத் தலைவர்கள் வி.வி.கிரி வெங்கட்டராமன் ஆகியோர் அவரது மாளிகைக்கு பதவியில் இருந்த போது வருகை புரிந்து உள்ளார்கள். ஜெயப்பிரகாச நாராயணன் மீனாட்சி ஆலைக்கு வந்துள்ளார்கள். வருமான வரி இலாகாவினர் நிர்வாக இயக்குனர் சம்பளத்திற்கு வரிவிதித்த பொழுது வரிகட்டாமல் வழக்கிட்டு வென்றார். அகமதாபாத் ஜவுளிக் கழகம் மலர் ஒன்றினை கருமுத்துவிற்காகவெளியிட்டு கௌரவித்தது.
காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க. சொற்பொழி வாளர்களை பேரறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி நாவலர் நெடுஞ்செழியன் கவியரசு கண்ணதாசன் ஆகியோர்களை தியாகராசர் கலைகல்லூரியில் உரையாற்ற அழைத்தார். சென்னைக்கு வந்திருந்த உலகத்தமிழ் மாநாட்டில் கலந்து கொண்ட உள்நாடு வெளிநாடு தமிழ் அறிஞர்கட்கு விருந்தும் பரிசும் அளித்தார். திருக்குற்றாலத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை புறநானுற்றில் மோசி கீரனார் பாடிய மாசற விசித்த என த்தொடர் வரும் பாடல் எழுந்த சூழலை டாக்டர் மூ.வ. அவர்கள் எடுத்து கூறினார்கள். அதைப்பக்கம் பிறழாமல் வை. அதனை தனியே எழுதி வைக்கவேண்டும் என்று கருமுத்து கூற கலைஅன்னை அந்நூலை
மதராஸ் வானொலி நிலையத்தில் கல்வி பற்றி பேசினார். சித்த மருத்துவ மாநாட்டில் பேசினார். பறவை மீனாட்சி ஆலைத்தொழிலாளர் குடியிருப்பு தனது நீண்ட நாள் கனவு என்று திறப்பு விழாவில் உரையாற்றினார். நகரத்தார் சங்க ஆண்டு விழா வில் தமது சமூக முதுகன்னியரை தத்தம் உடன் பிறந்த சகோதரியாக பாவிக்க வேண்டும் என்றார். கல்கி கிருபானந்த வாரியாருடன் நட்புக் கொண்டிருந்தார்கள்.
பழமுதிர்சோலையில் முருகன் படை வீட்டினை மீண்டும் அமைக்க மேற்கொள்ள ப்பட்ட முயற்சிகளை கலைத்தந்தை வரவேற்றார்கள். அறநெறி அண்ணல் பொன்னம்பலம் தியாகராசன் அவர்களது கூட்டு முயற்சி . சிவன் ஆசாரி சண்முகசுந்தரம் மீயன்னசாம்பசிவனார் ஆகியோர் உடன் இருந்தனர்.
மதுரைத்திருவள்ளுவர் கழகத்தில் சிலப்பதிகாரம் பற்றிய சொற்பொழிவினை கந்தசாமிப்பிள்ளை அவ்வை சு.துரைசாமிப்பிள்ளை அறநெறி அண்ணல் முன்னிலையில் கலையன்னை சொற்பொழிவு ஆற்றினார்கள். திருவாசக ஆய்வு நூலை கலையன்னை வெளியிட்டார்கள். கம்பர் சமாதியிருக்கும் நாட்டரசங் கோட்டையில் இளங்கோவும் கம்பரும் என்கின்ற தலைப்பினில் சிலம்புஸ் செல்வர் ம.போ.சி. முன்னிலையில் கலையன்னை நிகழ்த்தினார்கள்.
பெரிய தொழில் அதிபர்களில் தியாகராசச்செட்டியார் ஒருவர் தான் தம் தொழிற்சாலைக்குள் வீடு கட்டி வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார்.தொல்காப்பியம் உள்பட பல நூல்கள் வெளிவர பொருள் உதவி செய்தார். இராஜாஜி எழுதிய திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பினை திருவள்ளுவர் கழகத்தில் வெளியிட்டார்கள்.
சொற்படி அவ்வை சு, துரைசாமிப் பிள்ளை அவர்களிடம் தமிழை கற்று அழகப்பா பல்கலைகழக துணைவேந்தர் ஆன கலையன்னை திருமதி இராதா தியாகராசன் அவர்கள் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு. கணவரின் வரலாற்றினை மனைவி எழுதுவது எளிதான காரியமல்ல. திருமதி இராதா தியாகராசன் அவர்கள் சுயசரிதையில் தனி சகாபதத்தினை ஏற்படுத்தி உள்ளார். ஆலை அரசர் கருமுத்து தியாகராசர் நூல் மூலம் எனலாம். புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் தியாகராசர் பொறியியல் கல்லூரியில் வெளியிட்டார்கள்.

Sunday, December 26, 2010

தமிழ்த்துறை தலைவர்களை தியாகராசர் கல்லூரி முதல்வர் ஆக்கினார்.மதுரையினை எத்திக்கில் இருந்து நுழைந்தாலும் அவரது தொழிற்சாலைகள் அல்லது கல்லூரிகள் நம்மை வரவேற்கும். மதுரையின் இன்றைய நிலை உருவாக காரணமானவர். தம் மக்களுக்கு தேவார நாயன்மார்களின் பெயர்களை இட்டார். சுந்தரம் மாணிக்கவாசகம் அவர்கள். கட்டிடக்கலையில் தனி இன்பமும் பாணியும் கண்டவர். தமிழ் பயில எளிமையான மொழி. திருமணத்திற்கு பிறகு கருமுத்து தியாகராசர்

தொலைவில் வரும் நபர் அணிந்திருக்கும் சட்டை வேட்டி இன்னின்ன நூலில் தயாரிக்கப்பட்டது என்று சொல்லும் ஆற்றல் பெற்றவரும் தனது தந்தைக்குப்பின்னர் தன்னை வளர்த்து ஆளாக்கிய அருணாசல செட்டியார் அவர்கள் மகன் தியாகராசன் அழகப்பன் மருமகன் சேதுராமன் ஆகியோர்க்கு தனது ஆலையில் உயர் பதவிகளை நன்றிக்கடனாக வழங்கினார்.

தேவிகுளம் பீர்மேடு எல்லைப்போராட்டத்தை சக்கரவர்த்தி இராசாசி ஜீடிநாயுடு பி .ட்டி .இராசன் ஆகியோர்களுடன் முன்னின்று போராடினார். தொழிலதிபர்களில் அவர் ஒருவரே இப்படி செயல்பட்டவர்.

மகாத்மா காந்தியடிகள் மதுரைக்கு வந்திருந்த போது தியாகராச செட்டியாரின் மேலமாசி வீதி வீட்டில் தங்கினார். அப்பொழுது அரை ஆடை அணிந்தார்கள். முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் அரசாணையிட்டு காதி கடை மாடியில் ஐம்பத்தொரு லட்சம் மதிப்பீட்டில் நினைவுச்சின்னம் அமைத்துள்ளார்கள். இப்பொழுதும் அங்கே காணலாம். நேதாஜி சுபாஷ் சந்திர போசினை தனது விருந்தினராக அழைத்து வந்தார். தனது மூத்த மனைவி விசாலாட்சி ஆச்சிக்கு அவரது பெயரில் நிறுவிய கலாசாலைக்கு பாரதப்பிரதமர் ஆசிய ஜோதி நேருவினை யும் பெருந்தலைவர் காமராசர் அவர்களையும் அழைத்தார்.
வழங்கி வாழுகின்ற மக்கள் இறந்தும் வாழுகின்றார்கள் . நல்ல வழியில் பொருளைத் தேடி சமயத்தொண்டு , கல்வித்தொண்டு ,கலைத்தொண்டு , கலைத்தொண்டு வங்கிகளைத்தொடங்கி பொருளாதாரத் தொண்டையும் ஆற்றினார். வாழ்நாளில் காசோலை வழங்கியதில்லை. வளரும் மேலை நாடுகளுக்கு ச செல்ல விரும்ப வில்லை. பட்டம் பதவிகளை விரும்பியது இல்லை. தனது அலுவலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பினார். தனது மகன் மாணிக்கவாசகம் செட்டியாரை ஜப்பானுக்கு அனுப்பி வைத்தார்கள். அரசின் மான்யம் பெற வளைந்து கொடுத்தது இல்லை.
வாங்கி பதினைந்து லட்சம் மதிப்புள்ள பங்குதாரர்களை மீனாட்சி ஆலைக்கு சேர்த்தார். தனது மூத்த மகளுக்கும் முதல் ஆலைக்கும் மீனாட்சி எனப் பெயரிட்டார்கள். பணம் பத்தாதகுடும்பத்தில் பத்தாவதாக பிறந்த கருமுத்து பதினெட்டு ஆலைகளை நிறுவி லாபம் ஈட்டி அறுபது லட்சம் கல்விக்காக வழங்கினார்.
தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாத்மா காந்தி இந்தியா திரும்பிய ஆண்டு இலங்கையில் இருந்து கருமுத்து இந்தியா திரும்பினார். வெள்ளையர் ஆட்சியில் காங்கிரஸ் இயக்கத்தில் ஒரு கால கட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக விளங்கி பாரதப்பெருந்தளைவரின் காமராசரின் அன்பிற்குரிய சகாவாக எனப் பழ நெடுமாறன் ஐயா அவர்கள் கூறுகின்றார்கள். ஹார்வி நிர்வாகம் தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு ஆலையை மூடிய சமயம் தொழிலாளர் தலைவர் வரதராசு நாயுடு அவர்கள் உதவியோடு ருபாய் ஐந்து லட்சம் மூலதனத்துடன் இருபது ஈக்கர் நிலத்தினை ஆண்டாள்புரத்தில்
அசைவ உணவு கேட்டு கிளர்ச்சி செய்த தமது கல்லூரி மாணவர்கட்கு திட்ட வட்டமாக வழங்க மறுத்தார்கள். அசைவ உணவை உண்பவர்களுக்கு தனது மாளிகையில் தங்க இடம் தர மாட்டார் என்கிறார். சிலம்பு செல்வர் . எப்போதும் தூய வல்லை ஆடை உடை உடுத்தி வந்தார். எண்பதுவயதிலும் அவருடைய உடற்கட்டு அனைவரையும் வியக்கஸ் செய்தது. ஒரு போதும் கூனிக் குறுகி அவர் இருந்ததில்லை. நிமிர்ந்த நெஞ்சினராய் இருந்தார். லிப்டுகளில் செல்ல விரும்பவில்லை. மாடிப்படிகளை ஏறிச்செல்லுவார். என விவரிக்கின்றார் சோமலே.
செட்டி கண்டதெல்லாம் வட்டி என நிலவும் வன்சொல்லை மாற்றி பஞ்சாலைகளை நிறுவி ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். இலங்கைக்கு பிழைக்க வரும் தமிழர்களின் உடலில் அடையாளமாக சூடு போடும் முறையைத்தடுத்து நிறுத்தினார். நகரத்தார் சமூகத்தில் திருமணங்களில் மணமகன் மணமகளுக்கு தாலி கட்டும் வழக்கம் கருமுத்து தியாகராசர் குடும்பம் செல்வாக்கு பெறும்முன்பு இல்லை என்கின்றார் திருமதி ராதா தியாகராசன் . தன்னுடன் படித்த தன்னை விடப் படித்த பி.தி.இராசன் அவர்கள் ஆயிரம் பிறை கண்ட விழாவினை தலைமையேற்றார். சைவ உணவை உட்கொள்வதெனபிடிவாதமாக இருந்தார்கள்.
ஏசாசிறப்பின் இசை விளங்க பெருங்குடி என்று இளங்கோவடிகளும் மானமிகு தருமத்தின் வழிவந்த ஊனமில் சீர்பெருவணிகர் என்று சேக்கிழாரும் சிறப்பாகப் பாடியுள்ள நகரத்தார் குலத்தில் ஆ.தெற்கூரில் முத்துக்கருப்பன் செட்டியார் - வினைதீர்த்தான் ஆச்சி தம்பதி யருக்குபத்தாவது பிள்ளையாக கருமுத்து தியாகராசர் பிறந்தார்.
ஆத்திக்காடு தெற்கூரில் திண்ணை ப பள்ளிக்கூடத்திலும் மதுரையில் சேதுபதி உயர்நிலைப்பள்ளியிலும் இலங்கையில் செயின்ட் தாமஸ் கல்லூரியிலும் படித்தார்கள். மார்னிங் லீடர் ஆங்கில நாளிதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்கள். சென்னை இராசதானியின் ஆளுநராக இருந்த பென்லாண்டு பிரபுவிற்கு இலங்கையில் நகரத்தார்குநேர்ந்த சிக்கல்களை குறித்து எழுதிய கடிதம் இன்றும் சென்னை எழும்பூரில் ஆவணக் காப்பகத்தில் பேணப்பட்டு வருகின்றது.

Saturday, December 25, 2010

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோயம்புத்தூர்ர் கருமுத்து தியாகராசர்

எழுதியவர் பஞ்சாலைக் கவிஞ்ர ச. இளமுருகன்
உலகெங்கிலும் வாழுகின்ற மறைந்த தொழிலதிபர்களிடம் உணர முடியாத மெச்சத்தகுந்த குணநலன்கள் பலவற்றினை கருமுத்து தியாகராசரிடம் காணலாம்.
தியாகராசர் பொறியியல் கல்லூரிபொன்விழா ஆண்டு விழாவில் சொற்பொழிவு ஆற்றிய முதல்வர் டாக்டர் கலைஞ் ர அவர்கள் சோனியா வழியில் மகளிர் நடக்க கே ட்டுக்கொண்டார். கருமுத்து தியாகராசர் மறைந்த பொழுது கலைஞர் அவர்கள் எதிர்க்கட்சி த தலைவர். தொழில் வளர்ச்சிக்கு மட்டுமல்ல தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டார் என்ற செய்தியினை தமிழ்நாடு இதழ் வெளியிட்டது.

Sunday, December 19, 2010

பேணும் முறைமையை ஒரு தன்மையான கலைமரபையே யாண்டும் என்றும் பின்பற்றும் அழகை யான் கண்டு மனதுள் போற்றி வந்ததுண்டு.

ஒரு திருவிளக்கு ஆயிரம் விளக்குகளை ஏற்றி வைக்கிறது. கலைத்தந்தையின் இப்பெருவாழ்வு இந்நாட்டில் ஆயிரம் ஆயிரம் தன்முயற்சிசெய்பவர்களை

உருவாகும் என நெஞ்சம் நிறைந்து போற்றுகின்றேன்.

அமர்ந்திருந்தனர். என் உரைநடையைப்படித்த கலைத்தந்தை அதிலே இருந்த ஒரே ஒரு வடசொல் கலப்பையும் கடிந்துரைத்தார், மறைமலையடிகள் தவிர மற்றவர்களுக்கு சிறந்த உரைநடை எழுத த தெரியவில்லை என அவர் திட்ட வட்டமாக விவரித்தார். சரிதான் இனி நமக்கு வேலை கிடைக்காது என அஞ்சி நின்றேன். பரிந்துரைகள் பல அரசியலிலிருந்தும் உயர்நிலையில் இருந்தும் தம்மை அழுத்திகொண்டிருந்த போதிலும் அவற்றிற்காக சிறிதும் விட்டுக் கொடுக்காது அவ்வேலையை கலைத்தந்தை அன்று எனக்கு அளித்தார். அன்று முதல் அப்பெரியவருடைய கட்டுதிட்டமும் வரன் முறையுமாய் அமைந்த வாழ்வை ஒரு சொற்பொழிவு என்றால் பலநாள் ஆயத்தம் செய்து மொழி நலம்
என் நூல்களை கலைத்தந்தை பார்வையிட்டார். இலக்கியத்தில் இன்பச்சுவை என்ற நூலின் முதற்கட்டுரை முழுவதையும் படித்தார். தாலாட்டு என்ற எனது தொகுப்பு நூலின் முன்னுரையைப்படித்தார். யான் எழுதிய தாலாட்டுப்பாடலில் ஈடுபட்டு மௌனமாகப்படித்தார். குறிஞ்சிப் பாட்டு திறனாய்வு என்ற நூலைபார்வையிட்ட அவர் அப்பாட்டினை ஒப்பிக்கும் படி ஆணையிட்டார்.
அன்னை வாழி வேண்டான் என்ற தொடக்க சொற்களை கூறவே அன்று அந்நிலையில் யான் தடுமாறினேன். அவரொஅ நூற்றைம்பது அடிகள் வரை அப்பாட்டினை ஒப்பித்து கொண்டே போனார், உரைவேந்தர் அவ்வை சு. துரைசாமிப்பிள்ளை , மொழிக்காவலர் சி.இலக்குவனார் எல்லோரும் வியந்த படி

கலைத்தந்தை _ தமிழண்ணல்

கலைத்தந்தை கருமுத்து தியாகராசரின் கலைக்கோயிலாம் தியாகராசர் கலை க்கல்லூரியில் பத்தாண்டுகள் பணியாற்றும்போது அடிக்கடி ஒன்றை நினைப்பதுண்டு.
நாம் நல்ல நல்ல நூல்களைத் தேடிப் படிக்கின்றோம் . அதைப்போல நல்ல திறமை வாய்ந்த மனிதர்களையும் படிக்கவேண்டும். நூல்களை ப படிப்பது போலவே மனிதர்களையும் படிப்பதும் மேலானது. மிகவும் பயனுள்ளது. கலைத்தந்தையின் வாழ்க்கை அவ்வாறு படிக்கத்தகுந்த ஒன்று என்பதே அந்நினைவாகும்.
கலைத்தந்தை அவர்களால் அன்று ஒருநாள் காலையிலும் மாலையிலும் இருமுறை நேர்முகப்போட்டி செய்யப்பெற்று தியாகராசர் கல்லூரியில் விரிவுரையாளர் ஆனவன் யான். எனக்கென்று எவ்விதப்பரிந்துரையும் இல்லை.
ஆயிற்றே என்று கூ றினாராம். இது போன்ற காரணங்களால் நமது செட்டியார் அவர்கள் வெளிநாடு சென்றுவர விரும்பியது இல்லை போலும். முப்பத்தி இரண்டு ஆண்டுகள் ஸ்ரீ செட்டியார் அவர்கள் போன்ற மேதையிடம் நெருங்கிப் பழகி அவருடன் மாதக்கணக்கில் நம் நாட்டிலேயே சேர்ந்து பிரயாணம் செய்து முழுமையாக அவரை அறிந்து கொள்ளும் வாய்ப்பினையும் பாக்கியத்தையும் பெற்றதை எண்ணி எண்ணி பெருமிதம் கொள்கிறேன். அந்த இனிய அரியமேதை நம்மிடையே இருந்து மறைந்து விட்ட போதிலும் அவர் விட்டு சென்ற பல அரிய நினைவுசின்னங்கள் வாயிலாக அவர் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
வெளிநாடுகளில் எது சைவ உணவு எது அசைவ உணவு என்பதை அவர்களுக்கு புரிய வைப்பதே மிக்ஸ் சிரமமான காரியம், அவர்களின் எண்ணப்படி முட்டை சைவ உணவாகும். நம் நாட்டவர் ஒருவர் வெளிநாடு சென்று அங்கு இருந்த விடுதிப்பணி யாரிடம் நான் சுத்த சைவம் தாகத்திற்கு அருந்த என்ன கொடுக்க முடியும் என்று விசாரித்தார். அதற்கு அவர் பிராந்தி அல்லது விஸ்கி சோடா சகிதம் கொணர்வதாக அங்குள்ள வழக்கப்படி கூறினார். அதை மறுத்து சே சே இதை எல்லாம் நாம் சாப்பிட மாட்டோம் சுத்த பால் சாப்பிடுகிறேன் என்று சொன்னதற்கு அந்த பணியாள்அடடா பால் மாட்டு ரத்தத்தில் இருந்து வரும் அசல் அசைவ பானம் ஆச்சே விஸ்கி பிராந்தி அவ்வாறின்றி சுத்த சைவ பானம்
அன்னாரின் தாராள குணத்திற்கு இன்னுமொரு உதாரணமும் சொல்வேன் . எனக்கு எகிப்தில் இருந்து அழைப்பு வந்திருந்தது. அதை செட்டியார் அவர்களிடம் காட்டி அவருடைய அபிப்ராயம் தெரிய விரும்பினேன். அவர்கள் கூறினார்கள். நீயும் தம்பி மாணிக்க வாசகமும் இருவருமாக போய் வாருங்கள் என்றார். அதன் பயனாக எகிப்து நாடு மட்டுமின்றி கிழக்கு ஆப்பிரிக்கா சூடான் ஐரோப்பாவில் யாவற்று நாடுகள் நாங்கள் இருவரும் நான்கு மாதங்கள் சுற்றுப்பயணம் முடித்து கொண்டு திரும்பினோம், அதே போல் நான் தனியாக மற்றுமொருமுறை மேலை நாட்டு வழியாக அமெரிக்காஹவாய் ஜப்பான் ஹாங்காங் சிங்கப்பூர் மலேயா பினாங்கு சென்று உலகத்தையே சுற்றி வரும் நல்வாய்ப்பு எனக்கு கிட்டியதென்றால் அவருடைய அளவிட முடியாத தாராள மனமும் தயாள சுபாவத்தையும் நிருபிக்கின்றது அல்லவா.

Saturday, December 18, 2010

இல்லவே இல்லை ஒரு கரண்டி பெட்ரோலில் பல மைல்கள் ஓடும் என்றான் சொந்தக்காரன். அதற்கு வாங்க வந்தவன் தேனீர் கரண்டியா அல்லது டேபிள் கரண்டியா என்று கேட்டானாம். ஆனால் இப்பொழுது நான் சிக்கனம் ஆனவனாக இல்லை. ஏனெனில் செட்டியார் அவர்கள் தர்மத்திற்கும் கல்விக்கும் அள்ளி அள்ளி கொடுத்தது போல் அவரிடம் வேலை பார்த்த யாவர்க்கும் தாராளமாக வாரிக் கொடுத்தார் என்பதற்கு இதுவே சான்றாகும். முன்பெல்லாம் எனக்கு கிடைத்த ஊதியத்தில் வேறுவிதமாக இருந்திருக்க முடியவில்லை. ஆனால் இப்பொழுது இருக்கவும் முடிகிறது.
தொழிலாளர்கள் மீது மிக்க ஆர்வம் கொண்டவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ஸ்ரீ கிரி அவர்கள் செட்டியாரவர்களின் உற்ற நண்பராவார். அவரைப்போன்ற பெரும் தலைவர்களும் நாட்டின் பிதாவாகிய மகாத்மா காந்தியும் அவரில்லத்தில் வந்து தங்கியுள்ளார்கள். செட்டியார் அவர்களின் தாராள மனப்பான்மையை பாராட்டாமல் இருக்கமுடியாது. நான் சிறு வயதினன் ஆக
இருந்த பொழுது என்னை சிக்கனக்காரன் என்று கேலி செய்வார்கள். உதாரணத்திற்கு மேலை நாட்டில் மோட்டார் கார் வாங்கும் நோக்குடன் கஞ்சன் ஒருவன் பழைய காரை பார்வையிட்டு கொண்டிருந்தான் . அப்பொழுது அவன் இந்த கார் அதிக பெட் ரோல் குடிக்குமா என்று வினவினான்.

சீரிய தெய்வப்பக்தியும் சுத்த சைவ உணவும் மது அருந்தாமையும் விரதமாக பூண்டு ஒழுகியவர் . வெளிநாட்டவர் வந்து அவருடன் தங்கும் பொழுதும் விருந்துகளில் சைவ இனிய எளிய அமுது உணவை படைத்தது உபசரிப்பார். அவர்களும் அப்புதுமையான உணவை விரும்பி உண்பார்கள். பொருள் செறிந்த உரையாடல்களில் அவர்களின் மது அருந்தும் பழக்கத்தையும் கூட அச்சுவாரச்யத்தில் மறந்து விடுவார்கள். அவர் மனதிற்கு நியாயமெனத தோன்றி விட்டால் அச்சமின்றி அரசாங்கம் என்றாலும் சட்ட ரீதியாக எதிர்த்து போராடி வெற்றியும் கொள்வார்.

ஸ்ரீ செட்டியார் அவர்கள் என்றும் யாரிடமும் மிக்க கோபத்துடன்அதிர்ந்து பேசும் சுபாவம் அவரிடம் ஒருபொழுதும் காணமுடியாது. யாருடனும் நட்பு பூண்டு
அன்புடன் பேசிப்பழக்கப்பட்டவர் . நம் போன்றவர்கள் அவரைக்கண்டு பேச அவரில்லத்திற்கு சென்றால் முதலில் உட்காரச்சொல்லிவிட்டுத்தான் மற்ற யாவையும் பேச ஆரம்பிப்பார். மிகவும் எளிமையான அடக்கமான வாழ்க்கையை மேற்கொண்டவர் . ஆடைகள் முதலான நடை உடை பாவனைகளிலே இது நன்கு புலனாகும்.
தொழிலாளர்களிடையே கொந்தளிப்பான நிலை ஏற்பட்டிருந்தாலும் அபபதட்டமான நிலையிலும் சற்றும் மனக்கலக்கமும நிதானமும் இழந்து விடாமல் அச்சமின்றி ஆலைக்குள் அவர்கள் இருக்குமிடத்திற்கே நேரிடையாக சென்று விடுவார்கள். அவ்வித சந்தர்ப்பத்திலும் இவரைக்கண்டவுடன் யாவரும் அடங்கி ஒடுங்கி ஒதுங்கி பயபக்தியுடன் விலகி நின்று விடுவார்கள். தவிரவும் அவரிடம் கடுமையாக பேசவும் அஞ்சுவார்கள் என்றால் அப்பேர்ப்பட்ட பெற்றோர் பாசத்தை அவர்களிடையே வளர்த்து விட்டிருந்தார்.

எனது சிந்தனையில்....

தமக்கென்று வாழாமல் மற்ற யாவற்ற மக்களின் நலன்களுக்காக வாழ்ந்த உத்தமர். அவருடைய தர்ம தயாளகுணங்களினால் பல்லாயிரகணக்கான ஏழை எளிய மத்தியதரக்குடும்பங்கள் ஆதரவு பெற்று மேம்பட்டிருக்கிறார்கள் . அதே போல் அவர்கள் இன்றும் அவர் அளித்த ஆதரவுடன் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். செட்டியார் அவர்கள் தெளிந்த சிந்தனையையும் நீதியையும் , நம்பிக்கை நிறைந்த தைரியத்தையும் , யாவரையும் வசீகரிக்கும் சுபாவத்தையும் கைக்கொண்டு நிதானத்துடன் செயல்படும் திறன் படைத்தவர் ஆவார்.

எனது சிந்தனையில் ஸ்ரீ கருமுத்து தியாகராஜன் செட்டியார் சி.வே.ரெங்காச்சாரி

நாட்டு மேதைகள் சிலரின் உயரிய உள்ளக்கிடக்கையில் உதயமாகும் சின்னஞ்
சிறு மின்பொறி போன்று ஜீவாணுவாக தோற்றமேடுக்கும் சீரிய் எண்ணங்களே நாளடைவில் கருவென வளர்ந்து உருவெடுத்து நுட்ப யந்திரமய தொழிற்புரட்சியை ஏற்படுத்தும் சாதனையாக அமைகின்றது.
அத்தகைய மேதைகள் சிலரில் ஒருவரே தவப்புதல்வரான ஸ்ரீ கருமுத்து தியாகராஜன் செட்டியாராவார்கள். அன்னாருடைய தொழில் நுட்ப ஆர்வமும் ஊக்கமுமே பெருங்கொண்ட நூற்பு ஆலைகளையும்சர்க்கரை ஆலைகளையும் நஷ்டஈட்டு காப்பு நிலையம் , வங்கி செய்தித்தாள் பிரசுரம் மற்றும் பொறியியல் கலைக்கல்லூரிகள் நமக்கு ஈந்து தந்துள்ளது.

Thursday, November 11, 2010

முத்தமிழ்க்காவலர் நினைவு படங்கள்












செம்மொழி மாநாடு கட்டுரை

KARUMUTTU THIAGARAJAR
KOVAI, THE COTTON MILL POET- S.ELAMURGAN (IN TAMIL)
Paper .I.D. No.0981 submitted Ulaga thamizh chemmozhi Manadu Coimbatore
PAZHANI EZHILMAARAN (IN ENGLISH)
Typed by Thirumathi Dhanalakshmi Shanmugasundaram .
The Excellent character, not seen among the mill owners gone by or living industrialists in the world, we can see in Karumuttu Thiagarajar who the greatness and eminence of the family into which, was born to excel it further.

The lineage praised, to have endowed with prominence by ILANGO ADIGAL and lauded, to have come as exceptional gift from dignified hereditariness by Sekkizhaar, to which he belonged.

He had his education in Madurai Sethupathi high school with P.T. Rajan and in Saint Thomas College, Ceylon
Tmt. Radha Thiagarajan recollected that if marriage would take place in nagarathar society no practice of wearing marriage badge round the neck of the wife by the husband before the family of Karumuttu Thiagarajar got Influence.

As it is a simple language to kearn, after marriage, according to the wishes of Karumuttu Thiagarajar Radha Thiagarajan, from Avvai Duraisamy a great scholar, learned Tamil fervently, submitted Her thesis on “Tiruvasaganthil Aruliyal and as a result she became the vice chancellor of Alagappa university.

When she took charge as one of the trustees of Palani Subramania Swamy Tirukoil, in all possible ways she extended her helping hand to the workers so as to please them in getting favourable chances.

As she was interested in feminism used her position of moral superiority for women to stand erect in their thoughts and deeds and became a pioneer to all women in this state.

K.A.P. Viswanathan a genius, appreciated by all Tamil- Lovers, once said that even though some people ceased to living. That saying has been proved in the life of Karumuttu Thiagarajar who has got hearts of grateful persons as golden throne.

In the conference convened for opposition to Hindi first of all Karumuttu Thiagarajar, hoisted Tamil Flag and Roared Courageously inspiring gathering.

In Ceylon as the leader of workers of Tamil Race and Sub- Editor of “Morning Star” made vigorous efforts under difficulties for 7 years and overcame the problem. (That was pushing to heat –system.)

In the year 1916, a letter regarding the problem faced by Nagarather in Ceylon he wrote to the then governor of Madras presidency is being preserved yet in Madras Egmore govt record office.

The word “Whatever chetty sees is for interest” was change and his family was turned towards import and export, commerce, Javuli and Industrial Dept., with instruction that his family not to involve in the business of interest.

In the year1940, Subash Chandra Bose as his guest came to Madurai. He was in astonishment seeing the books gone through by Karumuttu Thiagarajar kept arranged beautifully as in library. Also, notes he wrote in the books then and there would be useful and insiring, he noticed.

He, in the conference of siddha practice of medicine on 29.9.57 and on radio on 7.11.49 delivered speech about education.

In 15.9.57 in the function of Paravai Meenakshi mill workers colony disclosed his dream, being the leader of workers in Ceylon that the workers should live in their own houses with pleasure, came to true.

In the anniversary of Nagarathar sangam held on28.6.1962 in Madurai he opened his mind that if every one world treat the unmarried girl deemed to have pertaine to his respective temple, as his sister there the marriage problems of old maiden would come to an end.

As he had taken to following the couplets of Tiruvalluvar in his life, knowing what good reputation is, what rectitude is and what rectitude is and what the delight of giving lived his life cherishing “ Faultless earning and generous sharing” to his last day.

On realization “The fruit of wealth is to give” (Puranaanuru-180) and the words of S.R. Thomas brown, “He is rich who hath enough to be charitable” he had made financial help to bring out many books including Tholkaappiyam- English translation rendered by Dr. C. Ilakkuvanar, To Chennai Tamil Music Academy, Madurai Tiruvalluvar Kazhagam, Karaikudi Kamban Kazhagam Tenkasi Tiruvalluvar Kazhakam, Mahopathyaya U.V. Saminatha Iyer Nilayam in Chennai and other hundreds of sangam without bringing to the notice of public on love of Tamil donated liberally. He has offered rewards to 49 Tamil Scholars and Thinkers with feasts.

By his effort Madurai Corporation was refined, pertaining to the present times. He had no intention to fly to the developed countries abroad. No respect on honor he liked. He had great interest in music and paintings. He showed his fervor on horse ride. He with lofty thoughts moved forward.

Above all these qualities he must be identified that he was a designer of buildings. The buildings he raised in Madurai will speak of his art of designing buildings.

Avoiding lifts he passed steps of high buildings. A separate style in wearing dress he adapted. The Education only would be a virtue, he was confident. Unlike other mill – owners, Karumuttu Thiagarajar lived in the house built in his mill- area.

He did not even to dream to avail the govt’s concession in any way.

Before naming to Madras state as Tamil Nadu he run a daily by name “Tamil Nadu” and brought to use the words “ Perundhu” and “Thiraiarangam” etc.,

Being a lover of Tamil, a unique classical language of the world, that had requisite qualities accepted by the great researchers on study, his enthusiasm and energetic force of character have made many youths as scholars poets and writers in pure Tamil for the goodness of society.

Perarignar Anna. DR.Kalaignar Karunanidhi Naavalar, Nedunchedzhian and poet Kannadasan were invited to address among the students in his colleges. He was much pleased Chakravarthi Rajagopala Achariyar asked him to release Tirukural English translation through Madurai Tiruvalluvar Kazhagam.

Inspite of his having thousands of complications regarding own institutions he worried about the difficult situations of all India that in need to be resolved. Tmt. Radha Thiagarajan had remembered that the above points in Ananda vikatan issue dated: 27.9.70 have been published.

For his first mill and his elder daughter was named after “Meenakshi” The names of Sundarar who sang Thevaram amd Manickavasagar who sang Thiruvasakam were given to his sons.

Karumuttu Thiagarajar was a man of richness not only in valuable possessions but also in the culture, moral codes and truths in philosophy by systematic reasoning of Tamil of great age.
What a shock Tamilians had when they landed in Ceylon there was a horrible. Custom of branding the coolies as cattle were. Karumuttu Chettiar strongly opposed the branding system. He succeeded in his attempt. It was remarkable coincidence that Gandhiji and kalaithnathai returned their Home land in the same year 1916. When Devikulam Beermedu border dispute arised Karumuttu represented
Tamilnadu along with C.Rajagopalachariar. P.T. Rajan and G.D.Naidu in one sitting Other than him are politicians.

.. Karumuttu Thiagarajar was strong vegetarian. He denated liberally
for vegetarian Conference and lead it at Chennai. While the students of Thiagarajar college of Engineering agitated demanding non vegetarian food even though the department of technical education supported them Karumuttu refused to offer nonvegetarian food.
Karumuttu Thiagarajan chettiar always wore white shirt and dhoty. He never used lift.
During British regime he was the secretary of the Tamilnadu congress committee.
A&F Harvey management laid off all the workers Karumuttu utilized them properly to start Meenakshi Mills with the support of Thiru. Varadarajulu naidu.
In the year1921 at West Ponnagaram he hired a Bungalow and that time he was having ready cash what he brought from Srilanka that was
Only5lacs. He was able to purchase 20 acres of land at Andalpurm. He collected shares for 15 lacs. He started 16 mills. During 1956 he remitted 60 lacs and started Thiagarajar college of Engineering. Golden jubilee of the college celebrated on 29.1.2007. Kalaignar Chief minister of Tamilnadu in his speech requested the girl Students to follow the path of Mrs, Sonia Gandhi.
Dr.J.Jeyalalitha Chief minister of Tamilnadu released The King Of Textiles written by Mrs. Radha Thiagarajan on 7.3.1994. Dr.M.G.R. chief minister of Tamilnadu appointed Mrs. Radha Thiagarajan as Trustee of Arulmigu Palani Andavar K Thirukkoil Palani.
Peraringar C.N.Annadurai granted the free land at Tirupparankundram to
built TCE.
Thus the Dravidan parties supported Karumuttu family and honoured them.

Finally, there was an important event that we cannot forget was taken place in the house of Karumuttu Thiagarajar. It wearing the dress of poor by Mahatama Gandhi, father of our nation, made excite among the followers.

Let the workers and Tamil lovers.

Think of his outstanding achievements.

Long live his name!

Wednesday, August 18, 2010

கருமுத்து thiagarajar

த்மிழன் தமிழனாக வாழவேண்டும். அவன் பிற மொழி கலவாமல் பேச‌
வேண்டும்.
அவனை அழைத்து வந்து மொழியறிவு ஊட்டிவிட்டு பேசடா என்று பேசு என்று பேச வைத்துப் பார்த்திருப்பேன். பஞ்சாலைக்கவிஞர்.
தந்தை பெரியாரும்,மூதறிஞர் இராஜகோபாலச்சாரியாரும், அண்ணல் காந்தியாரும்,இராமாநுஜரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உரிமை கேட்டு
போராடத் தேர்ந்தெடுத்த இடம் கோயில்கள் தானே! பஞசாலைக்கவிஞர்.
மலையாள மொழியைத்தாய்மொழியாகக்கொண்ட திருமதி இராதா தியாகராசன்
அவர்கள் திருமணத்திற்குப் பிறகு தமிழ்ப்பற்றாளர் கருமுத்து தியாகராசர்
சொற்படி ஓளவை துரைசாமிப் பிள்ளையவர்களிடம் தமிழ் கற்று திருவாசக ஆய்வுக்கட்டுரை எழுதி முனைவர் பட்டம் பெற்று அழகப்பா பல்கலைக்
கழக துணைவேந்தரானார். தமிழ் மொழி பயில எளிமையானது
என்பதனைஉலகிற்கு எடுத்துக்காட்ட இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடுகின்றேன்.
பஞ்சாலைக்கவிஞர்.த‌மிழ‌ன் என்றொரு இன‌முண்டு த‌னியே அவ‌ர்க்கு ஒரு குண‌முண்டு. தாய்மொழிப்ப‌ற்று த‌மிழ‌னிட‌ம் அள‌வுக்கு அதிக‌மாக‌ உண்டு என்ப‌த‌னை ந்ன்கு முத‌ன்முத‌லாக‌ எடைபோட்டு த‌ன‌து அர‌சிய‌லில் மொழியினைக் க‌ருவியாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்தி திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழ‌க‌த்தினை ஆளும் க‌ட்சியாக‌ மாற்றிய‌வ‌ர் பேர‌றிஞ‌ர் அண்ணாத்துரை அவ‌ர்க‌ள். தொழில் அதிப‌ர்க‌ளுள் க‌ருமுத்து தியாக‌ராச‌ர் ஒருவ‌ரே த‌மிழ்க்கொடி ஏற்றிய‌வ‌ர் ப‌ஞசாலைக்க‌விஞ‌ர்.
ஆலை அரசரின் சமயத்தொண்டு
ஆலை அரசரின் சமயத்தொண்டு பேராசிரியர் சி.எஸ்.சூரியமூர்த்தி
அமெரிக்க‌ ம‌கா க‌விஞ‌ர் H.W.லாங்பெல்லோ ஒரு பிர‌ப‌ல‌மான‌ க‌விதையில் சான்றோர்க‌ள‌து வாழ்வு ந‌ம்மைப்ப‌ண்ப‌டுத்தும் வ‌ழிகாட்டியாகும் என்ப‌தை
"lives of Great men all remind us we can make our lives sublime"

என்று அழ‌காக‌வும் அழுத்த‌மாக‌வும் கூறியுல்லார். இம்ம‌துரையில் த‌ம் திட‌மான‌ தெய்வ‌ந‌ம்பிக்கையாலும், அய‌ர்ர‌த‌ உழைப்பாலும், வ‌ற்றாத‌ கொடைத்
த‌ன்மையாலும் உய‌ர்ந்த‌ மாம‌னித‌ர் க‌லைத்த‌ந்தை. ஆலை அர‌ச‌ர் க‌ருமுத்து தியாக‌ராச‌ர் வாழ்விலொளிர்ந்த‌ ப‌ண்புக‌ள் ப‌ல‌. அவ‌ற்றில் ஆணிமுத்தாக‌ மிளிரும் அன்னார‌து ச‌ம‌யககொட்பாடுக‌ளையும் அவ‌ற்றைச் சார்ந்து அவ‌ர்க‌ள் ஆற்றிய‌ தொண்டினையும் ஆலை அர‌ச‌ர் க‌ருமுத்து தியாக‌ராச‌ர் என்ற நூல் வ‌ழி சார்ந்து ந‌ம‌க்கெல்லாம் வாழ்விய‌ல் வ‌ழிகாட்டி விருந்தாக‌ அளிக்க‌ உள்ளேன். சமயமும் தொழிலும். ஆலை அரசர் அவர்கள் சமயத்தையும் தொழிலையும் இருகண்களாகவும் நாணயத்தின் இரு பக்கங்களாகவும் கருதினார்கள். தம் வழ்க்கையில் பெற்ற வெற்றிகளுக்கும் உயர்வுகளுக்கும் மூலகாரணம். இறைவனே என்பது
கலைத்தந்தையின் உள்ளத்தில் நின்ற நம்பிக்கை ஆகும். அவனன்றி ஓர்
அணுவும் அசையாது என அடிக்கடி உளம் நெகிழக் கூறுவார்களாம். அதனால் வாழ்க்கையில் வெற்றியையும் தோல்வியையும் ச‌ம‌மாக‌க் காணும் ஓடும் செம்பொன்னும் ஒக்க‌ நோக்கும் ப‌க்குவ‌ நிலையை அடைந்தார்க‌ள். தேறும் வ‌கை நீ திகைப்புல‌ம் நீ தீமை ந‌ன்மை முழுதும் நீ என்ற‌ திருவாச‌க‌த்தொட‌ரை அடீக‌டி கூறுவார்க‌ளாம். இந்த‌ ச‌ம‌ய‌ உழைப்பு இருந்த‌தால் க‌லைத்த‌ந்தை தொழிலில் ஏற்ப‌ட்ட‌ ப‌ல‌வ‌கைத்துன்ப‌ங்க‌ளையும் சோத‌னைக‌ளையும் வென்று அமைதியாக‌ இருக்கும் செம்மாந்த‌ நிலை பெற்றார். க‌லைத்த‌ந்தை ஒரு ச‌ம‌ய‌ ஆசிரிய‌ரோ, ஆச்சாரியாரோ இல்லை. ஆனால் ச‌ம‌ய‌ உண‌ர்வை தொழிலிய‌லின் அடித்த‌ள‌மாக‌ அமைத்துக்கொண்டார். நேர்மையான‌ பொருளீட்டாலும், தொழிலாள‌ர்க‌ளின் ந‌ல‌ன்க‌ளைப்பேணுத‌லும் இந்த‌ உண‌ர்வால் வெளிப்ப‌ட்ட‌ன‌. செய்யும் தொழிலையே தெய்வமாக‌க் கொண்ட‌ பார‌தீய‌ ச‌ம‌ய‌வாதியாக‌க் க‌லைத்த‌ந்தை வாழ்ந்தார்க‌ள்.
கோவில் திருப்பணிகள். கலைத்தந்தையாரின் குலபெயரான செட்டி என்ற சொல் முருகனையும் குறிப்பதால், அவர்கள் சிறந்த முருக பக்தராகத் திகழ்ந்தார்கள். ஆலை அரசர் தம் சகோதரர்களுடன் இணைந்து சிக்கல் சிங்காரவேலன் கோயிலுக்கு பெரும் பொருட்செலவில் சிறப்பான திருப்பணிகள் செய்தார்கள். அக்கோவிலின் பாரம்பரிய அறங்காவலராகவும் தொண்டு செய்தார்கள். தங்கள் குலக்கோயிலாம்
மாத்தூர் கோயிலிற்குத் தங்கள் பாரம்பரிய மரபுப்படி பலரிடம் பணவசூல் செய்து திருப்பணி செய்து பலருக்கும் அந்தப்புண்ணியம் கிடைக்க வழி வகுத்தார்கள். மேலும் மத்ரை பழங்காநத்தம் மக்கள் வழிபட்ட ராவுத்தராயர் சுவாமி கோவிலுக்குத்தம் ஆலை நிலத்தின் ஒரு பகுதியை விட்டுக்கொடுத்தார்கள். சைவ சமயப்பற்று. தமக்கு இறைவன் இயல்பாகக் காட்டிய வழியான சைவ சித்தாந்தசமயத்தைப் பெரிதும் போற்றி ஈடுபட்டார்கள். அவர்களின் வாக்குப்படி சைவ சமயம் உலகச் சமயங்களில் மிக்க பழமையும் சிறப்பும் வாய்ந்தது. அறிவியல் ஆராய்ச்சிக்கு அசைவின்றி ந்ற்கும் ஆற்றல் மிக்கது. எச்சமயத்தையும் தன்னுள் அடக்கிக்கொள்ளும் இயல்பும் எற்றமும் உடையது என்பதாகும். மனம் கரைத்து மலம் கெடுக்கும் திருவாசக நூலைதம் வழிபாட்டு நூலாகக் கொண்டார்கள். நூல் பூராவும் அவர்களுக்கு மனப்பாடமாம். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கும்படி திருவாசகத்தை அவர்கள் காலையில் தினமும் ஓதும் முறையையே வழிபாடாகக்கொன்டார்கள். அறிஞர்களைக்கண்டபோதெல்லம் ந்வில்தொறும் நூல் நயம் போல அதன் பெருமைகளைக் கலந்துரையாடல் செய்வார்களாம். இந்நூலின் ஆழமான ஈடுபாட்டினால் தம் திருமகனார் ஒருவுருக்கு மாணிக்கவாசகம் என்றே திருப்பெயர் இட்டார்கள். கண்ணப்ப‌ நாயனாரின் அன்பு வழிபாட்டை மிகப்போஓற்றியவர்களாம். அதன் தாக்கத்தால் தன் கடைசித் தவபுதல்வருக்குக் கண்ணன் என்ற பெயர் அமைத்தார்கள். நோன்பின் பெருமையை மிக உணர்ந்தவர்கள் கலைத்தந்தை செல்வர்க்கே நோன்பு மிக அவசியம் என்பதை வள்ளூவர், இலர் பலராகிய கார‌ணம் நோற்பார் சிலர் நோவாதவர் என்று சிறப்பாகக் காட்டியுள்ளார்கள். ஆலை அரசர் அவர்கள் வழ்நாள் முழுதும் சோமவார திங்கள் கிழமை உண்ணாநோன்பை மேற்கொண்டார்கள்."One should die gracefullய்" என்று ஒரு மகாகவிஞன் குறிப்பிட்டார். கலைத்தந்தை அவர்கள் சமய உணர்விலேயே ஆழ்ந்து இருந்ததால் தூய வாழ்வு வாழ்ந்ததால், அவர்கள் திருவாசகத்தைபாடிக்கொண்டே எவ்வாதனையும் இன்றிப் பரந்தாமன் பாதம் பணிந்தார்கள் என நூலாசிரியரும் கலைத்தந்தையின் வாழ்க்கைத் துணைவியுமான முனைவர் திருமதி இராதா தியாகராசன் குறிப்பிட்டிருப்பது நம்மையே புல்லரிக்கச் செய்கின்றது. ஆலைஅரசர் பற்றிய நுலிலும் திருவாசகச் சொற்களைப் பொருத்தமான இடங்களில்
எல்லாம் அமைந்திருப்பது கலைதந்தையின் புகழுக்கு மேலும்மெருகு ஊட்டுவதாகா அமைந்துள்ளதுசமயப்பொறையுடைமை.
ஆலை அர‌ச‌ர் அவ‌ர்க‌ள் சைவ‌ ச‌ம‌ய‌ப்ப‌ற்றுடைய‌வ‌ராக‌ இருந்தாலும், வேற்று ச‌ம‌ய‌ங்க‌ளை மிக‌வும் ம‌தித்தார்க‌ள். unity in diversity" என்ற‌ கொள்கைக்கேற்ப‌ வேற்றுமையில் ஒற்றுமை க‌ண்டார்க‌ள். அண்ணாமலைப் பல்கலை கழகத்தில் நிகழ்த்திய பட்டமளிப்பு விழாவில் கீழ்க்கண்டவாறு தம் கருத்துகளை 1960 ல் வெளியிட்டார்கள். continuance of individual religious practices, of prayers and meditations moral instruction of a general nature should find a place in our schools and colleges and also in our universities. It should not be difficult for seperate religious practices of the different faiths of our land to be permitted in the cosmopolitan atmosphere of our centres of learning. இந்த‌க் கொள்கைக்கேற்ப‌ தியாக‌ராச‌ர் க‌லைக‌ல்லூரியில் எல்லா ச‌ம‌ய‌த்த‌வ‌ரும் ஏற்றுக்கொள்ள‌க்கூடிய‌ வான்னாகி ம‌ண்ணாகி என்று தொட‌ங்கும் திருவாச‌க‌ப் பாட‌லைத்தின‌மும் பாடிக் க‌ல்லூரிப்ப‌ணியைத்தொட‌ங்கும் முறையை அமைத்துள்ளார்க‌ள். சைவ‌ உண‌வு. ஆலை அர‌ச‌ர் அவ‌ர்க‌ள் வ‌ள்ளுவ‌ர் வ‌குத்த‌ புலால் ம‌றுத்த‌லை த‌லைய‌ய‌ அற‌மாக‌க் கொண்டார்க‌ள். அன்பின் தொட‌க்க‌மே கொல்லாமை என்ற‌ கொள்கையுடைய‌ வ‌ர்க‌ள். தாம் நிறுவிய‌ க‌ல்லூரிக‌ளில் சைவ‌ உண‌வையே ச‌மைக்க‌ ஆணையிட்டார்க‌ள். தம் ஊரைச் சார்ந்த கொன்னையூர் மாரியம்மன் கோவிலில் பல காலம் நடந்த
உயிர்ப்பலிமுறையை அவர்கள் எடுத்துக்கூறி நிப்பாட்டும் தொண்டாற்றினார்கள்.
அன்பே இறைவன் என்று நம்பியதால் அவன் படைப்பாகிய எந்த உயிரையும் வ‌தைத்த‌ல் கூடாது என்ப‌து ஆலைஅர‌ச‌ரின் சால‌க்கொள்கை. வேற்று ச‌ம‌ய‌த்த‌வ‌ரையும் போற்றுத‌ல். ஒன்றே குல‌மும் ஒருவ‌னே தேவ‌னும். என்ற‌ திருமூல‌ர் வாக்கைத் த‌ம் ச‌ம‌ய‌ உண‌ர்வாக‌க் கொண்டார். தொழில்துறையில் ப‌ணிக்கு ஊழிய‌ர்க‌ளைத் தேர்வு செய்யும் போது திற‌மை நேர்மை இர‌ண்டை ம‌ட்டுமே அள‌வுகோலாக‌க் கொண்டார்க‌ள். கோடைகான‌ல் செல்லும் பொழுது எல்லாம் அங்குள்ள‌ கிறுத்துவ‌ பாதிரியார்க‌ளைச் ச‌ந்தித்துப் ப‌ய‌னுள்ள‌ க‌ருத்த்க்க‌ளை ப‌ரிமாற்ற‌ம் செய்வார்க‌ள். வ‌ண்ண‌ங்க‌ள் ப‌ல‌ சித்திர‌ங்க‌ளை அழ‌கூட்டுவ‌தைப்போல‌ ச‌ம‌ய‌ங்க‌ள் ப‌ல‌வும் தெளிவு கிடைக்க‌ உத‌வும் என்று ஆழ‌மாக‌ ந‌ம்பினார்க‌ள். திராவிட‌ நாக‌ரிக‌ம் ப‌ற்றிச் சிற‌ப்பான‌ ஆய்வு செய்த‌ ஹீராய் பாதிரியார் உட‌ல்ந‌ல‌ம் குன்றி வ‌ருந்துவ‌தை அறிந்து த‌ம் செல‌வில்அவருக்கு சிறப்பான வைத்தியம் செய்து சிறிது நலம் அடைந்தவுடன் அவர் தய் நாடான ஸ்பெயினுக்கு மதுரையில் இருந்து செல்ல பொருள் உதவி அவரை போற்றினார்கள். பிற சமயங்களில் உள்ள கொள்கைகளை தம் சமயமான சைவ சமயம் உர‌ம் பெற பாங்காக எடுத்துகொண்டார்கள்.மனித நேய சமய உணர்வோடு அவர்கள் வாழ்ந்தார்கள். அது நம‌க்கெல்லாம் ஒரு சிறந்த வழிகாட்டியாகும் . ஆலை அரசரைப் பாடிய புலவரும் சித்தத்துள் சிவத்தை வைத்தார் என்றும் விருப்பினைத்தொண்டில் வைத்தார் என்றும் போற்றினார்கள்.
தலையாலே தான் தருதலால் இராமாநுசக் கள்ளபிரான், அறங்காவலர் நம்மாழ்வார் சபா 80. வ.உ.சி.தெரு--195.229.237.42 07:49, 18 ஆகஸ்ட் 2010 (UTC)திருநெல்வேலி 627003. முன்னாள் பாண்டியன் கிராம வங்கி தலைவர் தியாகராசர் கலைக் கல்லூரியில் விரிவுரையாளராக தன் பணியினைத்தொடங்கி வெற்றிக்கு வழிகாட்டும் மேலாண்மை நூலினை வானதிப்பதிப்பகம் மூலம் வெளியிட்டு தமிழ் வளர்ச்சித்துறையின் முதல் பரிசினை பெற்றவர். 19.8.2010 அவரது பேத்தி ஹரிணியின் திருமணம் திரு சிவாவுடன் நடைபெற உள்ளது. மணமக்களை வாழ்த்தி வெளியிடுகின்றேன்.இதுவரை நாங்கள் கலந்து கொண்ட திருமணங்களில் கலைத்தந்தை தொகுப்பு நூலினை வெளியிடுவது பழக்கம். இப்பொழுது வலைப்பதிவு மூலம் வெளியிடுகின்றேன். பஞ்சாலைக் கவிஞர் ச. இளமுருகன்,, ஷார்ஜா 15.8.2010
" அவர் கையாலே வாங்குவதற்கே கொடுத்து வைத்திருக்கவேண்டும் " என்று
பலர் சொல்வதைக்கேட்டிருக்கிறோம். " அவர் கால் ஒருமுறை இங்கே படவேண்டும் " என்று பலர் விரும்புவதைக் கேட்டிருக்கிறோம்.
"கால் ப‌ட்டு எழுந்த‌ காரிகை க‌தையும்", "கால் ப‌ட்ட‌ழிந்த‌" த‌லைமேல் அய‌ன் கையெழுத்தும் காதார‌க்கேட்டிருக்கிறோம். க‌ண் ப‌ட்டு பூத்த‌ காத‌லும் க‌ண்ப‌ட்டு பூத்த‌ காத‌லும் க‌ண்ப‌ட்டு காய்ந்த‌ நோத‌லும் அன்றாட‌ம் கேள்விப‌ட்டிருக்கிறோம்.
அவர்களுக்கு இடம் இங்கே கொடுத்திருக்கிறேன் என்று மனம் விட்டு சொன்ன மாமேதைகள் பற்றி நாமறிவோம். தானுண்ட நீரைத்தலையாலே தான் தரும் தெங்கு போல நன்றியுணர்வோடு நாளும் தமக்கு நலஞ்செய்தாரை மறவாது போற்றும் நல்லுள்ளங்கள் பற்றியும் உணர்வோம். அவைதான் இந்த சமுதாயத்தை தங்கும் ஆயிரங்கால் மண்டபத்து தூண்கள். அவர்களி ஒருவர் தான் பஞசாலைக்கவிஞர் ச. இளமுருகன் அவர்கள்.
அதுவும் போற்றப்படுவர், சமுதாயத்திற்கு பல வகைகளில் சேவையாற்றியுள்ள பெரும் பண்பாளர் என்றறியும் போது, அவர்தம் பங்களிப்பு இந்த காலத்து இளைஞர்களுக்கு ஓர் இலட்சியமாகவும்,மற்றவர்களுக்கு நன்றியுணர்வோடு நினைவு கொள்ளும் ஒரு மாமருந்தாகவும் தகழும் என்றால் அவர் சேவையைப் பாராட்ட வார்த்தை ஏது?
காந்தியார் மனமாற்றக் களமாகக் கருத்தில் நின்று, கல்லூரிகள் பல தோற்றுவித்து கல்விக்கண்ணளித்து காரியம் ஆற்றிடும் வித்தை கற்பிக்கும் வகையான நூற்பாலைகள் பல நிறுவி தமிழ்நாடு தன்னைத் தோற்றுவித்து பேணி ஒவ்வொரு தமிழனும் இந்தியனும் தம் கருத்தில் நிறுத்தி போற்றவேண்டிய கருமுத்து தியாகராசனார் நினைவைபோற்றும் இப்பதிவு அன்னரின் பல்முகத்திறமைகளையும் அவர்கள் ஆற்றியுள்ள சேவைகளையும் வெளிக்கொணர்வதாய் அமைந்துள்ளது. அவர்கள் தம் ஆக்கப்பூர்வமான பணிகளை நாம் ஒவ்வொருவரும் போற்றிப்பாராட்டுவது நமது கடமையும் உரிமையுமாகும். கட்டிடககலையென்ன, கட்டிதமிழ் என்ன, கட்டிகாத்திட்ட வங்கி என்ன,கட்டிளங்
காளையர்க்குகல்லூரிகள், கட்டும் ஆடை தரும் நூற்பாலைகள், கட்சிப்பணி எல்லாம் அவர்தம் சேவைகளுக்கு கட்டியம் கூறும். இன்னும் நாட்டில் நிலவும் அவலங்களைக் களைவதற்கு அவர் சொல்லும் சட்டத்தை எளிமைப்படுத்துதல் ஒன்றே வழி. அரசியல்வாதிகளிடம் போய் அளவிற்கு மேல் குவிந்து விட்ட கட்டுப்பாடு, கண்காணிப்பு இல்லாத அதிகாரங்களை நெறிப்படுத்தி, அவர்தம் செயல்களை க் கணித்து ஆற்றுப் படுத்தும் வகை செய்து, அதை எல்லோரும் எளிதாக அறிந்து கொள்ளும்படி அன்னார் சொன்ன அரசியல் சட்டம் எளிமைபடுத்துதல் இன்றும் நாம்
நாம் ஆற்ற வேண்டிய பணிகளில் முதல் பணியாக இருக்கின்றது அவர் தம் ஆன்ம பலமும் அன்பர்களின் மனோ பலமும்,நல்லவர்களின் அறிவுத்திறனும், இளைஞர்களின் எழுச்சியும் தான் இவ்வரிய பணியை உடனே எடுத்துக்கொண்டு செவ்வனே செய்து முடிக்க வேண்டும். அடங்காத அரசியல் காளைக்கு எப்போது தான் மூக்கணாங்கயிறு போடுவதோ?(tamming of the shrewd) குடிசெய்வல் என்னும் ஒருவர்க்குத் தெய்வம் மடிதற்றுத்தான் முந்துறும்
என்பதை வாழ்ந்து காட்டிசுற்றம் பேணி ஒண்ணாம் நம்பர் பேச்சாளர், பெட்டியாளராய், கைகூப்பி எல்லா உயிரும் தொழும் புலால் மறுத்த பண்பாளராய், திறமையும் ஆற்றலும் நிறை பணியாற்றிய மாமணி தியாகராசனார் "சிவனை மறவாத நெஞ்சினர் அவரை போற்றிப் புகழாமல் எந்த ஒரு தமிழ்க் குடிமகனும் இருக்கமுடியாது. பல பேரறிஞர்கள் நமக்கு முன் வாழ்வாங்கு வாழ்ந்து பல சாதனைகள் புரிந்து இருக்கிறார்கள். இப்போது காந்தியார் மேல் காவியம் பாடிய பெரும்புலவர் இராமாநுசக்கவிராயர் பற்றி தமிழ் அறிஞர் பெருமக்கள் எடுத்தியம்ப அவர் தம் இணையற்ற பெரும்புலமையை அறிந்து மனமகிழ்ந்தேன். இதுநாள் வரை அறியாம‌ல் இருந்து விட்டோமே என்று அய‌ர்ந்தேன். இவ‌ராஇ இன்னும் த‌மிழ் ம‌க்க‌ளும் த‌மிழ் உல‌க‌மும் ச‌ரியாக‌ அறிந்து கொள்ள‌வில்லை என்று ஆத‌ங்க‌ப் ப‌ட்டேன். இன்று இந்நூலில் அறிஞ‌ர் பெரும‌க்க‌ள் க‌ருமுத்து தியாக‌ராச‌ரைப்ப‌ற்றி எழுதியுள்ளன‌வெல்லாம் ப‌டிக்கும்போது ஒரு பிர‌மிப்பும் ப‌க்தியும் எற்ப‌டுகின்ற‌து. கைக‌ள் தாமாக‌ அனிச்சை செய‌லாக‌ குவிகின்ற‌ன‌. இவ்விரு மேதைக‌ளிட‌மும் ப‌ழ‌கிஎருக்கிறேன். ஆனால் அவ‌ர் த‌ம் முழுப்பெருமையையும் இப்போது தான் என் க‌ண் முன்னே பேருரூ (விஸ்வ‌ரூப‌ம்) எடுக்கின்ற‌ன‌. க‌ருமுத்துத் தியாக‌ராச‌னார் வாழ்க்கையைக் க‌வினுற‌ வெளிக்கொண‌ர்ந்துள்ள‌ க‌விஞ‌ர் ச‌. இள‌முருக‌ன் ந‌ம் ந‌ன்றிக்கும் பாராட்டிற்கும் உரிய‌வ‌ர். அதை பாட‌
நூலாக்கி ந‌ம் இளைஞ‌ர்க‌ளுக்கு பாதை காட்டவேண்டிய‌து உரிய‌வ‌ர்க‌ளின் க‌ட‌மை."க‌ருவிலே திருவுடைய‌ க‌ருமுத்து தியாக‌ராச‌ர் பெருவாழ்வு ப‌யின்று பேர‌றிவு பெறுவோம்

Sunday, August 8, 2010

தேசத்தந்தையும் கலைதந்தையும்


வலைப்பூவும் கல்வெட்டும் ஒன்று தான். இரண்டினையும் நாம் தான் தேடிப் போக வேண்டும். உருவாக்க வேண்டும். கருமுத்து தியாகராசர் பற்றி கவியரசு கண்ணதாசன் பழ நெடுமாறன் பரிந்துரையினால் இளமுருகன் முயற்சியில் குத்தாலிங்கம் முன்னிலையில் பாடிய கவிதை.

பேரும் புகழும் பெருவாழ்வும்.


உரமுள்ள நெஞ்சம்;வாழ்வில் உறுதியால் வளர்ந்த நெஞ்சம்!

திறமுள்ள நெஞசம்:நேர்மை செம்மையால் ம‌ல‌ர்ந்த‌ நெஞ‌ச‌ம்

அற‌முள்ள‌ நெஞ்ச‌ம்:என்றும் அன்புட‌ன் ப‌ழ‌கும் நெஞ்ச‌ம் க‌ருமுத்து தியாக‌ ராச‌ர் க‌னிவுட‌ன் வ‌ள‌ர்த்த‌ நெஞ்ச‌ம்!

ஒன்றிலே தொட‌ஙகி எட்டு ஒன்ப‌தென் றுய‌ர‌ச் சென்று

க‌ன்றென‌ இருந்த‌ சொத்தை காளை போல் வ‌ள‌ர‌ச் செய்து

சென்ற‌நாள் ம‌ன‌தில் வைத்து சேர்த்த‌தைக் க‌ல்விக் காக‌

ந‌ன்றென‌ச் செல‌விட்டானை நாமினிக் காண்ப‌ தெந்நாள்!

ம‌துரையே அவ‌ன் பேர் சொல்லும் மங்கை மீனாட்சி அம்மை

நதியவள் பேரால் மன்னன் நாட்டிய ஆலை சொல்லும்

கதீலார்க் காகச் செய்த‌ கல்லூரி வாசல் சொல்லும்

அதிகம் நான் சொல்வ தென்ன‌ அவன் வழி என்றும் வெல்லும்!

உழைப்புக்கோர் எடுத்துக் காட்டு ஒவ்வொரு துறையும் தேர்ந்து

தழைப்பதைக் க்ண்ணாற் கண்டு தமிழையும் கைவி டாமல்

மழைஎனப் பொழிந்த செம்மல் மரணத்தால் இறநதா ரில்லை

இழைகின்ற உடலாற் செத்தார் இதயத்தால் வாழு கின்றார்.


--59.92.108.163 13:10, 15 மே 2009 (UTC)==குறிப்பு== the illustrated weekly of india 20.7.1976 ல் eminent chettiar என்கின்ற தலைப்பில் கருமுத்து தியாகராசர் படத்தினை வெளியிட்டு அதன் கீழே mahathma gandhiji said to have adopted loin cloth at karumuttu house on 22.9.1921 எனக் குறிப்பிட்ட்டிருந்தது. கவியரசு கண்ணதாசன் படமும் அவரைப் பற்றிய குறிப்பும் இருந்தன. அந்த இதழை விலைக்கு வாங்கி ஆலை அரசரும் கவீயரசரும் எனத் தலைப்பிட்டு கவியரசர் விலாசத்திற்கு அனுப்பி விட்டு கவியரசர் அவர்களை சந்தித்தேன். செ.தி.குத்தாலிஙகம் பிள்ளை முன்னிலையில் எழுதிக்கொடுத்தார்கள்.--−முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து 59.98.225.252 (talk • பங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .

உங்கள் தகவல்களுக்கு நன்றி. அருள்கூர்ந்து உங்கள் பயனர் கணுக்கு ஒப்பம் இங்கே இடுங்கள். நீங்கள் கூறும் தகவல்கள் பயனுடையவை. இவற்றை தக்க முறையில் ஒரு கலைக்களஞ்சிய கட்டுரையில் இருக்கத்தக்கவாறு இடுங்கள். அல்லது கட்டுரையில் சேர்க்க இயலாதவற்றை (பொருத்தம் இல்லமல் இருந்தால்) இங்கு பேச்சுப்பக்கத்திலும், வரலாற்றுப் பதிவாக இடலாம். முழு ஆவணமாக இருந்தால் விக்கிமூலம் (ta.wikisource.org) என்னும் உடன்பிறப்பான திட்டத்திலும் சேர்க்கலாம். நீங்கள் பெரிய தமிழறிஞர் கருமுத்து தியாகராசர் பற்றி எழுதுவது மகிழ்ச்சி அளிக்கின்றது. நன்றியுடன் --செல்வா 14:32, 29 ஏப்ரல் 2009 (UTC)

கலைத்தந்தை சில நினைவுகள் [சோமலே]


கலைத்தந்தை கருமுது தியாகராசச்செட்டியார் சிறந்த தமிழ் அறிஞராகவும்,நாட்டுப்பற்று மிக்கவராகவும்,தலையாய கல்வியாள்ராகவும்,வள்ளலாகவும்,மதுரை மாநகரத்தை இன்றைய நிலைக்கு உருவாக்கிய பெருந்தகையாளராகவும்,தொழில் மேதையாகவும்,பண்பாளராகவும் திகழ்ந்தார். அவருக்கு நிகர் அவரே எனலாம்.

தமிழ் அறிவு.

இள‌மை முத‌ல் தியாக‌ராச‌ச்செட்டியார் த‌மிழ் இல‌க்க‌ண‌ இல‌க்கிய‌ங்க‌ளில் ஆழ்ந்த‌ ஈடுபாடு உடைய‌வ‌ராக‌ இருந்தார். எத்துணை வேலைக‌ள் இருப்பினும், ப‌டிப்ப‌தெற்கென்று நேர‌த்தை ஒதுக்கிக் கொண்டார். இராம‌நாத‌புர‌ம் சேதுப‌தி,ப‌ண்டித‌ ம‌ணி,பேராசிரிய‌ர் இர‌த்தின‌ச‌பாப‌தி போன்ற‌ ப‌ல‌ருடைய‌ நூல் நிலைய‌ங‌க‌ளை அவ‌ர் விலைக்கு வாஙகிக் கொண்டார்.

ஏராள‌மான‌ புல‌வ‌ர்க‌ளுட‌ன் அவ‌ர் நெருஙகிய‌ தொட‌ர்பு கொண்டு அவ‌ர்க‌ளுக்கு உறுதுணையாக‌வும் ஆத‌ர‌வாக‌வும் இருந்தார். அவ‌ர்க‌ளில் சிற்கைலாச‌ம்பிள்ளை, ப‌ண்டித‌ம‌ணி, நாவ‌ல‌ர் சோம‌சுந்த‌ர‌ பார‌தியார், வ‌ர‌த‌ந‌ஞ்ச‌ய‌ பிள்ளை, முனைவ‌ர் இல‌க்குவ‌னார், திருவாசக‌ம‌ணி பால‌சுப்பிர‌ம‌ணிய‌ம், க‌விய‌ர‌ச‌ர் க‌ம்ப‌ரை ஆத‌ரித்த‌ ச‌டைய‌ப்ப‌வ‌ள்ள‌ல் வ‌ழிவ‌ந்த‌ டி.ஏ.வி.நாத‌ன், ஓள‌வை துரைசாமிப்பிள்ளை, கி,ஆ.பெ.விசுவ‌நாத‌ம், ம‌.பொ.சி., அற‌நெறிய‌ண்ண‌ல் கி.ப‌ழ‌நிய‌ப்ப‌னார் ஆகியோர் குறிப்பிடத்த‌குந்த‌வ‌ர்க‌ள். இவ்வாறு அவ‌ர் தொட‌ர்பு கொண்ட‌ புல‌வ‌ர்க‌ளின் ப‌ட்டிய‌ல் நீளும்.

தொல்காப்பிய‌த்தின் ஆங்கில‌ மொழிபெய‌ர்ப்பு உள்ப‌ட‌ப் ப‌ல‌ நூல்க‌ள் வெளிவ‌ர‌, க‌லைத்தந்தை பொருளுத‌வி செய்திருக்கிறார்.

சென்னை த‌மிழ் இசைச்ச‌ங்க‌ம், ம‌துரை திருவ‌ள்ளுவ‌ர் க‌ழ‌க‌ம், காரைக்குடி க‌ம்ப‌ன்க‌ழ‌க‌ம், தென்காசி திருவ‌ள்ளுவ‌ர் க‌ழ‌க‌ம், சென்னை ம‌காம‌கோபாத்தியாய‌ டாக்ட‌ர். உ.வே.சாமிநாத ஐய‌ர் நில‌ய‌ம் போன்ற‌ நூற்றுக்க‌ண‌க்கான‌ ச‌ங்க‌ங்க‌ளுக்கு அள‌வுட‌னும் விள‌ம்ப‌ர‌ம் இன்றியும் ந‌ன்கொடைக‌ளை வ‌ழ‌ங்கியுள்ளார்.

உல‌க‌த்த‌மிழ் மாநாட்டிற்கு வ‌ந்திருந்த‌ வெளிநாட்டு உள்நாட்டு அறிஞ‌ர்க‌ளுக்கு க‌லைத்த‌ந்தை விருந்து ப‌டைத்து பொன்னாடை போர்த்தி ம‌கிழ்ந்தார்.

karumuttu thiagarajan chettiar article by somale

இரண்டாம் உலகப்போர் தொடங்கியதும் ஆங்கிலேயர்களின் எதிரிநாடுகளான‌ ஜப்பானையும்,ஜெர்மனியையும் செர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் நடத்தி வந்த‌ நூல் ஆலைகளையும், பருத்தியையும் பஞ்சையும் பிரிக்கும் தொழிற்சாலை களையும் தியாகராசச்செட்டியார் ஒப்புக்கொண்டார். நலிந்த ஆலைகளை ந்ன்றாக நடத்திக் காட்டினார். பெரிய தொழில் அதிபர்களுள் தியாகரர்சச்செட்டியார் ஒருவர் தான் தம் தொழிற் சாலைக்குள்ளேயே வீடு கட்டிக் கொண்டு வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார். அவருடைய தொழில்நுட்ப அறிவின் காரணமாக, தொழிலாளர் அனைவரும் அவர்பால் பெருமதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார்கள். அவரிடம் பணி புரிந்த

வர்களுடைய ஆட்சியில் இப்போது ஏறத்தாழ 40 ஆலைகள் உள்ளன. ஆலை முதலாளிகள் பலர் தியாகராசச்செட்டியாருடைய அறிவுரையைக் கேட்டு அதன்படி நடந்து பயன் அடைந்தனர்.ஆலைத்த்தொழிலின் பிரச்னைகளையும் சட்ட நுட்பங்களையும் தியாகராசச்செட்டியார் முழுமையாக அறிந்திருந்தார். தேவைப்பட்ட போதெல்லாம் துணிந்து உச்சநீதிமன்றம் வரை சென்று ஆலைகளின் உரிமையை நிலைநாட்டினார். அவருக்குக் கிடைத்த தீர்ப்புகளின் விளைவாகத் தமிழ்நாட்டிலுள்ள ஆலை அதிபர்கள் அனைவரும் கோடிக் கணக்கில் நன்மை பெற்றிருக்கிறார்கள்.

ஆலைத்தொழில் தவிர பாங்க் இன்சூரன்ஸ் கம்பெனி ஆகியவற்றையும்
அவர் தொடங்கினார். சர்க்கரை ஆலைகளை ஒப்புக்கொண்டார்.தீப்பெட்டி ஆலை ஒன்றை நடத்தினார்.

somale article
ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைத்தது போல் கலை உணர்வு சிறிதும் இல்லாமல் கட்டியிருக்கிறார்களே என்று கூறுவார்.

த்மிழ்ப்பண்பின் சிகரமாகக் கலைத்தந்தை விளங்கினார். அவரைப்போல‌
ஒருவரைக் காண்பது அரிது. குறிப்பு: கருமுத்து தியாகராசரின் மகள் பெயரில் ருக்மிணி ஆலை சிலைமானில் நிறுவினார். ச. இளமுருகன் ஆகிய எனக்கு அங்கு தியாகராசர் மில்ஸ் கப்பலூரில் அலுவலராக பணிபுரிந்து வந்த எனது தந்தை தமிழ்த் தொண்டர் க. சண்முகசுந்தரம் எழுத்தர் வேலை வாங்கிக் கொடுத்தார். பழ.நெடுமாறன் இல்லத்தில் நாங்கள் அனைவரும் வசித்து வந்தோம்.

தொழிலாளர் நலத்திற்காக தொழிற்சங்கம் ஒன்றினை பழ.நெடுமாறன் கோவை
செங்காளியப்பன் TNTUச் துவங்கினோம். காங்கேயம் K.R. seshadரி அவர்கள் கட்டுப்பாட்டில் ஆலை இயங்கி வந்தது. தன்னிச்ச்சையாக ருக்மிணி ஆலை வானொலி மன்றம், ருக்மிணி ஆலைத் தொழிலாளர் குழந்தைகள் நலக்கழகம் பசியாபுரம் கிராமத்தில் நிறுவி மே தினத்தைக்கொண்டாடி மகிழ்ந்தோம். Rukmag quarterly news letter started by president v.s.chettiar.

[தொகு] karumuttu thiagarajan chetiar article by somaley how s.elamuguan got it history
ஆலையின் தலைவராக திரு ச.வள்ளியப்பச் செட்டியார் (rukmag adviser) கருமுத்து தியாகராசர் நினைவு மலர் வெளியிட வேண்டினார். நெற்குப்பையை சேர்ந்த தமிழ் வரலாற்று அறிஞர் சோமலே மதுரைத் தமிழ்ச்சஙகத்தில் பணி புரியும் திருமதி நிர்மலா மோகன் சோம‌லே பற்றி ஒரு நூல் எழுதியுள்ளதை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். நன்றி; கருமுத்து தியாகராசர் கட்டுரை வாங்கி கொடுத்த s.subramanian, factory manager a. panchanathan cheetiar, karaikudi, வாழ்த்து வழங்கிய திரையுலக இயக்குநர். sப்.முத்துராமன் நூல்க‌ளைத் தொகுத்து வைத்து த‌ந்த‌ ப‌ட்ட‌ண‌த்து மாப்பிள்ளை ஆசிரிய‌ர் ப‌ல்லை க‌ரிகால‌ன் திருவ‌ள்ளுவ‌ர் தெரு ப‌சியாபுர‌ம் வ‌ய‌து 83 திரு. முத்துக்கிருக்ஷ்ண‌ன், p.a to m.d . thiagarajar mills சீனு, ம‌ணீஸ் நெட் க‌ஃபெ, பார்ஸ‌ன் குடியிருப்பு ம‌துரை.18 த‌மிழ் எழுத்துக்க‌ளை ப‌திவேற்ற‌: ஓசை செல்லா , செல்வா க‌ன‌டா virtual system mr.kumar, kovai

captain M.S.Muthuramalingam(retd)D 174 sambandar street,Alagappanagar madurai.3 28.3.2003 phone 2693289 திருச.இளமுருகன்,பஞ்சாலைக்கவிஞர் அன்புடையீர்! தாங்கள் அனுப்பிய ஆலை அரசர் கலைத்தந்தையும் தேசத்தந்தையும் நூல் கிடைக்கப்பெற்றேன். மிக அழகாக இருந்ந்தது. வாழ்த்துகள். தங்களன்புள்ள மீ.சு. முத்துராமலிங்கம்

முனைவர் இ.கோமதிநாயகம் M.A.M.Ed ph.d., 27.7.2007 முதுகலைத்தமிழாசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,வில்லிவாக்கம், சென்னை 600049 பேரன்புக்குரியீர்! வணக்கம். வாழிய நலம்.தங்களின் தொகுப்பான "தேசத்தந்தையும் கலைத்தந்தையும்" என்னும் சிறந்த நூல் கிடைக்கப்பெற்றேன்.மிக்க மகிழ்ச்சி.

கலைத்தந்தையைப்பற்றிக்கவிஞர் பாடும்பொழுது, "மதுரையே அவன்
பேர் சொல்லும்"என்று பாடுகிறார்.

அதுபோல்,
இந்நூல்,என்றும் தங்கள் பேர் சொல்லும்!பாராட்டுகள்.
அன்புடன் இ.கோமதிநாயகம்
[தொகு] panjalai padal
பஞ்சால் நூற்கப்படுவது நூல் பிற பொருளைப் பஞ்சோடு கலத்தல் பணமிழக்கும் வழி. அரைக்கெண்டையை ஓட்டினால் அதிக உற்பத்தியே அறுத்தெரிவதால் குறையும் உற்பத்தியே. நூல் நூற்கவே பஞ்சு என்பர் கழிவுக்கும் அதுவே துணை. அறுந்த இழைகட்டி தரத்தினைப்போற்று ஆரியா துரிதமாக எடுத்து உற்பத்தியைக் கூட்டு. பஞ்சினால் நூற்கப்பட்ட நூல் போல் ஆகாதே கழிவினால் நூற்கப்பட்ட நூல். பஞ்சை நூற்றலும் நூற்றதை விற்றலும் உலகில் பஞ்சாலையின் தொழில். நூற்ற‌தை விற்ற‌ல் விற்ற‌ லாப‌த்தில் ஊதிய‌ம் வ‌ழ‌ங்குவ‌து ப‌ஞசாலை. உடை அணிந்து ம‌கிழும் மாந்த‌ர்க்கு உடை த‌ருவ‌து ப‌ஞசாலை. ப‌ஞ்சு நூலைத்த‌ருதலால் ப‌ஞ்சு உயிரினும் ஓம்ப‌ப்ப்டும். பஞ்சினால் நூற்க‌ப்ப‌ட்ட‌ நூல் சிறிதெனினும் த‌ர‌மான‌தெனில் ந‌ல்ல‌ விலை த‌ரும். எண்க‌ள் ஓட்டுவ‌தால் என்ன‌ ப‌ய‌ன் நூல் உற்ப‌த்தி கூடாவிடின். எப்ப‌ஞ்சு எந்நூலைத் த‌ரும் ஆய்ந்து அப்பஞ்சை அப்ப‌ஞ்சை வ‌ழ‌ங்குவ‌து அறிவு. ந‌ல்ல‌ ப‌ஞ்சை வ‌ழ‌ங்குவ‌து ந‌ன்று ந‌ன்ற‌ல்ல‌து அன்றே நிறுத்துத‌ல் ந்ன்று.

mahathma gandhiji wore loin cloth at karumuttu thiagarajan chettiar 251a west masi street-poem 2.10.2009

க‌ருமுத்து தியாக‌ராச‌ர் பாட‌ல்க‌ள்‍. தேச‌த்த‌ந்தையும் க‌லைத்த‌ந்தையும். ஹ‌ரிஈஸ்வர் ப‌வ‌ன‌ம்,49,நேரு கால‌னி,கோய‌முத்தூர் 641041 புதும‌னை புகு விழா 13.11.2005 வெளியிட‌ப்ப‌ட்ட‌து.தொகுத்த‌வ‌ர் ச.இள‌முருக‌ன். ஆலைக‌ள் பல‌ நிறுவி அற்புத‌ங்க‌ள் செய்திட்டார் ஆல‌வாயாம் மாம‌துரைத்திருந‌க‌ரில் அன்று ஒரு நாள் மேல‌மாசி வீட‌த‌னில் தியாக‌ராச‌ர் காந்தியாரை ம‌காத்மாவெனும் அண்ண‌லாக்க‌ ஆடையினால் உத‌வ‌லானார். த‌மிழ‌றிஞ‌ர் சுப்பையா பிள்ளை இய‌ற்றிய‌ க‌விதை. ஐயா போற்றி!அணுவே போற்றி! சைவா போற்றி!த‌லைவா போற்றி! ம‌துரை அருள்மிகு மீனாட்சிய‌ம்ம‌ன் பொற்பாத‌ங்க‌ளில் ச‌ம‌ர்ப்பிக்கின்றோம்.

world tamil conference malasia, madurai father of pazha nedumaran wrote this poem about karumuttu 1.7.1975

திருக்குறள். தியாகேசர் வெண்பா ஆக்கியோன்;அறநெறியண்ணல் கி.பழனியப்பனார். பழநெடுமாறன் அவர்களின் தந்தையார். மலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டவர். மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் வரவேற்பாளர். (இதில் முதல் இரண்டு அடிகள் தியாகேசராகிய கருமுத்து தியாகராசச்செட்டியார் அவர்களைக் கேள்வி கேட்பதாகவும் அதற்கு அவர் விடையாகத் திருக்குறளைக் கூறுவதாகப்பின் இரண்டு அடிகளும் அமைக்கப் பெற்றுள்ளன) 1.பாரினில் பொருளீட்டப் பஞ்சாலை வைத்திட நீர்

தேறினதும் ஏனோ தியாகேசா‍‍‍‍‍ தேரில்
அறனீனும் இன்பமும் ஈனுமு திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
[தொகு] kalaikkoil poem by tamil scholar a.narayanan,madurai 1.7.1975
கலைக்கோயில்.தமிழாசிரியர் அ.நாராயணன்,மதுரை.தியாகராசர் பள்ளி.==

ஏட்டுப்புக‌ழையெல்லாம் நாட்டில் பர‌ப்பிட‌வே
வேட்டுத் தின‌ந்தோறும் உழைத்த‌வ‌ர்‍‍_ நம்
நாட்டுப்பெருமைத‌னை வீட்டுப்புக‌ழென‌வே
கூட்டித்த‌மிழ் வாழ்வில் திளைத்த‌வ‌ர்!!
[தொகு] bharathi kanda muthu by pulavar keeran
பாரதி கண்ட முத்து(புலவர் கீரன்) மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் சொற்பொழிவாற்ற வந்திருந்த பொழுது எழுதிய கவிதை. 1. க‌ல்வியே இல்லா ஊரைக்

க‌ன்லுக்கு இரைய‌க் கென்று
சொல்லிய‌ க‌விஞ‌ர் பாட்டில்
சோதிட‌ம் ந‌ன‌வா மாற
பல்லிய‌ல் க‌ல்விக் கூட‌ம்
பாங்கினில் அமைத்தான்;அந்த‌
மெல்லிய‌ல் ந‌ங்கைத் தெய்வ‌ம்
மீனாட்சி க‌ருணை பெற்றான்


கலைத்தந்தை முத்த‌மிழ்க்காவ‌ல‌ர்.கி.ஆ.பெ.விசுவ‌நாத‌ம்

த‌மிழ‌க‌த்தில் எத்த‌னையோ ம‌க்க‌ள் பிற‌ந்தார்க‌ள், வாழ்ந்தார்க‌ள்,ம‌றைந்தார்க‌ள். அவ‌ர்க‌ளில் க‌லைத‌ந்தை என்று அன்போடு அனைவ‌ராலும் புக‌ழ‌ப்பெற்று வாழ்ந்த‌ ஒரே த‌மிழ் ம‌க‌ன் க‌ருமுத்து.

கருமுத்து

க‌ரு பாட்ட‌னின் பெய‌ர் முத்து த‌ந்தையின் பெய‌ர்.இவ்விருவ‌ர் பெய‌ராலும் அழைக்க‌ப்பெற்ற‌வ‌ரே ந‌ம் தியாக‌ராச‌ர். அவ‌ர் பெய‌ர் க‌ருப்பு,நிற‌ம் சிவ‌ப்பு, புக‌ழ் வெளுப்பு,உள்ள‌ம் ப‌ச்சைக்குழ‌ந்தை உள்ள‌ம்.
ந்க‌ர‌த்தார்

த‌மிழ‌க‌த்தில் சைவ‌த்தையும் த‌மிழையும் வ‌ள‌ர்த்து கோவில் க‌ட்டி
குட‌முழுக்குச்செய்து, அற‌நிலைய‌ங‌ள் வைத்து அற‌ப்ப்ணிக‌ள் ப‌ல‌ புரிந்த‌ அரும்பெரும் ச‌மூக‌ம்,இச்ச‌மூக‌த்தை தாங்கி நின்ற‌ த‌லைசிற‌ந்த‌ பெருஞ் செல்வ‌ர் மூவ‌ரில் ஒருவ‌ர் ந‌ம் தியாக‌ராச‌ர்.ம‌ற்றைய‌ இருவ‌ரும் செட்டி நாட்ட‌ர‌ச‌ர் ராஜா ச‌ர்.அண்ணாம‌லைச் செட்டியார் அவ‌ர்க‌ளும், கோடி கொடுத்தும் குடியிருக்க‌ வேடும் கொடுத்த‌ கொடைவ‌ள்ள‌ல் கோட்டையூர் அழ‌க‌ப்ப்ச்செடடியார் அவ‌ர்க‌ளும் ஆவ‌ர். இம்முப்பெரும் த‌லைவ‌ர்க‌ளையும் ந‌க‌ர‌த்தார் ச‌மூக‌ம் ம‌ட்டும‌ல்ல‌ த‌மிழ‌க‌மேஎன்றும் ம‌ற‌வாது.

நூல் ஆலைகள்

தம்27வது வயதில் தொழில் துறையில் இறங்க எண்ணி மதுரைக்கு வந்தார். 29வது வயதில் மீனாட்சி ஆலையைத் தொடங்கி நடத்தினார்.
தொடர்ந்து பல நூற்பு ஆலைகளை பல ஊர்களில் நிறுவி உழைப்பால் உயர்ந்து வெற்றிக் கண்ட பெருமகன். தமிழகத்தில் 17 ஆலைகள் தோற்றுவித்து, நடத்தி,பெருமை பெற்ற்வர் அவர் ஒருவரே. பெருஞ்சிறப்பு

பல ஆலைகளைத்தொடங்கி நடத்தியதால் மட்டுமல்ல பிற ஆலை அதிபர்களாலும், தமிழகத்தில் மிகப்பெரும் பஞசு வணிகர்களாலும்,ஏழைத்தொழிலாளர்களாலும்,பொது மக்களாலும் போற்றும்படி வாழ்ந்ததே அவர் அடைந்த பெருஞ்சிறப்பாகும்.
நூல் நிலையம்

அவர் பஞ்சாலைகளைத் தோற்றுவித்து பருத்தி நூல்களையும் ஆராய்ந்தார். அவர் படித்தறிந்த நூல்கள் அனைத்தையும் அவரது மதுரை மாளிகையில் கண்டு மலைத்து நின்றவர் பலர். நூல்நிலையம் போன்று காட்சியளிக்கும். அங்கு நூல்கள் ஒழுங்காகவும் அழகாகவும் அடுக்கி வைக்கப்
பெற்றிருப்பது மட்டுமல்ல, ஒவ்வொரு நூலிலும் அவர் எழுதி வைத்துள்ள அடிக் குறிப்பும் காணப்பெறும். இவற்றினைக் கண்டு வியப்படைந்தோரில் யானும் ஒருவன். தமிழரறிஞர்கள்.

பசுமலை டாக்டர் சோமசுந்தர பாரதியார் அவர்களே இவரது தமிழாசிரியர்.
சிறந்த இலக்கணங்களை சேலம் அ. வரதநஞ்சையபிள்ளை அவர்களிடத்திலும், சைவ சமய உண்மைகளை சித்தாந்தச் செல்வர் ஓளவை சு.துரைசமி பிள்ளை அவர்களிடத்தும் கற்றறிந்தவர், மறைமலைஅடிகள்திரு.வி.க எம்.எல்.பிள்ளை, பண்டித மணி ஆகியோரிடத்தும் பெரும்பர்ரு கொண்டவர். உள்ளத்துணிவு.

வெள்ளையர் ஆட்சியில், காங்கிரசு இயக்கத்தில் இருந்து காந்தியடிகள் வழியில்
நாட்டுப்பற்றுடன் ந்ன்கு உழைத்தவர். அப்படியிருந்தும் 1963ல் நான் திருச்சியில் நடத்திய தமிழக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் முதல் முதலாக தமிழ்க்கொடியை ஏற்றி வைத்து தமிழ் முழக்கம் செய்து இந்தியை மிகத் துணிச்சலோடு எதிர்த்து நின்றவர்வர் தியாகராசர் புலவர் குழு

பத்தொன்பது ஆண்டுகட்கு முன்பு திருச்சியில் தொடங்கப்பெற்ற கடைச்சங்க‌
காலத்திய புலவர்களைப்போன்ற நாற்பத்தொன்பது புலவர் பெருமக்களடங்கிய‌ தமிழகப்புலவர் குழுவைமதுரைக்கு அழித்து, தன் இல்லத்தில் விருந்தளித்து அனைவருக்கும் புத்தாடை கொடுத்து மதுரைத் தமிழ்ச்சஙகத்தில் வைத்து தமிழ் ஆரயச்செய்து பெருமகிழ்ச்சி அடைந்தவர் அவர். கல்வி நிலையங்கள்.

எவரிடத்தும் நன்கொடை பெறாமல், தன் வருவாயைக்கொண்டே,கலைக்கல்லூரி,பொறியியற் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக்
கல்லூரி, சில உயர்நிலைப்பள்ளிகள், பல தொடக்கப்பள்ளிகள் முதலியவற்றைத் தொடங்கி பொது மக்களுக்கு உதவிய பெருந்தகையாளர் கருமுத்து. சுருங்கக் கூறின், ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகளை தியாகராசர் தனி ஒருவராக செய்து முடித்திருக்கிறார் என்றே கூற வேண்டும்

கலையழகு

கலைத்தந்தை அவர்கள் ஓரு கட்டடக் கலைஞர். கட்டடத்திலும் ஒரு கலையழகை கலையழகிலும் ஒரு தனித்தன்மையை க‌ண்டவர்.சென்னை ,மதுரை,கொடைகானல்,குற்றாலம் முதலிய இடங்களில் உள்ள அவரது மாளிகையில் அவரின் கைவண்ணத்தை,கலையழகின் தனித்தன்மையை கண்டு மகிழலாம்.
அரசியல்

1963க்குப்பிறகு காங்கிரசிலிருந்து விலகினார். இந்தி எதிர்ப்பு கிளர்ச்சிக்குப் பிறகு எந்த அரசியல் கட்சியிலும் அவர் தலையிடவில்லை,நடுநிலைமை வகித்து தமிழ்ப்பணி மட்டும் புரிந்து வந்தார், என்றாலும் பல அரசியல் தலைவர்களுடன் நட்புக்கொண்டிருந்தார். அவர்களில் சர்.பி.டி.இராஜன் பட்டிவீரன்பட்டி சவுந்தரபண்டியனார், பெரியார் ஈ.வெ.ரா.விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு.சர்.இராமசாமி முதலியார், ராஜாஜி,காமராஜ் முதலியோர் குறிப்பிடத்
தகுந்தவர். சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்று உடையவர் திருக்கோயில் வழிபாட்டில் சிறந்தவர். சைவ உணவையே உண்பவர். அவரது முகத்தை திருநீறு எப்போதும் அழகு செய்து கொண்டிருக்கும். தேசத்தந்தை மகாத்மா காந்தி கலைத்தந்தை கருமுத்து தியாகராசரின் மதுரை மேலமாசி வீதி இல்லத்தில் விவசாய உடையணிந்தார்கள்.

மறைவு

மீனாட்சி ஆலையில் உள்ளும் புறமும் அவரது இல்லத்தின் உள்ளேயும் வெளியேயும் வீதியிலும் வழிநெடுகிலும் மக்கள் கூட்டம் கடல் அலைகள் போன்று பெருகி நின்று கதறி அழுது கொண்டிருந்த காட்சி எங்கள் துன்பத்தை
மேலும் வளரச் செய்தது.அவரது பொன்னுடலைக் காணவந்த மக்கள் கூட்டம் வைகையிலும் கூடும் அழகர் திருவிழாக் கூட்டத்தையும் மிஞ்சியிருந்தது. என்று காண்போம்

கருமுத்துவை,கலைத்தந்தையை தொழிலதிபரை,பெருஞ்செல்வரை,கொடைவள்ளலை,தமிழறிஞரை,ஏழை பங்காளரை,எளிய வாழ்வினரை,அவரது இன்முகத்தை புன்சிரிப்பை நாம் இனி என்றும் எங்கும் காணப்போவதில்லை.அவரது இழப்பு தமிழுக்கு,தமிழர்க்கு,
தமிழகத்திற்கு பேரிழப்பாக முடிந்தது. யார் யாருக்கு ஆறுதல் கூறுவது?மெல்ல நகர்ந்து செல்லும் காலம் தான் அனைவருக்கும் நல்லாறுதல் கூற வேண்டும்.

வாழ்க கருமுத்துவின் புகழ்! வளர்க அவர் செய்த பணிகள்!!
குறிப்பு: கலைத்தந்தையிடம் என் தந்தையை அறிமுகம் செய்தவர் முத்தமிழ்க் காவலர். 1977ல் இக்கட்டுரையை ருக்மாக் காலாண்டுச் செய்தி கடிதத்திற்காக‌ பெற்றேன். 29.7.2010 கலைத்தந்தை நினைவு நாளையொட்டி வெளியிடுவதில் ஆறுத‌ல் அடைகின்றேன். ஷார்ஜாவில் உள்ள‌ திரும‌தி ரெங‌க‌ம‌தி சின்ம‌யா மீனாட்சி அவ‌ர்க‌ட்கு ந‌ன்றி


அமரர் கருமுத்து

அறநெறியண்ணல் கி.பழநியப்பனார் (ப‌ழநெடுமாறன் ஐயா அவ‌ர்க‌ளின் தந்தை)




எல்லோரும் மண்ணுலகில் அவ‌ரைப் போல் வாழ‌லாம்.அது எவ்வாறு முடியும் என்று கேட்போருக்கு, ஏன் முடியாது?எக்காலத்திலும் அம‌ர‌ராக வாழ‌லாம்.உறுதியாக ந‌ம்பு,இதோ அத‌ற்கு வ‌ழி சொல்கிறேன் கேள் என்று அம‌ர‌க‌வி பார‌தியார் கூறுகிறார்.
" ம‌ண்ணுல‌கின் மீதினிலே எக்காலும் அம‌ர‌ரைப்போல் ம‌டிவில்லாம‌ல்
திண்ண‌முற‌ வாழ்ந்திட‌லாம், அத‌ற்குரிய‌ உபாயமிங்கு செப்ப‌க்கேளிர்."

ஐய‌ப்ப‌டாதே நிச்ச‌ய‌மாக‌ வாழ்ந்திட‌லாம் எண்றூ கூறுகிறார். அம‌ர‌த்துவ‌ம்
பெற்ற‌ ஒருவ‌ர் இவ்வ‌ள‌வு திண்ண‌மாக‌ கூறும்பொழுது அத‌னை உறுதியாக‌ ந‌ம்ப‌லாம்.

முத‌லில் செய்ய‌வேண்டிய‌து உன்ம‌ன‌தில் ஒன்றைப்ப‌தித்து வைத்துகொள். எல்லாப்பொருளிலும் உட்பொருளாய் இருப்ப‌வ‌ன் ஒருவ‌ன் உண்டு. எல்லாச்
செய்கைக‌ளுக்கும் ஆதார‌ம் அவ‌ன்தான். அவ‌ன்தான் எல்லோரையும் ஆட்டி வைப்ப‌வ‌ன் வால‌றிவ‌ன். அப்ப‌ர‌ம்பொருளை இடைவிடாது சிந்தித்த‌ல் வேண்டும். ந‌ண்ணியெலாப்பொருளினுலும் உட்பொருளாய்ச் செய்கையெலாம் நடத்தும் வீறாய்த் திண்ணிய நல்லறிவொளியாய்த் திகழுமொரு பரம்பொருளை அகத்தில் சேர்த்து வள்ளுவப்பெருந்தகையும் இறைவனை, இடைவிடாது நினைப்போர் நீடு வாழ்வர் என்று கூறுகிறார். நினைப்பதுடன் செய்கையெலாம் அவன் செயல் என்று எண்ண‌வேண்டும். ந‌ம் உயிருக்கும் உயிராக‌ இறைவ‌ன் ந‌ம்மிட‌த்தில் இருக்கின்றான், ந‌ம‌க்குள்ளே சுட‌ர்விடும் ஒளியாய்த்திக‌ழ்கின்றான் என்ப‌தை உறுதியாக‌ ந‌ம்ப‌வேண்டும் என்கின்றார்.

செய்கையெலாம் அதன் செய்கை, நினைவெலாம்
அத‌ன் நினைவு தெய்வ‌மே நாம்
உய்கையுர நாமாகி நமக்குள்ளே யொளிர்வதென உறுதி
கொண்டு
இந்த நம்பிக்கையிலே உறுதிக்கொண்டால் மட்டும் போதுமா? நாம் எது
வேண்டுமென்றாலும் செய்யலாமா?உறுதி கொள்வது தான் அடித்தளம், முயற்சி மேல்தளம், இன்றைய உலகில் எதற்கும் பல இடையூறுகள் தோன்றும். பேய்களாகத்தோன்றி வழிமறிக்கும். அவைகளை எதிர்த்து வாளால் போர் செய்ய‌ வேண்டும். இரும்பினால் செய்த வாளல்ல. அத் மழுங்கி உடைந்து விடும். அதற்கும் பன்மடங்கு கூர்மையான ஞானவாளால் போர் செய்யவேன்டும் . அது ப‌ய‌ன்ப‌டுத்த‌ப் ப‌ய‌ன்ப‌டுத்த‌க் கூர்மையாகும் வாளாகும். அவ்வாளால் எதிர்க்கும் பேய்க‌ளை அறுத்துத் த‌ள்ள‌வேண்டும் என்று சீறுகிறார் பார‌தி.பொய், க‌ய‌மை,சின‌ம்,சோம்ப‌ல்,க‌வ‌லை,மைய‌ல், வீண் ஆசை.பொறாமை,அச்ச‌ம், ஐய‌ப்பாடு என்னும் ப‌த்துமே ம‌னித‌னை மாக்க‌ளாக்கும் பேய்க‌ள்.

"பொய்,கயமை,சினம், சோம்பல், கவலை, மையல், வீண்விருப்பம்,புழுக்கம்,
அச்சம், ஐயமெனும் பேயையெலாம் ஞானமெனும் வாளாலே அறுத்துத் தள்ளி"

இப்பேய்களை அறுத்துத்தள்ளிவிட்டால் நாம் நமக்கு இன்பம் பயக்கும் எவ்வழியில் சென்றாலும் அமரத்துவநிலை அடையலாம்.
"எப்பொழுதும் ஆனந்தச் சுடர் நிலையில் வாழ்ந்துயிர்கட்கு இனிது செய்வோர்
தப்பாதே இவ்வுலகில் அமர நிலை பெற்றிடுவோர்" "மண்ணுலகின் மீதினிலே

எக்காலும் அம‌ர‌ரைப் போல‌
ம‌டிவில்லாம‌ல்
திண்ண‌முற‌ வாழ்ந்திட‌லாம்

அத‌ற்குரிய‌ உபாய‌மிங்கு
செப்ப‌க்கேளிர்
ந‌ண்ணியெலாப்பொருளினிலும்

உட்பொருளாய் செய்கையெலாம்
ந‌ட‌த்தும் வீறாய்த்
திண்ணிய‌ ந்ல் ல‌றிவொளியாய்த்

திக‌ழுமொரு ப‌ர‌ம்பொருளை
அக‌த்தில் சேர்த்து
செய‌ற்கையெலாம் அத‌ன் செய‌ற்கை,

நினைவெல்லாம் அத‌ன் நினைவு
தெய்வ‌மே நாம்
உய்கையுற நாமாகி நமக்குளளே

யொளிர்வ தென‌
உறுதி கொண்டு
பொய்,கயமை,சினம்,சோம்பல்,கவலை

மையல்,வீண் விருப்பம்,
புழுக்கம்,அச்சம்
ஐயமெனும் பேயையெலாம்

ஞான‌மெனும் வாளாலே
அறுத்துத்தள்ளீ
எப்போதும் ஆனந்தச் சுடர்

நிலையில் வாழ்ந்துயிர்கட்
கினிது செய்வோர்
தப்பாதே இவ்வுலகில்

அமரநிலை பெற்றிடுவர்
...................
அமரர் பாரதி காட்டிய இவ்வழியினைப் பின்பற்றி அமரநிலை அடை ந்தவர். கருமுத்து தியாக‌ராச‌ச்செட்டியார் அவ‌ர்க‌ள்.சிவ‌னை ம‌ற‌வாத‌ நெஞ்சின‌ர். உயிர் பிரியும் பொழுதும் சிவ‌புராண‌ம் பாடிய‌வாயின‌ர். வீழ்ந்த‌ நிலையிலும் இய‌ற்கையை வ‌ண‌ங்கின‌ கையின‌ர். த‌ன் முய‌ற்சியால், உழைப்பினால்,ஞான‌வாள் கொண்டு செய‌ற்க‌ரிய‌ செய்து உய‌ர்ந்த‌ பெரியார், தாம் பெற்ற‌ இன்ப‌ம் வைய‌க‌ம் பெற வேண்டும் என்று எண்ணினார். ப‌ட்ட‌மேற்ப‌டிப்புக் க‌ல்லூரிக‌ளைத் தோற்றுவித்தார்,தொட‌க்க‌ப்ப‌ள்ளியிலிருந்து,உச்ச‌க‌ட்ட‌ க‌ல்வி பெற‌வும் அவ‌ர் தோற்றுவித்த‌ க‌ல்விக்கோவில்க‌ள் அவ‌ர் க‌னைவை நினைவாக்கின‌.எத்த‌னை தொழிலாள‌ர் குடும்ப‌ங்க‌ளுக்கு அவர்தோ ற்றுவித்த‌ தொழிற்கூட‌ங்க‌ள் ப‌டிய‌ள‌ந்து வ‌ருகின்ற‌து என்ப‌தை ந்னைத்து பெருமை கொள்ளாத‌ த‌மிழ‌ன் இருக்க‌ முடியாது.

அவ‌ர் தோற்றுவித்த‌ க‌ல்விக்கூட‌ங்க‌ளின் மூல‌மும் தொழிற்கூட‌ங்க‌ளின் மூல‌மும் ப‌ய‌ன்பெற்ற‌வ‌ர்க‌ளும், ப‌ய‌ன்பெறுப‌வ‌ர்க‌ளும், ப‌ய‌ன்பெற‌ப்போவோர்க‌ளும்
என்றென்றும் அப்பெரியாரை ம‌ற‌வாதிருப்ப‌ர்க‌ளாக‌.

ந்ன்றி ம‌ற‌ப்ப‌து ந‌ன்ற‌ல்ல‌ என்ப‌து த‌மிழ் அற‌ம்.

வாழ்க‌ அம‌ர‌ர் க‌ருமுத்து தியாக‌‌ராச‌ர்.

paza nedumaran article about kamarasar and karumuttu thiagarajan chettiar

காமராசரும் கலைத்தந்தையும் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள்

== மாபெரும் தொழில் அதிபராக பல்வேறுகல்லூரிகளுடைய கலைத்தந்தையாக‌ தமிழறிஞராக கருமுத்து தியாகராசச் செட்டியார் அவர்க்ளை தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்திருக்கிறது.

ஆனால் தேசிய‌ இய‌க்க‌த்தில் சிற‌ந்த‌ தொண்ட‌ராகப் ப‌ணியாற்றிஒரு கால‌ க‌ட்ட‌த்தில் த‌மிழ்நாடு காங்கிர‌சு செய‌லாள்ராக‌ விள‌ங்கி
பார‌த‌ப் பெருந்த‌லைவ‌ர் காம‌ராச‌ர் அவ‌ர்க‌ளின் அன்புக்குரிய‌ ச‌காவாக‌ விள‌ங்கிய‌வ‌ர் க‌ருமுத்து தியாக‌ராச‌ச் செட்டியார் என்றால் எல்லோரும் ஆச்ச‌ரியப்ப‌ட‌வே செய்வார்க‌ள்.

தேசிய இயக்கத்தில் தீவிரமான ஈடுபாடு கொண்டிருந்த திரு.செட்டியார்
1939ம் ஆண்டு பெரியார் ந‌ட‌த்திய‌ இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது காங்க்ர‌சுட‌ன் மொழிப்பிர‌ச்னை யில் க‌ருத்து வேறுபாடு கொண்டு காஙிர‌சை விட்டு வில‌கினார். ஆனாலும் நாடு சுத‌ந்திர‌ம் பெற‌ வேண்டும் என்ப‌தில் த‌ணியாத‌ வேட்கை கொண்டிருந்தார். த‌லைவ‌ர் காம‌ராச‌ரோடும் பிற‌ தேசிய‌ த‌லைவ‌ர்க‌ளோடும் அவ‌ருக்கிருந்த‌ நெருக்க‌மான‌ தொட‌ர்பு நீடித்தே வ‌ந்த‌து.

குறிப்பாக பெருந்தலைவர் காமராஜரும் கருமுத்து தியாகராஜரும் ஒருவர் மீது மற்றொருவர் கொண்டிருந்த நட்பினையும் அன்பினையும் இன்று நினைத்துப்பார்த்தாலும் எனது நெஞ்சம் நெகிழ்கின்றது. சில சம்பவங்களை சுட்டிக்
காட்ட விரும்புகிறேன்.

1965ம் ஆண்டு தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் மும்முரமாக‌
நடைபெற்ற நேரம். அந்தப்போராட்டத்தை கருமுத்து தியாகராசர் ஆதரித்தார் எல்லோரும் அறிந்த ஒன்று. அந்நிலையில் அகில இந்திய கா ங்கிரசு கமிட்டி தலைவராக இருந்த காமராசர் மதுரை வந்திருந்தார். இரண்டு பேரும் சந்தித்தனர். சந்திப்பு இனிமையாக இல்லை.பலத்த கருத்து வேறுபாடுடன் இருவரும் பிரிய நேர்ந்தது. அதற்குப்பின்னால் அந்த இருவரும் பல ஆண்டுகள் சந்திக்க வாய்ப்பு இல்லை.எட்டு ஆண்டுகளுக்குப்பிறகு கருமுத்து சுந்தரம் செட்டியர் அவர்

அவர்கள் சாவிற்கு துக்கம் விசாரிக்க தலைவர் காமராஜ.விரும்பினார்.

அப்போது கருமுத்து தியாகராசர் இருதய நோயினால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருக்கிறார். திருமதி இராதா அம்மையாருக்கு தொலைபேசி மூலம் தலைவர் காமராசர் வரவிருக்கும் தகவலைத்தெரிவித்தேன். அவரது மாளிகைக்கு நானும் சென்றேன். மாளிகையின் வாயிலில் திரு. மாணிக்கவாசகம் செட்டியார்

திரு. கண்ணன் மற்றும் கருமுத்து குடும்பத்தைச் சேர்ந்தவர்களான கல்லல் மு. சண்முகம் செட்டியார் திருமதி ருக்மிணி ஆகியோர் தலைவரை வரவேற்க தயராக இருந்தனர், தலைவர் காமராசர் காரை விட்டு இறங்கினார். செட்டியார் மேலே
இருப்பதாகவும் தலைவர் வந்த தகவல் தெரிந்தவுடன் கீழே இறங்கி வருவதாகவும் தலைவரிடம் தெரிவிக்கப்பட்டது. உடல் நலம் இல்லாமல் இருப்பவர் கீழே ஏன் இறங்கி வரவேண்டும் நானே மேலே போய் ப் பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு தலைவர் காமராசர் மாடிப்படியில்

ஏறத்தொடங்கினார். அதே நேரத்தில் மேலே இருந்து திருமதி. இராதா
அம்மையாரின் தோளைப்பிடித்த வண்ணம் திரு. செட்டியார் கீழே இறஙகத் தொடங்கினார்.இருவரும் நடுவே சந்தித்துக் கொண்டனர் எதற்காக இந்த உடம்புடன் இறங்கி வரவேண்டும். நான் தான் மேலே வருக்றேனே என அன்புடன் தலைவர் காமராசர் கடிந்து கொண்டார். நீங்கள் வந்திருக்கும் பொழுது மேலே இருப்பது மரியாதையல்ல என்றார் திரு.செட்டியார். இருவரும் ஒருவரையொருவர் அன்புடன் அணைத்துக் கொண்டனர். பிறகு கை கோர்த்த வண்ணம் மேலேறிச் சென்றனர்.

இள‌ம்பிராய‌த்து ந‌ண்ப‌ர்க‌ள் மிக‌ நீண்ட‌ நாட்க‌ள் பிரிவுக்குப் பின்ன‌ர் ச‌ந்தித்தால் எவ்வ‌ள‌வு குதூக‌ல‌மாக‌ அவ‌ர்க‌ள் காட்சிய‌ளிப்பார்க‌ளோ அப்ப‌டி
அந்த‌ இருவ‌ரும் காட்சி த‌ந்த‌ன‌ர். அருகே இருந்து இந்த‌ காட்சியை காண‌ நேர்ந்த‌ என‌க்கும் ம‌ற்ற‌ ப‌ந்துக்க‌ளுக்கும் ம‌கிழ்ச்சியும் உள்ள‌ நெகிழ்ச்சியும் ஒருங்கே ஏற்ப‌ட்ட‌து.

அத‌ற்குப் பின்ன‌ர் த‌லைவ‌ர் காம‌ராச‌ர் அவ‌ர்க‌ள் கொடைக்கான‌லில் சில‌ நாட்க‌ள் ஓய்வுக்காக‌ வ‌ந்து த‌ன்கியிருந்தார். ஒவ்வொரு நாளும் மாலையில் திரு. செட்டியார் அவ‌ர்க‌ள் அங்கு வ‌ந்து த‌லைவ‌ர் காம‌ராச‌ரை உலா அழைத்துச் செல்வார். இருவ‌ரையும் முன்னே போக‌விட்டு நானும் ம‌ற்ற‌ ந‌ண்ப‌ர்க‌ளும் ப‌ல‌ அடிக‌ள் பின்னே தொட‌ர்ந்து செல்வ‌து வ‌ழ‌க்க‌ம்.
உற்சாகமாகப் பேசிக்கொண்டு அந்த இருவரும் சுற்றி வருவதை இன்றைக்கும் என்னால் மறக்க முடியவில்லை. உலா முடிந்து தலைவர் காமராசரை அவர் தங்கியிருந்த செட்டி நாட்டு மாளிகைக்கு கொண்டு வந்து விடுவதோடு தனது கடமை முடிந்து விட்டதென திரு.செட்டியார் கருதுவதில்லை. அங்கிருக்கும் சமையல்காரர் மற்றும் எல்லோரையும் அழைத்து தலைவருக்கு அளிக்கப்படும் உணவு மற்றும் எல்லா வசதிகளையும் தீர விசாரித்து அறிவார்.எதேனும் குறை இருக்கின்ற‌து என்ப‌த‌னைக்க‌ண்டால் த‌ன‌து மாளிகையில் இருந்து அதை உட‌னே அனுப்பி வைப்பார். என்னையும‌ழைத்து ஒருமுறை அவ‌ர் சொன்னார். த‌ம்பி த‌லைவ‌ரைப் பேணிப் பாதுகாக்க‌ வேண்டிய‌து ந‌ம்முடைய‌ க‌ட‌மை. ந‌ம்முடைய‌ ச‌முதாய‌த்தின் எதிர்கால‌ம் அவ‌ர‌து கையில் இருக்கின்ற‌து.எந்த‌க்குறையும் அவ‌ருக்கு இருக்க‌க்கூடாது என‌ அன்பொழுக‌க் கூறினார்.

வாழ்ந்த‌ போது அந்த‌ இர‌ண்டு பெரியோர்க‌ளும் எவ்வ‌ள‌வு உய்ர்ந்து நின்றார்க‌ளோ அதைப்போல‌ இன்ரு ம‌ர‌ண‌த்திலும் உய‌ர்ந்து நிற்கிறார்க‌ள்.
குறிபபு. தலைவர் பழ நெடுமாறன் இல்லத்தில் இருந்து கொடைககானல் செல்லும் வழியில் தலைவர் சொல்ல சொல்ல இந்தக் கட்டுரையை எழுதும் பேறு கிடைத்தது. தலைவர். பழ. நெடுமாறனவர்கள் தந்தை அறநெறியண்ணல் அவர்களிடம் கருமுத்து தியாக்ராசர் பற்றி நேரில் கேட்ட சமயம் அவரது அறையிலேயே என்னத் தஙக‌ வைத்து இரவோடு இரவாக கட்டுரையை எழுதித் தந்து ருக்மிணி ஆலையில் ந்டைபெற்ற விழாவிலும் கலந்து கொன்டார்கள். இந்த அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நினைவலைகள்

ப‌ல்லை கரிகால‌ன்
ம‌துரை மாநக‌ர‌த்தை விட்டு,இராம‌நாத‌புர‌ம் நெடுஞ்சாலை வ‌ழியாக ஓர் அம்பாசிட்டர் வண்டி வேகமாக வந்து கொண்டிருக்கிறது.அப்பொழுது தான் ஓட்டுனர் சிலைமான் ருக்மிணி ஆலைக்குப்போகிறோம் என் ஒருவாறு புரிந்து கொள்கிறார். எப்பொழுதும் தியாகராசனார் அவர்கள் போகும் இடத்தை முன்கூட்டி
சொல்வதில்லை. கிழக்கே போ, மேற்கே போ, வடக்கே போ என அவர் சொல்வதிலிருந்து தன், நாம் எங்கே போகிறோம் என ஓட்டுனரால் தெரிந்து கொள்ள முடியும். இதை அவரிடம் கெட்கவோ. மறுக்கவோ, ஓட்டுனராலே முடியுமா? எப்படி முடியும்!

இப்பொழுது பேருந்து நிறுத்துமிடமாகிய கோழிமேடு, விறகனூர், மதகு அணை,கோரி ஆகிய இடங்களெல்லாம் இவ்வளவு வீடுகளோ, செங்கறசூளைகளோ, மக்கள் நடமாட்டமோ இல்லாமல் காட்டுப்பாதையாக‌
இருந்த காலம்.

கோரிக்கு அருகில் வந்ததும் வண்டி நகர மறுக்கிறது. எதோதோ ஒலிகள்
கிளம்புகின்றன. வண்டியோ கிளம்புவதாகக் கானோம். தியாகராசரும் அவர்கள் துணைவியாரும் கீழே இறங்கி நிற்கிறார்கள். ஓட்டுநர் நண்டின் வயிற்றை திறந்து பார்ப்பது போல பார்த்தார். தன் கற்ற வித்தையெல்லாம் காட்டினார். பலன் கிட்டுவ‌தாக‌ இல்லை. இனி என்ன‌ செய்வ‌து ? த‌ண்ணீர் தேவையா?அதுதான் மாந‌க‌ராட்சி த‌ண்ணீர் வேண்டிய‌ ம‌ட்டும் குடித்து விட்டு வ‌ந்த‌தே. எரி எண்ணை தேவையோ? இல்லையோ ப‌ண‌த்தைக் கொடுத்து அத‌ன் வ‌யிறு நிர‌ம்ப‌ ஊற்றியாகி விட்ட‌தே. பிற‌கு என்ன தான் தேவை?ஓட்டுந‌ர் ம‌ண்டையைப் போட்டு குழ‌ப்பிகொண்டிருந்தார். கால‌ம் காட்டியோ இர‌வு ஏழு ம‌ணி என‌க் காட்டிக்கொண்டிருந்த‌து. இவ்வ‌ள‌வு நேர‌மும் பொறுமையாக‌ இருந்த‌ தியாக‌ராச‌னார் பொறுமை இழ‌ந்து ம‌டைய‌ன் இடைக்காட்டிலே கொண்டு வ‌ந்து நிறுத்திட்டான். ந‌ல்லாப்பார்த்துக் கொண்டு வ‌ந்திருக்க‌க்கூடாதா!ம‌ட‌ப்ப‌ய‌ல் என‌த்திட்டிக்கொண்டார்.

அவ‌ச‌ர‌த்தில் அண்டாப்பாத்திர‌த்தில் கை நுழையாது என்பார்க‌ள். அது போல‌
ஓட்டுந‌ருக்கு கையும் ஓட‌வில்லை. காலும் ஓட‌வில்லை. அந்த‌ குளிர்ந்த‌ நேர‌த்திலும் ஓட்டுந‌ருக்கு விய‌ர்த்து கொட்டிய‌து. எப்போதும் தியாகராசனாருக்கு கோபம் வந்து, யாரையாவது திட்டவேண்டுமென்றால் மடையன் என்பது தான். அவர் அடிக்கடி உபயோகிக்கும் சொல். அந்த சொல் அவருக்கு அடிக்கடி வருகின்றது ஏன்? என சிந்தித்தேன். சைவ சித்தாந்த கழகத்தினர் வெளியிட்டுள்ள தமிழ் கை அகராதியில் மடையா என்பதற்கு சமையல்காரன் , சமைப்பவன் என அர்த்தம் என த்தெரிந்து கொன்டேன். அப்புறம் தான் அவர்கள் சொல்லும் பொருளை ஒருவாறு புரிந்து கொள்ள முடிந்தது.

pallai karikaalan article about karumuttu thiagarajan chettiarஓகோ என கன்னத்தில் கை வத்து ஆச்சரியப்படுகிறார் ஒரு வயதான மூதாட்டி. ஏன்ன இருந்தாலும் அப்படிப்பட்ட ஒரு மனுசருக்கும் இப்படி வண்டிலே வர வேண்டிய சமயம் வந்து விடுகிறது பார் எனக் கூறிக்கொள்கிறாள்.

சிலைமானில் வண்டி வந்து நிற்கிறது. தியாகராச‌னார் அவர்களை எதிர்பார்க்கவில்லை.நில‌வு த‌ன் குளிர்ந்த‌ ஒளியைப்ப‌ர‌ப்பிக்கோண்டிருக்கிற‌து. தும்பை ம‌ல‌ர் போன்ற‌ தியாக‌ராச‌னாரின் வெண்ணிற‌ ஆடையில் நில‌ வொளி
பட்டு மேலும் அவ்வாடையை வெண்மையாக்கி க் கொண்டிருந்தது. பாலம் வழியாக இருவரும் நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

கோனார் தோப்புக்கு அருகில் ஆலமரங்கள் அடர்ந்து இருந்தது. அங்கே நிலவொளி மரத்தினூடே நுழைந்து சாலையில் பட்டு வெண்முத்துப் பரப்பினாற்
போல் தோன்ரியது.இப்படிபபட்ட இரவு நேரங்களில் யாருக்கும் அந்த இடம் பயத்தை உண்டு பண்ணத்தான் செய்யும் ஆனால் அதையெல்லாம் தியாகராசனார் கவனித்ததாகத் தெரியவில்லை. நடந்து கொண்டே இருந்தார்கள்.

அலை நுழைவு வாயிலில் உள்ள காவல்காரர் இந்த இருவரையும் கண்டு
கண்களை அகல விரித்துக் கவனித்தார். யார்? தியாகராசனார் அவர்கள் தானா!ஆம் அவரே தான்!!எனப்பதறினார். வணக்கம் செய்கிறார். பதில் வணக்கம் கிடைகிறது. காவல்காரர் அச்சரியத்தில் மரமாக நிற்கிறார்.




மின்சார இல்லம் செல்கிறார். மிகண்காணிப்பாளர் எழுந்து வணன்குகிறார். தொலைபேசி கொடுக்கப்படுகிறது.மீனாட்சி ஆலைக்கு பேசுகிறார். பேசி முடிந்ததும் வெளிவருகிறார்கள்.
முன்னால் சிற்றுண்டிசாலையாக இருந்த இடத்திற்கு அருகில் கட்டிட வேலைக்காக மணல் குவிக்கப்பட்டிருக்கிறது. இருவரும் அமருகிறார்கள். மணலைக் கிளறிக்கொண்டும் அள்ளித்தூவிக்கோண்டும் ஏதோதோ பேசிக்
கோண்டும் இருக்கிறார்கள். அப்பொழுது தமிழ் மன்னன் தன் இல்லத்தரசி கூட உப்பரிகையில் உட்கார்ந்திருப்பது போலவே எங்களுக்கு தோன்ருகிறது.

சிறுது நேரத்திற்கெல்லாம் ஆலையின் உள்ளே ஒவ்வொரு பகுதியாக சுற்றி பார்க்கிறார்கள். அப்பொழுது காலில் இருந்த மிதியடியை காணவில்லை எனச்
சொல்கிறார். மணலில் தியாகராசனார் அவர்கள் விட்டு வந்த மிதியடியை எடுத்து வந்து அவர்முன் வைத்து பின்னால் மூன்றடி நகன்று நிற்கிறேன். மிதியடியை காலில் மாட்டிக் கொண்டு கருமமே கண்ணாகச் செல்கிறார்கள்.

தமிழ்த்தாயின் தலைமகன் தமிழுக்கு செய்த தொண்டு, எழுத்தாற்றல்,
பேச்சாற்றல் இவைகளை எல்லாம் நினைக்கும் போது அவரைப் போற்றிப் புகழமால் எந்த ஒரு தமிழ் குடிமகனும் இருக்க முடியாது.

அவரைப் பார்க்கிறேன!எண்ணுகிறேன்!!
நினைக்கிறேன்!!!
தொட்ர்ச்சியாக நினைவலைகள் நீண்டு கொண்டே இருக்கின்றன.
பெருந்துறை பயணம்


டாக்டர் சுப.அண்ணாமலை

க‌லைத்த‌ந்தை க‌ருமுத்து தியாக‌ராச‌ச்செட்டியார் அவ‌ர்க‌ள்,த‌ம் சிற‌ப்புப் பெய‌ருக்கு மிக‌வும் ஏற்புடைய‌ பெரியார் என்ப‌தை,அவ‌ர்க‌ளுடன் ஒரு முறை திருபெருந்துறைக்குப் பய‌ணம் மேற்கொண்ட பொழுது அறிந்து மகிழ்ந்தேன்.இல‌க்கிய‌க் க‌லையில் க‌லைத்த‌ந்தையார் அவ‌ர்க‌ளுக்கு எத்துணை மிகுதியான புல‌மை உண்டோ அத்துணை க‌ட்டிட்ச் சிற்ப க‌லைக‌ளிலும் உண்டு என்ப‌தை அப்பெருந்துறைப் பய‌ணத்தில் அறிந்தேன்.என்னளவில் அது ஒரு க‌லைபய‌ணமாகவும் அமைந்த‌து.

திருப்பெருந்துறை இன்று ஆவுடையார் கோயில் என‌ வ‌ழ‌ங்குகின்றது.த‌ஞ்சை மாவ‌ட்டத்துப் பேராவூருணிக்கு அருகில் உள்ள அத்திருத்த‌ல‌ம் மாணிக்க‌வாச‌ர்க்கு இறைவ‌ன் குருபிரானாக‌ எழுந்த‌ருளி உப‌தேச‌ம் செய்த‌ சிற‌ப்புடைய‌து. அங்குள்ள‌ திருக்கோயில் மாணிக்க‌வாச‌க‌ர் திருப்ப‌ணி செய்து க‌ட்டிய‌தாகும்.

அங்கு மாணிக்கவாசகருக்குத் தனி சன்னதி உண்டு. திருக்கொயிலின் சிறப்பு வழிபாடுகள் யாவும் அவருக்கே நிகழ்த்தப்பெறும்.அத்திருக்கோயிலின் மற்றொரு சிறப்பு வழிபாடுகள் யாவும் அவருக்கே நிகழ்த்தபெறும்.அத்திருகோயிலின் மற்றொரு சிறப்பு,அங்கு திருமூலத்தானத்தில் இறைவன் அருவமாக வீற்றிருக்கின்றான் என்பது இறைவியும் தன் சன்னதியில் அங்ஙனமே வீற்றிருக்கின்றான் என்பது. இறைவியும் தன் சன்னதியில் அங்ஙனமே வீற்றிருக்கின்றாள். ஆவுடையார் என்பது இறைவனின் திருப்பெயர். ஆ=பசு அதுவே உயிர்,உயிர்களை உடையவன் அதாவது உலக உயிர்கள் அனைத்திற்கும் தலைவன் என்பது பொருள்.

ஆவுடையார் கோவிலின் ம‌ற்றொரு சிற‌ப்பு, அது அழ‌கிய‌ சிற்ப‌ங்க‌ளை ஏராள‌மாக‌க்கொண்டுள்ள‌து என்ப‌தாகும். க‌லைத்த‌ந்தை அவ‌ர்க‌ளுட‌ன் அங்கு சென்ற‌போது, அக்கோயில் க‌ட்ட‌ட‌க்க‌லைச்சிற‌ப்பும் உடைய‌து என்ப‌தை அவ‌ர்க‌ள்
சுட்டிக்காட்டி விள‌க்கினார்க‌ள். ப‌ல‌ நூல் ஆலைக‌ளையும் த‌ன் ஆட்சியில் வைத்துத் திற‌ம்ப‌ட‌ ந‌ட‌த்தும் ஒரு தொழில‌திப‌ர் க‌ட்டிட‌க் க‌லையிலும் மேதையாக‌ விள‌ங்குவ‌தைக் க‌ண்டு பெருவிய‌ப்புற்றேன். இது ம‌ட்டும் அன்று, பிறிதொன்றும் அறிந்து விய‌ந்தேன். க‌லைத்த‌ந்தையார் அவ‌ர்க‌ள் மாணிக்க‌வாச‌க‌ர் அருளிய‌ திருவாச‌க‌த்தை எழுத்து எண்ணி ஓதிய‌வ‌ர்க‌ள்.அத்திருமுறையில் எந்த‌த் திருப்பாட‌லையும் எச்ச‌ம‌ய‌த்திலும் நினைவு கூற‌ வ‌ல்ல‌வ‌ர். அதில் வ‌ரும் வ‌ரிக‌ளில் உள்ள‌ பொருளைத் திருப்பெருந்துறைக் கோயில் அமைப்புட‌ன் இணைத்து உண‌ர்ந்திருக்கின்றார்களென்ப‌து தான் விய‌க்க‌த்த‌க்க‌ அந்த‌ச்செய்தியாகும்.

அத்திருக்கோயிலில் மூலத்தானத்தின் சன்னதியில் வழிபாட்டிற்காக நின்றோம்.அப்பொழுது கலத்தந்தையார் அவர்கள் அச்சன்னதியில் உள்ள மேல் விதானத்தைச்சுட்டிக்காட்டி அப்பொழுது நடைபெற்றுவரும் திருப்பணி குறை உடையது என்று கூறினார்கள். அத்திருப்பணியில், மேல் சாரங்கள் அமைக்கப் பெட்டிருந்த்ன. அவை அஙுகு இருத்தல் கூடாது என்பது கருத்து. முன்னைய திருப்பணிக்கு சிறிதளவு ஒளி சன்னதிக்குள் வரும் அமைப்பே அங்கு இருந்தது. இப்பொழுது பெரிய சாளரங்களை அமைத்துக் கோயிலின் கட்டடக்கலையின் நுணுக்கத்தை மாற்றிவிட்டனர் என்று அவர்கள் கூறினார்கள்.சன்னதிக்குள் மிகச்சிறிய ஒளி பரவ, மூலத்தனத்தில் திருவிளக்கு ஒளி விட அருவமாக எழுந்தருளியிருக்கும் பெருமானின் சோதியினை மனக்கண்ணில் கண்டு வழி படத்தக்கதாக அந்த சன்னதி மாணிக்கவாசகரால் அமைக்கப்பட்டது என்று கூறி கலைத்தந்தையார் அவர்கள், அதற்கு சான்றாகத்திருவாசகத்திருப்பாடல் ஒன்றை எடுத்துக் காட்டினார்கள். அத்திருப்பாடலில் "திணிந்ததோர் இருளில் தெளிதூ வெளியே" என்னும் வரி வருகின்றது . ந்றைந்து கடக்கின்ற மல இருள் விலகும் வண்ணம் எழுந்த தெளிவான ஞானம் தந்து விளங்கும் தூய வெளியான அருவப்பெருமாளே என்பது இவ்வரிய போருள். இந்தப்பொருளுக்கு ஏற்ப மூலத்தானத்தின் சன்னதியை மாணிக்கவாசகர் அமைத்திருக்கின்றார். அது இன்று யாருக்கும் தெரியாதவாறு இன்றைய திருப்பணியில் சாளரங்கள் அம்மைக்கப்பட்டுள்ளன என்று விளக்கினார் கலைத்தந்தை. திருவாசகத்தினில் ஈடுபாடு கொண்டு அதை நாடோறும் வைகறை போதில் ஓதும் வழக்கம் உடைய அவர்கள், திருப்பெருந்துறைக் கொயிலின் நுணுக்கமான கட்டிடக்கலை அமைப்புக்களை எல்லாம் திருவாச‌க‌த்தோடு ஒன்றி உண‌ர்ந்திருக்கின்றாரிக‌ள் என்ப‌தை அறிந்து விய‌ந்துநின்றேன். குறிப்பு: 16.6.2006 ல் வான‌தி திருநாவுக்க‌ர‌சு அவ‌ர்க‌ட்கு தேச‌த்த‌ந்தையும் க‌லைத்த‌ந்தையும் க‌ட்டுரைக‌ளை அனுப்பி வைத்தேன். அவ‌ர் க‌ட்டுரைக‌ள் அனைத்தும் ந்ன்றாக‌ இருக்கின்ற‌ன‌ என‌ வாழ்த்தினார்க‌ள்.

k.shanmugasundaram article about karumuttu thiagarajan chettiar

நினைவு அலைகள். க‌.சண்முகசுந்தரம். நீங்கள் படிக்கும் இக்கட்டுரையினை வலைப்பதிவில் ஏற்றிய ச.இளமுருகனின. தந்தை. முத்தழ்க்காவலர் அவர்களால் கலைத்தந்தை கருமுத்து தியாகராசச்செட்டியார் அவர்களது கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி ஆகிய அலுவலகங்களின் மேலாளராக பணிபுரிந்தவர். பழ நெடுமாறன் ஐயா அவர்களின் குடும்ப நண்பர். விவேகநந்தா அச்சகத்தில் இருந்து மீனாட்சி அலுவலகம் சென்றார். "நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ்வுல‌கு." நேற்று இருந்த‌வ‌ன் ஒருவ‌ன் இன்று இல்லாம‌ல் இற‌ந்து போனான் என்று சொல்ல‌ப்ப‌டும் நிலையாமை ஆகிய‌ பெருமை உடைய‌து இவ்வுல‌க‌ம் என்ற‌ குற‌ட்பாவை மெய்ப்பித்த‌து ந‌ம‌து க‌லைத்த‌ந்தையாரின் எதிர்பாராத‌ திடீர் ம‌றைவு. வைய‌த்து வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வ‌த்துள் ஒருவ‌ராக‌ உலகத்தோரால் மதிக்கப்பட்டு வந்த நமது பெருமதிப்பிற்குரிய கலைத்தந்தை கருமுத்து தியாகரசச்செட்டியார் அவர்கள் 29.7.1974 திங்கட்கிழமை காலை சுமார் 7 மணிக்கு திருக்குற்றாலத்தில் பூத உடலை நீத்து புகழுடம்பை எய்தினார்கள்

முதல்நாள் அதாவது 28.7.1974 ஞாயிறன்று வழக்கம் போல் உற்சாகமாகப் பணியாற்றியிருக்கிறார்கள். 29.7.74 அன்றும் வழக்கம் போல் 5 மணிக்கு எழுந்திருந்து உலாவிவிட்டு அடுத்துள்ள புலியருவியில் நீராடச் செல்லும் பொழுது தான், அவர்களுடைய ஆவி பிரிந்திருக்கிறது. அச்செய்தியை அன்று காலை 9 ம‌ணிக்கு ம‌துரை மீனாட்சி ஆலை அலுவ‌ல‌க‌ம் சென்ற‌தும் அறிந்து அதிர்ச்சியுற்றேன். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக அன்னாருடைய நிறுவனங்களில் பணியாற்றிய‌ போது நிகழ்ந்த ஒரு சில நிகழ்ச்சிகளை நினைவுக்கு கொண்டு வந்து இந்த நினைவுக்க‌ட்டுரையை ப‌டைப்ப‌தின் மூல‌ம் க‌லைத்த‌ந்தையாருக்கு என‌து அஞ்ச‌லியைச் செலுத்த‌ விழைகின்றேன். கோம்பையில் அஞ்ச‌ல‌க‌ அதிகாரியாக‌ப் ப‌ணியாற்றிய‌ ச‌ம‌ய‌ம், ம‌துரை மாவ‌ட்ட‌த் த‌மிழ்த் தொண்ட‌ர் க‌ழ‌க‌ம், கோம்பைத் த‌மிழ் இல்ல‌ம் என்ற‌ இரு த‌மிழ்க் க‌ழ‌க‌ங்க‌ள் நிறுவி, த‌மிழ்த்தொண்டு ஆற்றிக்கொண்டிருந்தேன். அக்க‌ழ‌க‌ங்க‌ளின் த‌லைவ‌ன் என்ற‌ முறையில் க‌லைத்த‌ந்தையுட‌ன் தொட‌ர்பு கொள்ள‌ நேர்ந்த‌து. பின்ன‌ர் திருச்சி உய‌ர்திரு முத்தமிழ்க் காவ‌ல‌ர் அவ‌ர்க‌ளுடைய‌ முய‌ற்சியால் அஞ‌ச‌ல‌க‌ப்ப‌ணியிலிருந்து வில‌கி க‌ருமுத்து அவ‌ர்க‌ளின் கீழ் ப‌ணியாற்றும் பேறு 1954 ஆம் ஆண்டு என‌க்குக் கிட்டிய‌து. முதன்முதலில் கப்பலூர் தியாகராசர் நூற்பு ஆலைக்கட்டிடங்களிஅ கட்டும் பணியில் ஈடுபட்டேன். நமது கலைத்தந்தையவர்கள் கட்டிடக்கலையில் தேர்ந்த விற்பன்னர். அக்கலையில் அவர்களுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. நாட்டில் எத்தனை கட்டிடங்கள் இருந்தாலும், அவர்களுடைய கட்டிடங்களை யாரும் எளிதில் கண்டுபிஉத்துவிடும் நிலையில் தனித்தன்மை வாய்ந்தவை அவை எத்தனை பணிகள் இருந்தாலும் இரவு பகல் எந்த நேரத்திலும் திடீரென கட்டிட‌ வேலை நடைபெறும் இடத்திற்கு வந்து பார்வையிடுவார்கள். ஒருநாள் மாலை 6 மணிக்கு கட்டிட க் கொத்தனார் பொறியாளர் மற்றும் யாவரும் வேலை முடிந்து வீட்டிற்குச் சென்று விட்டார்கள். நான் மட்டும் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். செட்டியார் அவர்கள் வந்திருப்பதாக காவல் காரர் வந்து கூறினார். நான் அவர்களை க் காணச் சென்றேன். சாரத்தின் மீது ஏறி விரைவாக மேல் மாடிக்குச் சென்று கொண்டு இருப்பதைக் கண்டேன். அவரை விட இருபத்தைந்து வயது இளைஞனான நான் சாரத்தில் பயந்து பயந்து ஏறினேன் ஆனால் அவர்களோ ச்றிதும் அச்சம் இல்லாமல் விறுவிறுவென சாரத்தின் மீது எனக்கு பயத்தைக் கொடுத்தது. மேல்மாடிக்கு சென்றதும், அங்கிருந்த 200 லிட்டர் காலி ப்பீப்பாவை சுவரின் ஓரத்திற்கு உருட்டினார்கள். வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு அந்த பீப்பாயின் மீது ஏறி, அதிலிருந்து இரண்டாவது மாடிக் கட்டிட கழிவுநீர் வாயக்காலுக்குத் தாவி ஏறி நின்று கொண்டு,அதில் கிடந்த ஒரு செங்கல்லை எடுத்துக்கீழே போட்டு விட்டுக் கீழிறங்கினார்கள். மேல்மாடிக்கு ஏறிவரும் பொழுதே கழிவுநீர் வாய்க்காலில் கிடந்த செங்கல்லை அவருடைய கண்கள் கண்டு விட்டன போலும். இந்த இடத்தில் ஒரு செங்கல் கிடக்கிறது. அதை வேலையாளை விட்டு அப்புறப்படுத்திவிடு என்று எனக்குக் கட்டளை யிட்டுச் சென்று இருக்கலாம். ஆனால் கட்டிடக்கலையில் உள்ள ஈடுபாடு அவரையே அந்தப் பணியில் ஈடுபடச்செய்தது . அது மட்டுமல்ல, எங்களைப் போன்றோருக்கும் அது ஒரு படிப்பினையாகவும் அமைந்தது. ஒரு கோடீஸ்வரர் இது போன்ற சிறுபணியினைத்தானாக முன்வந்து செய்யும்பொழுது நாமெல்லாம் எம்மாத்திரம் மறுநாளே கொத்தனார்கட்கு எச்சரிக்கை விடுத்து இதுபோன்ற தவறுகள் எற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ளும் படி கட்டளையிட்டேன் திருப்பரங்குன்றம் தியாகராசர் பொறியியற் கல்லூரி கட்டிட பிரிவு மேலாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த பொழுது கற்கட்டிடத்தை வந்து அடிக்கடி பார்வையிடுவார்கள். ஓரிடத்தில் ஒரு சிறு மற்றம் செய்ய விரும்பினார்கள். அம்மாற்றம் செய்வதாயிருந்தால் ஏற்கெனவே கட்டி முடித்த சுமார் 3,4, அடி கட்டிடத்தைப்பிரித்து மீண்டும் கட்ட வேண்டும். அதற்கு மேற்கொண்டு ரூபாய் 5000 க்கு மேல் செலவாகும். செலவைச்சுட்டிக்காட்டினேன். உடனே எத்தனையோ நூறு ஆண்டுகளுக்கு இருக்கப் போகிற கட்டிடம் இதில் போய்ரூபாய் 5000 அதிகச் செலவை பற்றி யொசிக்கலாமா? உடனே நாளையே பிரித்து வேலையைப் பார்க்கச் சொல் என்று கட்டளையிட்டார்கள். தனக்குத் திருப்தியில்லையென்றால் செல‌வைப்ப‌ற்றி சிறிதும் யோசியாம‌ல், திருப்தி ஏற்ப‌டும் வ‌ரை ம‌ற்ற‌ங்க‌ள் செய்ய‌த்த‌ய‌ங்க‌ மாட்டார்க‌ள். அலுவ‌ல‌க‌ங்க‌ளில் நாற்காலிகள் ஒழுங்காகப் போடப்பட்டிருக்க வேண்டும். இங்கொண்றும், அங்கொன்றுமாக தாறுமாறாகப் போடப்பட்டிருந்தால் அவர்களுக்குப் பிடிக்காது. கற்கட்டிடங்களில் கற்களும் நூல் பிடித்தாற்போல ஒரே சீராக இருக்க வெண்டும். கால் அங்குலம் வித்தியாசமிருந்தால் கூட அவர்களுடைய கண்கள் காட்டிக் கொடுத்து விடும். ஏனப்பா அதோ தெரிகிற அந்தக்கல் கால் அங்குலம் விலகி இருப்பதாகத்தெரிகிறதே என்பார்கள். அளந்து பார்த்தால் சரியாக கால் அங்குலம் வித்தியாசம் தென்படும். எச்செயலையும் கலைக்கண்கொண்டு நோக்கி வந்த‌தால் அவர்களுக்கு கலைத்தந்தை என்ற பெயர் வாய்த்தது. சுமார் மூன்ரு கோடி ரூபாய்கள் அறக் கட்டளைகள் மூலம் செலவழித்து பாலர் பள்ளி ஒன்று, தொடக்கப்பள்ளிகள் ஐந்து உய‌ர்நிலைப்ப‌ள்ளிக‌ள் ஏழு, ஆசிரிய‌ர் ப‌யிற்சிக் க‌ல்லூரி ஒன்று , க‌லைக்க‌ல்லூரி, தொழில்நுட்ப‌க் க‌ல்லூரிக‌ள் இர‌ண்டு, பொறியிய‌ற் க‌ல்லூரி ஒன்று, என‌ப்ப‌ல‌ நிறுவி சீரும் சிற‌ப்புமாக‌ ந‌டைபெற‌ வ‌ழி வ‌குத்திருக்கிறார்க‌ள். இன்று 20000 க்கு மேற்ப‌ட்ட‌ குடும்ப‌ங்க‌ள், அவ‌ர்க‌ளால் ந்றுவ‌ப்ப‌ட்ட‌ தொழில‌க‌ஙக‌ளிலும், கல்விக்கூட‌ங்க‌ளிலும் ப‌ணியாற்றி வ‌ருவ‌த‌ன் மூல‌ம் பிழைத்து வ‌ருகின்ற‌ன‌ என்ப‌தையாரும் ம‌றுக்க‌ இய‌லாது. வாழ்க‌ க‌லைத்த‌ந்தையின் புக‌ழ். வ‌ள‌ர்க‌ அவ‌ர்க‌ளால் தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌ ப‌ணிக‌ள். ''''கலைத்தந்தையின் தமிழ்த்தொண்டு இன்று மதுரையில் இல்லையே................கருணைதாசன்'. நெருணல் ஊளனொருவன் ஈன்ரில்லை..'என்ற வள்ளுவரின் வாக்கினை நினைத்தேன். நேற்றூ நடந்தது போல இருக்கிறது. 29.7.74 இந்த நாளை நினைக்கும்போது கண்கள் குளமாகின்றன. அன்று காலை மீனாட்சி ஆலையினுள் அமைந்துள்ள அந்த வளமான வளமனையைச் சுற்றியுள்ள மக்கள் கூட்டம்.. கண்ணீர்க்கடலில் மூழ்கியிருந்தது. அணிஅணியாக மலர்மாலைகள் தொழிலாளர் அணி ஆசிரியர் அணி, மாணவர் அணி, வங்கி அணி, வணிகர் அணி, தமிழறிஞர் அணி, அரசியல் தலைவர்களின் அணி, இத்தனை அணிகளின் மக்களும் கதறிய காட்சி இன்று நடந்தது போல உள்ளது. தமிழ்த்தாயே! ஏன் உன் தமிழ் நெஞ்சங்களை சோதிக்கிறாய் இந்தத்தலைமகனை ஏன் எடுத்துக்கொண்டாய்," என்று கதறின அவரோடு பழகிய தமிழ் நெஞ்சங்கள். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்பக்கம் நோக்கினும் தமிழ் கூட்டங்கள். எங்கு திரும்பிடினும் தமிழ்ப்பெரியார்கள் என்று இருந்த மதுரை மாநகரமே இப்பொழுது வெற்றிட‌மாக‌க் காட்சிய‌ளிக்கிற‌து. மதுரையில் தான் தமிழ்பேரறிஞர்கள் , பெரும்புலவர்கள் தமிழை வளர்த்து வருகிறார்கள், என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். அதற்கு காரணம் கலைத்தந்தை தியகராசர் மதுரையில் இருக்கிறார் என்ற நம்பிக்கைதான். அவர்கள் ஆதரித்த தமிழ்ப்பெரியார்களான முனைவர்கள் நாவலர் சோமசுந்தர பரதியார்,அ.சிதம்பரநாதனார் பைந்தமிழ்ப்பாவலர் அ.கி.பரந்தாமனார்,உரைவெந்தர் ஒள்வை துரைசாமி, முனைவர் இலக்குவனார், காரைக்குடி வ.சு.ப. மாணிக்கணார், திருச்சி முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், மெ.சுந்தரம் போன்றோரை அரவனைத்து ஆதரித்துத்தமிழைக் காத்து வந்தார்கள்.

திரு.வி.க ரா.பி.சேதுப்பிள்ளை,மறைமலைஅடிகள், அறிஞர் அண்ணா ஆகியோரிடம் அடங்காக்காத்ல் கொண்டு அவர்களின் நூல்களையெல்லாம் செட்டியார் அவர்கள் கற்றறிந்தார். போலி தமிழ்ப்பற்று அவரிடம் இல்லை.
நெஞசார்ந்த தமிழ்ப் பற்றால் அவர் வழ்ந்தார், தமிழ்ப்பற்றாளர்களை வரவெற்று நல் விருந்தோம்பி வளர்த்த பெருமை கலைத்தந்தை அவர்களையே
சாரும்.


அவரோடு நெருங்கிப்பழகும் வய்ப்புக் கிட்டியது எனக்கெல்லாம் பெருமை தரக்கூடியதே. எந்தத்தமிழ் விழாவாக இருந்தாலும், எங்கள் மதுரை எழுத்தாளர் மன்ற விழாவாக இருந்தாலும் முதலில் கலைத்தந்தையவர்களை போய்ப்பார்ப்போம், என்ன கருத்து க்கூறுகிறார் என்று கேட்போம். 1964 என்று லருதிகிறேன். தேவநாகரி வரிவடிவத்தைப் புகுத்த டில்லி தோள்தட்டிய நேரம். எங்கள் மன்றத்தின் சார்பில் தேவநாகரி வடிவம் தமிழில் புகுந்தால் தமிழ் எவ்வாறு என்பதற்குப் பல சான்றோர்களின் கருத்துக்களை திரட்டினோம். நேரு அவர்கள் மதுரை வரும்பொழுது ஒரு அறிக்கையினை கொடுப்பது என்று ஆயத்தம் செய்தோம். அதற்காக கலைத்தந்தையவர்களைப்பார்த்தோம். பிறமொழியறிஞர்களின் கருத்த்க்களையெல்லாம் தடுத்தேயாக வேண்டும்
என்று ஆணித்தரமாகக் குரலும் கொடுத்தார்கள். இதைதடுக்க வில்லையெனில் தமிழ் மெல்லச் சாகும் என்றார்கள்.
அப்பேர்ப்பட்ட தமிழ் நெஞ்சத்தை இன்று நினைவு கூர்வது இன்றியமையாத
செயலாகும்.
1966ம் ஆண்டை என்னால் மறக்கமுடியாது. மொழிநூலறிஞர் தேவநேயப்பாவாணர் எழுதி வைத்துள்ள நூல்களை அச்சாகி வெளிக்கொணர
வேண்டும் எண்ற எண்ணத்தில் மதுரை எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் ஒரு
விழாக் குழு அமித்தோம். முனைவர் மெ.சுந்தரம் அவர்கள் செயலாளராகவும் திரு.பு. மனோகரன் அவர்கள் பொருளாளராகவும் நான் துணைச்செயலாளராக‌வும் ஆக்க‌ப்ப‌ட்டோம். க‌லைத்த‌ந்தை அவ‌ர்க‌ளை த‌லைவ‌ராக‌ ஏற்று செய‌ல்ப‌ட‌லாம் என்றுஒப்புதல் கேட்க நானும் மெ.சு. அவர்களும் சென்றோம். நீண்ட நேரம்
பாவாணர் அவர்களைப்பற்றிப் பேசினார்கள். நாங்கள் வியந்து போனோம்.
. தமிழுக்கே மொத்த அகராதியாகத்திகழும் ஆழ்ந்த கடல் போன்ற அறிஞரை
ம‌துரையில் தான் பாராட்ட‌வேண்டும். நிக‌ழ்ச்சிக‌ளில் க‌ல‌ந்து கொள்கிறேன். குழுத்
த‌லைவ‌ராக‌ வேண்டாம் என்று கூறினார்க‌ள்.
அத‌ன் குழு செய‌ல்ப‌ட்ட‌து. அவ்விழாவில் முத்த‌மிழ்க் காவ‌ல‌ர் கி.ஆ.பெ. த‌லைமை தாங்க‌,க‌லைத்த‌ந்தைய‌வ‌ர்க‌ள் ஆற்றிய‌ உரையில் அத்துணை த‌மிழ்
வேட்கையிருந்த‌து என்ப‌தை ப‌ர்ர்க்க‌லாம். அதில் ஒரு ப‌குதி.
நீரால், நெருப்பால், க‌ரையானால், கால‌த்தால் அழிவுற்றும், ஆரிய‌ர், க‌ள‌ப்பிர‌ர், ப‌ல்ல‌வ‌ர், ஐரோப்பிய‌ர் முத‌லிய‌ வேற்றுவ‌ரால் மாசுப‌டுத்த‌ப்ப‌ட்டு தாழ்வுற்றிருந்த‌ த‌ன்னேரில்லாத‌ த‌மிழ் மொழி, அர‌சு க‌ட்டிலேறி வீற்றிருக்கும் கார‌ண‌மாக‌த்
த‌ன்ப‌ழ‌ம்பெரும்பெருமையை மிண்டும் எய்தி அற‌ங்கூறும் அவைக‌ளிலும்
ஆட்சி ம‌ன்ற‌ங்க‌ளிலும், ஆண்ட‌வ‌ன் திருக்கொயில்க‌ளிலும், ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ங்க‌ளிலும் உரிய‌ இட‌ம் பெற்றூச் சிற‌ந்து விள‌ங்குமென்று
பாவாண‌ர் பொன்ற‌ அருந்தொண்டுபுரிந்த‌ த‌மிழ்ப்புல‌வ‌ர்க‌ள் ஆறுத‌லும்
ம‌கிழ்ச்சியும் அடைய‌லாம்.தமிழாசானாகவும், மொழிநூற் புலவராகவும் தொண்டு புரிந்து சிறப்பினால்
தமிழன்னையின் அரசிருக்கையாகிய நமது மதுரை நகர் அவரைபாராட்டிப் பொற்கிழிதந்தும் பொன்னாடைப் போர்த்தியும் மகிழ்கின்றது. என்று அழகாக‌க் கூறி
பாவாணரின் திறமையைப் பாராட்டினார்கள். இப்பேர்ப்பட்ட தகை சான்ற க‌லைத‌ந்தை இன்று ந‌ம்மிடையே இல்லையே என‌ ஏங்கும் உள்ள‌ங்க‌ளில் நானும் ஒருவ‌ன் . க‌லைத்த‌ந்தை விட்டுச் சென்ற‌ அந்த‌ த‌மிழ்ப் ப‌ணியை வ‌ழிவ‌ழியாய்த்
தொட‌ர‌லாமே. (குறிப்பு) த‌மிழ்ப்பாவை எனும் மாத‌ம் தோறும் வெளியான‌ இத‌ழின் ஆசிரிய‌ர். ஞ‌ன‌ஒளிவுபுர‌ம் ம‌துரை மாந‌க‌ராட்சி உறுப்பினாராக‌வும்
பொதுப்ப‌ணிய‌ற்றினார்க‌ள். த‌ச‌த்த‌ந்தையும் க‌லைத்த‌ந்தையும் நூலை அவ‌ருக்கு அனுப்பினேன். ப‌ழைய‌ க‌ட்டுரைக‌ளை அழ‌காக‌ அச்சிட்டு வெளியிட்டு இருக்கின்றிர்க‌ளென‌ப்பாராட்டி எழுதியிருந்தார்க‌ள். அவ‌ர்க‌ள் எழுதிய‌ க‌டித‌ம் என்னிட‌ம் உள்ள‌து. அவ‌ர‌து தொண்டு இன்று ம‌துரையில் இல்லை. அவ‌ருக்கு இத‌ய‌ அஞ்ச‌லி. ச.இளமுருக‌ன் 10.8.2010

பட்டி மன்ற பேராசிரியர் சாலமன் பாப்பையா ==

'''கருமுத்து தியாகராசச் செட்டியார் அவர்கள் ஆற்றிய தொண்டுகளில் எஞ்சி நிற்பது கட்டடக்கலையா, அறக்கட்டளையா, தமிழ்ப்பற்றா, தொழிற்கூடங்களா, அதனைச்சார்ந்த‌ குடியிருப்பு வ‌ச‌திக‌ளா?
பேராசிரியர் சாலமன் பாப்பையா'''
தியாகராசர் கல்லூரிகள் அமைந்திருக்கும் இடங்களை பார்த்தவுடனே நமக்குதோன்றுவ‌து ம‌லைப்பு, விய‌ப்பு, பிர‌மிப்பு.
தியாக‌ராச‌ர் க‌லைக்க‌ல்லூரியின் வ‌ட‌க்கே வைகை ஆறு, வைகை ஆற்றினை
நோக்குங்கால் பெரும்பாலான‌ நாட்க‌ளில் கைவைத்தால் அந்த‌ அள‌வு த‌ண்ணீர்
இருக்கும். வெள்ள‌ம் பெருக்கெடுத்தால் அம‌ம‌ம்மா அது சுனாமி போல‌ வ‌ரும்.
அப்ப‌டிக்க‌ரை தாண்டிய‌ வெள்ள‌ம் க‌ல்லூரி விடுதிக‌ள், அலுவ‌ல‌க‌ங்க‌ள் உள்ள‌ மேடான‌ ப‌குதிக‌ள் ஒரே வெள்ள‌க்காடாக‌ காட்சிய‌ளிக்கும். 1960ல் அதுபோல‌ வெள்ள‌ம் வ‌ந்த‌து. க‌ல்லூரி விடுதிக‌ளின் இர‌ண்டாவ‌து மாடி வ‌ரை வெள்ள‌ம் இருந்த‌து. வெள்ள‌ம் வ‌டிவ‌த‌ற்கு மூன்று நாட்க‌ளாகின‌. க‌ல்லூரி விடுதியில் த‌ங்கியிருந்த‌ மாண‌வ‌ர்க‌ள் நான்காவ‌து மாடியில் ஏறியிருந்தார்க‌ள். மாண‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ட்கு வேண்டிய‌ உண‌வுக‌ளை அங்கேயே த‌யாரித்த‌ன‌ர். காலைக்க‌ட‌ன் க‌ழிப்ப‌து நான்காவ‌து மாடியில் உள்ள‌ க‌ழிப்ப‌றைக‌ளிலே. க‌ல்லூரிக்கு விடுமுறை அளிக்க‌ப்ப‌ட்ட‌து.க‌ல்லூரி வ‌ளாக‌த்தில் இருந்த‌ ம‌ர‌ங்க‌ள் வேர்க‌ளோடு ஆற்றில் மிதந்து சென்றன.ஆனால் கட்டடங்கள் அசையவே இல்லை.தகுந்த வல்லுனர்களைக் கொண்டு வானம் ஆழமாகத் தோண்டப்பட்டு கட்டடங்கள் கட்டப்பப்ட்டிருப்பதை இன்றும் காணலாம்.கட்டட்ங்களுக்குப் பூசப்பட்ட குறிப்பாக மாடிப்பாடிகளில் உள்ளகைப்பிடிச் சுவர்களில் உள்ள தோரண அச்சுகளை காவி நிறத்தில் உள்ள கரைகள் போன்றவற்றினை வேறு எங்கும் காணாமுடியாது. நெடுஞ்சாலைததுறைக்கு மேலே 25 அடி உயரத்தில் உள்ள சரிவுகளில் பாறைத்தோட்டங்கள் அமைந்திருக்கும். நீச்சல் குளம் என்ன, முதலை வசிக்கும் குளம் என்ன, ஆங்காங்கே நிழல்தரும் மரங்கள் பூத்துக்குலுங்கும் மலர்ச்சோலைக‌ள் க‌ண்ணுக்கு விருந்தாக‌ இருக்கும். 1960 அத‌ற்குப்பின்ன‌ரும் ப‌ல‌முறை வைகையில் வெள்ள‌ம் பெருக்கெடுத்து ஓடியுள்ள‌து. க‌ட்ட‌ட‌ங்க‌ளில் ஒரு விரிச‌ல் கூட‌ இல்லை. இய‌ற்பிய‌ல் கட்‌டடம் பூமிக்கு உள்ளேயே போகும் நிலை. அப்பொழுது கட்டபாட்ட வானளாவிய கட்டிடங்களுக்குக் கீழே வானம் தோண்டி மரப்பலகைகளை அண்டக்கொடுத்தார்கள். கட்டடம் அசையவே இல்லை. கட்டடம் தரைக்குள்ளே புகுவதும் தடுக்கப்பட்டது.
தியகராசர் பொறியியல் கல்லூரியினை மொட்டையரசு மலையருகே கட்ட கலைத்தந்தை அவர்கல் தீர்மானித்த போது பர்ரைகள் அமைந்த பகுதி அஙு கல்லூரி கட்ட வேண்டாம் என்று வல்லுனர்கள் எச்சரித்தனர். அங்கு கல்லூரி கட்டுவதில் கலைத்தந்தை உறுதியாக இருந்து கட்டி முடித்தார். பசுமலையில் இருந்து தியாகராசர் பொறியியல் கல்லூரியின் எழில்மிகு தோற்றத்தினை இன்றும் காணலாம். கலைத்தந்தையின் தொலைநோகுப்பார்வையைஇதன் மூலம் காணலாம். கட்டடங்கள் கட்டபட்டு வரும் பொழுது கலைத்தந்தை தினசரி அந்தப் பகுதிக்கு வருவார்கள். கலைக்கல்லூரியில் உள்ள ந்ச்சல் குளத்திற்கு
படிக்கற்கள் அமைக்கப்பட்டிருந்தன. முடியும் தருவாயில் அதனைக்கண்ட லலைத்தந்தையவர்கள் நீச்சல் குள‌த்தினில் சறுக்குப்பாதை அமைக்கச் சொன்னார்கள்.கட்டடங்கள் கட்டப்படும்பொழுது கலைத்தந்தை இது போன்ற கலைநுணுக்கங்களைப் புகுத்தினார்கள். இன்று கல்லூரிகள் எழிலுறக் காட்சியளிக்க
கலைத்தந்தையே காரணம். குற்றாலம், கொடைக்கானல், மதுரை மாளிகைகளில்
ஒரு தோட்டக்காரன் இருப்பதைப்போல சிலைகளைக் காணலாம். ரோமாபுர ராணிகளின் சிலைகளை நுழைவாயிலில் காணலாம்.க‌ல்வி அற‌க்க‌ட்டளையா!
ம‌துரையில் ஒரு ப‌ல்கலைக்க‌ழ‌க‌ம் நிறுவ‌வேண்டும் என்று க‌லைத்த‌ந்தை விரும்பினார்க‌ள்.அகில‌ இந்திய‌ தொழில்நுட்ப அதிகாரி அலுவ‌ல‌கத்தில் இருந்து க‌லைத‌த்த‌ந்தைக்குத் தொலைபேசி அழைப்பு வ‌ந்த‌து.ரூ 60 லட்சம் ஒதுக்கித்த‌ன‌து பிர‌திநிதியை ஐயா அவ‌ர்க‌ள் உட‌னே அனுப்பினார்க‌ள்.தியாகராசர் பொறியிய‌ல் க‌ல்லூரி தோன்றிய‌து.
மீனாட்சி ஆலை நிறுவுமுன்னர் க‌லைத்த‌ந்தை ப‌சும‌லையில் மீனாட்சி ஆலை கால‌னியைத் தொழிலாளர்கட்காகக் கட்டிய‌த‌னை இன்றும் காணலாம்.பர‌வையில் தொழிலாளர் குடியிருப்பு வ‌ச‌திக‌ளைக் க‌ட்டினார்க‌ள்.இன்றும் அந்த‌க் காலனிகளைக் காணலாம்.

'''தமிழ்ப்பற்றா?'''
கலைத்தந்தை அவர்கள் தமிழ்நாடு எனும் நாளிதழை நடத்தினார்கள்.ஹிந்து பத்திரிக்கை மதுரையில் அவர்களது பதிப்பாக வெளியிட முன்வரும் அளவிற்கு தமிழ்நாடு நாளிதழ் வளர்ச்சி பெற்றிருந்தது.சென்னை மாநிலம் தமிழ்நாடு என்று அழைக்கப்படும் முன்னர் தனது நாளிதழுக்கு தமிழ்நாடு எனப் பெயரிட்டவர் கலைததந்தை.தியாகராசர் கல்லூரியில் ஒளவை,சு.துரைச்சாமிப்பிள்ளை,சி.இலக்குவானர் போன்ற தமிழறிஞர்களை தமிழ்ப்பேராசிரியராக நியமித்தார்கள்.முதல்வர் பொறுப்பினை தமிழ்துறைத் தலைவர் அவர்களிடையே அளித்தார்கள்.உதாரணம் மெ சுந்தரம் அவர்கள்,இந்தி எதிர்ப்பு போரட்டத்தில் தியாகராசர் கல்லூரி மாணவர்கள் முன்னிலை வகித்தார்கள்.சென்ட்ரல் திரையரங்கு முனனால் அரசியலமைப்புச் சட்டத்தில் ஹிந்தியை ஆட்சி மொழியாக்கும் சட்டசபைத்தீர்மானத்தைத் தியாகராசர் கல்லூரி மாணவர்கள் எரித்துச்சிறைப்புகுந்தனர்.ஏ.எஸ்.பிராகாசம்,நா.காமராசன் திரைப்படத்துறையில் பின்னாளில் பிரகாசித்தவர்கள்,தியாகராசர் கல்லூரி மாணவர்களே,விருதுநகர் சீனிவாசன் (முன்னாள் சபாநாயகர்)தியாகராசர் கல்லூரி ஆவார்.

பட்டிமன்றம் பேராசிரியர் சாலமன் பாப்பையா தமிழில் முதுகலை மேல்பட்டப்படிப்பை தியாகராசர் கல்லூரியில் படித்தார்கள். கலைத்தந்தை அவர்களின் பாசமிகு மகன் கண்ணன் தியாகராசர் கல்லூரி மாணவர். மத்ரை வ்ங்கித்தலைவர் திரு.கே.எம்.தியாகராசன் அவர்களும்
இங்கு படித்தவர்.
சைவ‌ உண‌வு.
தியாக‌ராச‌ர் க‌ல்லூரி விடுதி மாண‌வ‌ர்க‌ள் இர‌ண்டு கோரிக்கைக‌ளுட‌ன் நான்கு மாசி வீதிக‌ளிலும் ஊர்வ‌ல‌மாக‌ச் சென்று க‌லைத்த‌ந்தையை அவ‌ர‌து மாளிகையில் ச‌ந்தித்த‌ன‌ர். மாசி வீதிக‌ளில் ஊர்வ‌ல‌மாக‌ மாண‌வர்க‌ள் இட்ட‌ கோஷ‌ம் வானைப்பிள‌ந்த‌து. க‌ருமுத்து தியாக‌ராச‌ரே ம‌ட்ட‌ன் போடு என்று ராகதாள‌த்துட‌ன்
ஆட்ட‌பாட்ட‌ ஆர்ப்பாட்ட‌த்துட‌ன் வேடிக்கைக்காக‌ ம‌க்க‌ளைக் க‌வ‌ர்வ‌த‌ற்காக‌க் கோஷ‌மிட்டு சென்ற‌ன‌ர்.

ஐயா அவர்களின் மாளிகையை அடைந்தவுடன் அமைதி காத்தனர். ஐயா வந்தவுடன் எதுமறியாத பாவனையில் அமைதி காத்தனர். ஐயா அவர்கள் மெதுவான கனிவான குரலில் இவ்வளவு சிரமப்பட்டு நடைப்பயணம் வந்து அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம் என்று அங்கு நிலவிய அமைதியைக் கலைத்தார்கள்.
கோஷங்களின் வாசகங்கள் ஐயாவின் கா துகளுக்கு தமிழ்நாடு நிருபர்கள்
மூலம் எட்டியிருநதது. கல்லூரி முதல்வர் கலைக்கல்லூரியின் அனைத்துத்துறை பேராசிரியர்களும் ஐயா பின்னால் நின்று கொண்டு இருந்தார்கள். கண்ணன் அங்கு பந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
மாணவர்கள் அனைவரும் ஐயாவை நோக்கிக் கல்லூரி அலுவலர்களை அந்த இடத்தில் இருந்து போகச்சொன்னால் தங்களது கோரிக்கைகளை கூறுவதாகச் சொன்னார்கள். அன்றைய நிர்வாகச் சிக்கல்களைபற்றி ந்ன்கு அறிந்திருந்த அவர்கள் கண்ணசைக்க அலுவலர்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு அகன்றனர். அம்மட்டும் அலுவலர்களைகண்டால் மாணவர்கள் நெஞ்சில் பயம்
இருந்ததை காட்டியது. ஐயா அவர்கள் கோஷங்கள் இட்டு வந்தீர்களாமே என்றார். கோஷங்களிட்டு ஒயிலாட்டம் போன்று கைக்குட்டைகளை கையிலே ஏந்தி அழகாக அசைத்து கருமுத்து தியாகராசா மட்டன் போடு என்றுபாடி ஆடினார்கள். ராகதாளம் அட்சரம் பிசக வில்லை. ஐயா அவர்கள் பதில்
அளிக்கையில் மண்டையைப் போட்டாலும் போடுவேனே தவிர மட்டன் போட
மாட்டேன் என்றார்கள்.பேரறிஞர் அண்ணா அவர்கள் டாக்டர் அருணாசலம் வீட்டில் தங்கியிருந்தபோது
தான் ஐயய்யோ பொன்னம்மா அரிசிவிலை என்னம்மா, ககா மக்கள் என்ன கொக்கா, அரியலூர் அழகேச ஆண்டது போதாதா மக்கள் மாண்டது போதாதா என்று காங்கிரசுக்கு எதிராக எழுதினார்கள். தமிழ்நாடு முழுவதும் எதிரொலித்தது. காங்கிரசு ஆட்சிக்கு முடிவு தமிழக மக்களால் எடுக்கப்பட்டது. காங்கிரசு அரசால்
காவல் துறையினர் ஏவப்பட்டு தியாகராசர் பொறியியல் கல்லூரி மாணவர்களின் மண்டைகள் உடைக்கப்பட்டன. மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு டயஸ் அவர்களை தொலைபேசி முலம் தொடர்பு கொண்டு கலைத்தந்தை அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு கண்டனம் தெரிவித்தார்கள். தமிழ்நாடு நாளிதழில் மண்டை உடைந்த மாணவ‌ர்களின் ந்ழல் படத்தை வெளியிட்டார்கள். மாண்புமிகு பக்தவத்சலம் அவர்கள் தமிழக முதன்மந்திரியாக இருந்தார்கள். காங்கிரசு ஆட்சிக்கு எதிராக மாணவர்களைத்தூண்டி விடுகிறார் அன திரு பக்தவத்சலம் கருதினார்கள். கருமுத்து தியாகராசர் சென்னை சென்று முதல்வரைச்சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்தும் முதல்வர் திருப்தியடையவில்லை
பெருந்தலைவர் காமராசர் அவர்கள் கலைத்தந்தை அவர்களின் நடத்தையைப் பற்றி நன்கு எடை போட்டு ந்ல்லெண்ணம் கொன்டிருந்ததால் கலைத்தந்தை அவர்களை கைது செய்யவில்லை.
கலைததந்தையின் தமிழ்ப்பற்று தமிழ்நாடு நா ளிதழ் மூலம் லட்சக்கணக்கில் நட்டம் ஏற்படுத்தியது மட்டுமின்றி அரசாங்கத்தை கவிழ்க்க மாணவர்களை த் தூண்டி விருகின்றார் அன்ற பட்டத்தையும் வாங்கிக்கொடுத்தது என்றால் மிகையில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் அரியணையேற கலைத்தந்தை வித்திட்டார்கள்.