Wednesday, December 12, 2012

செய்நேர்த்தி : எங்கள் தந்தையாருக்கு  எந்தக்காரியம் செய்தாலும்  கைவந்த
கலை அதைபிற ர் பாராட்டும் விதத்தில்  செய்யவேண்டும்  என்பதில் மிகக்கவனமாக  இருப்பார். ஏனோ  தானோ என்று எந்தகாரியத்தையும்  செய்வது  அவருக்கு அறவே பிடிக்காது. செய்வதைத்திருன்தாஸ் செய்ய வேண்டும் என்பது  அவர் கடைப்பிடித்த கொள்கை. மற்றவர்களும் அதைகடைப்பிடிக்கவேண்டும்  என்று விரும்பினார்.
   செல்விருந்தோம்பி வருவிருந்து பார்ப்பது  அவருடைய பண்பாகும். விருந்தினர் இல்லாத நாள்  வீணாந நாள்  என்று அவர் எண்ணுவார்.  விருந்தாளிக்குரிய வசதிகள் எல்லாம் சரிவரச்செய்யப்பட்டுஉள்ளதா
 என்பதை தாமே நேரில் பார்வையிடுவார்.  அதிலும் தமிழ் அறிஞர்கள்  வந்து விட்டால் மிககவனம் செலுத்துவார். நோய்வாய்ப்பட்ட தமிழ் அறிஞர்கள்  பலரை எங்கள் இல்லத்திற்கு கே கூ ட்டி வந்து  பெற்ற தாயினும் சாலப் பேணி டுவார்.  நோய் முற்றிலும் தீர்ந்த பின்னர்  அவர்களை அனுப்பி வைப்பார்.  
        இன்னா செய்தார்க்கும்  நன்னயம் எனும் குணக்குன்றாக  விளங்கினார்.  தந்தையருக்கோ அல்லது அவர் பொ று ப்பேற்றி ருக்கிற பல்வேறு  அமைப்புகளுக்கோ எதிராக க்  கடுமையாக ப் பிரசாரம்  செய்தவர்கள்  பலர் பல்வேறு காரணங்களுக்காக  எங்கள்  தந்தையாரை அணுகும் போது
தவறிழைத்தவர்கள் என்ற உணர்வு கொஞ்சமுமில்லாமல்  அவர்கள் சொன்னதைகேட்டு த தம்மாலான  முடிந்த உதவியை ச செய்து  அனுப்பி வைப்பார். இதை கண்டு நானே பல முறை வியந்து  இருக்கிறேன்.  எங்கள் தந்தையாரின் நெருங்கிய நண்பர்கள்  அத்த கைய நேரங்களில்  அதைச்சுட்டி காட்டியும்  கூ ட அவர் ஏற்றுக்கொள்வது இல்லை.  தவறு செய்தவர்கள்  பின்னர் திருந்தலாம்  அதைநாம் பெரி து படுத்தக் கூ டாது  என்று சொல்லி விடுவார்கள்.
        தமது வீட்டு  குழந்தைகள் பேர க்குழந்தைகள்  மற்றொரு வீட்டுக் குழந்தைகள்  என்று  வேறு பாடு  அவருக்கு என்றைக்கும்  கிடையாது.
எல்லோர் நலனிலும் அக்கறை காட்டுவார். 

No comments:

Post a Comment