Sunday, December 9, 2012

 அதைப் போல மதுரையில்  சாயிபாபா  வழிபாடு  சிறப்பாக  நடைபெறுவதற்கு  
ஏற்பாடு  செய்து  வழக்குரைஞர்  திரு.இரத்தினசபாபதி   முதலியார்  அவர்களுடன் சேர்ந்து மதுரையில் சாயி பாபா  வழிபாடு இயக்கத்தை
நடத்தினார். முதன் முதல் மதுரை அன்னக்குழி மண்டபத்தில் சாயி பாபா
வழிபாடு நிகழ்த்தப்பட்டது.
     ஸ்ரீ ஐயப்பன்  இயக்கத்தை  தமிழ்நாட்டில் திருபி.டி.  இராசன்  அவர்கள்  நடத்திய போது அவருக்கு எங்களது தந்தையார் உறுதுணையாக நின்றார்.
     பழமுதிர் சோலையில் பாழடைந்து கிடந்த முருகன் திருக்கோயில்  மீண்டும் எழுப்ப  எங்கள் தந்தை முயற்சி செய்த போது  அவருக்கு எதிராக எழுந்த அத்தனை எதிர்ப்புகளையும்  தாண்டி  விட முயற்சியாக  ஆலயத்தை க்
கட்டி முடித்து க் குடமுழுக்கு ம நிகழ்த்தினார்.  
      பழைமையான மதுரைத் திருஞாந சம்பந்த ம டம்  சீர்குலையும்  நிலையில் இருந்த பொழுது  அதை மீண்டும்  நிலைநிருத்தப  பேரு முயற்சிகளை  எடுத்து கொண்டார். எங்கள்  தந்தையாரின் நெருங்கிய நண்பரும்  கொழும்பு  சுந்தரம் கம்பெனியின்  உரிமையாளரும்  சிவநேசச்செல்வருமான  திரு. சோமசுந்தரம் பிள்ளை மதுரைக்கு வரவழைத்து மதுரை ஆதினகர்த்தார்  பதவி ஏற்பதற்கு ச சம்மதிக்க வைத்தார். மடாலயத்தின்  பொறுப்பினை ஏற்க  சோமசுந்தர  சுவாமிகள் வந்தபோது  அவருக்கு மாபெரும்  வரவேற்பு  அளித்து சிறப்பித்தார்.
       ஸ்ரீ காஞ்சி  காமகோடி பீடாதிபதி  ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர  சரஸ்வதி  சுவாமிகளுடன்  அவருக்கு இருக்கும் ஈடுபாடும்  பக்தி சிரத்தையும் அளவிடமுடியாததாகும்.  அவர் ஆசியுடன் "ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சைவ சித்தாந்த நூலை  எழுதி  வெளியிட்டார்.   
      அதைபோலவே திருவாவடுதுறை ,தருமபுரம், திருப்பனந்தாள்  ஆகிய பல்வேறு  மடா லயங்களில் தலைவர்களுடனும்  அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. இருந்து வருகின்றது. 

No comments:

Post a Comment