Sunday, December 16, 2012

முனைவர் ப. கோமதிநாயகம் அவர்கள் நினைவு நாள் 29.12.2012 அவர் கொடுத்த நூலினை எழுதி வாசகர்களுடன் பகிர்ந்து  அவரதுசே வை  போற்றி.போற்றி !
  பெரியாறு அணை மறைக்கப்படும் உண்மைகள்.  1. புதிய பெரியாறு அணை - கேரளத்தின் மாற்று யோசனையின் பின்னணி. 2. முல்லைப்பெரியாறு அணை -   நூல்மறை  க்க முடியாத உண்மைகள்.  நன்றி: தென் ஆசியச்செய்தி 2. மருத்துவர் மா.அரங்கசாமி, புரவலர் தமிழ் அறிவியக்கம், கோ ய ம்பப த்தூர 641659 தொடர்புக்கு தமிழ் நேயம் கோயம்பத்தூர். 641029
                                                             முன்னுரை.
      தமிழ் நாளிதழ்களில் அவ்வப்போது அடிபடும் செய்தியாக பெரியாறு அணை
இருக்கிறது. தமிழர்கள் பெரும்பாலருக்கு பெரியாறு அணை பிரச்னை பற்றிய உன்மைகள் தெரியவில்லை. கேரள அரசுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகள் எத்தனை , அதில்  உள்ள விவரங்கள் என்ன என்பது  பற்றிய தகவல்களையும்  அறியாது பலர் பெரியாறு அ ணை மதுரை மாவட்டத்தில் இருக்கிறது என்றே  கருதுகிறார்கள்
       ஆனால் கேரளத்திலோ "பெரியாறு அணையை உயர்த்தி கூடுதலாக த்தண்ணீரை ப பெற தமிழகம் முயலுகிறது தவிர பெரியாறு அணையிலிருந்து  வெள்ளம் வந்தால் இடுக்கி அன்னை உடைந்து ஏ ராளமான  உயிர்சேதம்
பொருட்சேதம் ஏ ற்படும்.   என்பது போன்ற செய்திகளை ஊடகங்கள்  வாயிலாக கேரளா அரசும் பத்திரிக்கை ளும் பரப்புகின்றனர். அத னை
இங்குள்ளோ ரும் நம்புகின்றனர்.
       இந்நிலையில் 27.2.2006  அன்று 142 அடி வரை பெரியாறு அணையில்  தண்ணீரைத் தேக்கலாம் என்ற தீர்ப்பை உச்ச நீதி மன்றம் வழங்கியது.  உடனே கேரள சட்டமன்றத்தில்  அனைத்துக்கட்சிகளும்  சேர்ந்து ஏக மனதாக  அந்தத் தீர்ப்பை  தடுக்க ஒரு சட்டம் நிறைவேற்றியது.  ஆனா ல் தமிழகத்தில் சட்டமன்ற த்தேர்தல்  அறிவிக்கப் பட்டிருந்ததால்  அரசியல் கட்சிகளும்  ஊடகங்களும்  பெரியாறு  அணைப்  பிரச்சினைக்கு உரிய  முக்கியத்துவம் கொடுக்க வில்லை  என்பதை நாம் வேதனையுடன் எண்ணிப்பார்க்கவேண்டும். 

No comments:

Post a Comment