Thursday, December 6, 2012

தற்பொழுது  சென்னைப்பல்கலைக்கழகத் தின்  தமிழ்த்துறைத்தலை வராக
விளங்கும் டாக்டர் ந. சஞ்சீவி அவர்களின்  தந்தையான பெரும்புலவர் திரு.நடேச முதலியார் அவர்கள் எங்கள் தந்தையின் தமிழாசிரியராக விளங்கினார். அவர் ஊட்டிய தமிழறிவு எங்கள் தந்தையாரைச சிறந்த தமிழ் அறிஞராக  உருவாக்கிற்று.
      இளமையில் தமிழ்நாடு வாலிபர் சங்கம்  என்ற  அமைப்பினை நிறுவி மதுரையில் தீவிரமாக வேலை செய்தார். இரண்டாவது உலகப்போரின் போது
பர்மாவிலிருந்து உயிர்தப்பி ஓடி வந்த தமிழர்களுக்கு இச்சங்கம் பெரும் பேருதவி புரிந்தது.
      திருக்குற்றாலத்திருந்த திரு.தி.ப.சுப்ரமணிதாசு  அவர்களை மதுரைக்கு அழைத்து வந்து மதுரையில் திருவள்ளுவர் கழகத்தை நிறுவி அதனுடைய
 செயலாளராகவும் தலைவராகவும் தற்போது புரவலாராகவும்  இருந்து
எங்கள் தந்தையார் ஆற்றி வரும் தொண்டு தமிழகம் அறிந்த ஒன்று.
     அதைப்போலவே  மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர பணியினை
 ஏ ற்று அதைபுனர்நிர்மாணம செய்து ம் செ ந்தமிழ்க்கல்லூரியை நிறுவியும்
செந்தமிழ் இதழை வெளியிட வழி வகுத்தும்  இவற்றுக்கெ ல்லாம் சிகரம் வைத்தாற்போல தமிழ்சசங்கத்தின்  பொன்விழாவை  இந்த  நாடே வியப்புற  
நட த்தியும்  அருந்தொண்டாற்றி னார்கள்..
     1942ல் மதுரையில் முத்தமிழ் மாநாடு என்ற பெயரில் ஒரு மாபெரும் மாநாட்டினை நடத்த முன்னின்று  பணியாற்றினார்.
    1948ல் சனவரி 1-2ல் தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் சார்பில் மதுரையில் நடைபெற்ற  

No comments:

Post a Comment