Thursday, November 29, 2012

 அவர் மிகவும் தாராள  மனப்பான்மை கொண்டவர். பிறர் மனம் நோக நடந்து கொள்ள மாட்டார்.  யாரையேனும் வேலையிலிருந்து விளக்க நேரிட்டால்  அவர் எதிர்பார்க்கும் தொகையை விட  அதிகமாகவே கொடுத்து மனநிறைவோ டு வெளியே போகுமாறு செய்வார். வேலையை விட்டு சென்ற அநேகர்  அத்தருணங்களில் என்னிடம்  வந்து  அவரை மனமார வாழ்த்தி விட்டு சென்றிருக்கிறார்கள். 
      அவர் ஒரு பெரிய காருண்யமூர்த்தி.  அன்பே வடிவானவர். மீனாட்சி ஆலையில் சேர்ந்த சில ஆண்டுகளுக்கு ப பிறகு  ஒரு நாள் சென்னைக்கு செல்லும்  அவரை வழியனுப்ப  நான் இரயில் நிலையத்திற்கு ச சென்ற பொழுது  அடுத்த வாரம் ஒரு குறிப்பிட்ட கிழமையில் காலை  திருவனந்தபுரம் எக்ஸ்பிரசுக்கு  கார் அனுப்பச சொல்லியிருந்த தை  நான் எப்படியோ  மறந்து விட்டேன். கார் கிடைக்காததால்  அவர் இரயில் தண்டவாள வழியாகவே
நடந்து மில்லுக்கு  வந்து சே ர்ந்தார். எனக்கு 9 மணியளவில் திடீரெனஞாபகம் வந்து சொல்லொ ணா த துயரத்தில்  மூழகி  என்ன நேரூமோ  என்று அஞ்சி  இப்பெருந்தவறு  இழைத்த எனக்கு மூன்று வருட இன்கிரிமெண்டை நிறுத்தி  வைத்து  அல்லது சம்பளத்தைக்குறைத்து  அல்லது பெருநதொகை அபராதம்  விதித்து  அவசியம் என்னை தண்டிக்கவேண்டும்  என்றும்  அவ்வாறு தண்டனை வழங்கினால்  தன தன மனம் ஆ றும  என்று ஒரு குறிப்பு எழுதி க்         
கட்டிடசாரம்  ஒன்றில் அவர் நிற்கையில் கொடுத்தேன். வாங்கிப் படித்து பார்த்த ப பின்னர் கிழித்து போட்டு விட்டு சரி  போ வேலையைப்பார்  என்று என்னை அனுப்பிவிட்டார். என்ன உதார குணம்  யாருக்குத்தான்  இத்தனை பொறுமையும்  இளகிய மனமும் இருக்கமுடியும் .என் வாழ் நாள்  முழுவதும்  இச்சம்பவத்தை யான் மறக்க இயலாது. 
   ஸ்ரீலங் காவில்  திருவாளர் சிற் கைலாசம்  பிள்ளை என்ற தமிழ் விற்பன்னரிடம்  முறையாக த தமிழ் கற்றதாலும்  சங்க இலக்கியங்களில்  மாளாத காதல் கொண்டதாலும் அநேக செய்யுட்கள்  மனப்பாடமாக  இருந்தாலும்  வெளியூருக்கு  காரில்  செல்கையில் பல மணி நேரம்  எவ்வாறு  

No comments:

Post a Comment