Sunday, December 19, 2010

என் நூல்களை கலைத்தந்தை பார்வையிட்டார். இலக்கியத்தில் இன்பச்சுவை என்ற நூலின் முதற்கட்டுரை முழுவதையும் படித்தார். தாலாட்டு என்ற எனது தொகுப்பு நூலின் முன்னுரையைப்படித்தார். யான் எழுதிய தாலாட்டுப்பாடலில் ஈடுபட்டு மௌனமாகப்படித்தார். குறிஞ்சிப் பாட்டு திறனாய்வு என்ற நூலைபார்வையிட்ட அவர் அப்பாட்டினை ஒப்பிக்கும் படி ஆணையிட்டார்.
அன்னை வாழி வேண்டான் என்ற தொடக்க சொற்களை கூறவே அன்று அந்நிலையில் யான் தடுமாறினேன். அவரொஅ நூற்றைம்பது அடிகள் வரை அப்பாட்டினை ஒப்பித்து கொண்டே போனார், உரைவேந்தர் அவ்வை சு. துரைசாமிப்பிள்ளை , மொழிக்காவலர் சி.இலக்குவனார் எல்லோரும் வியந்த படி

No comments:

Post a Comment