Thursday, December 6, 2012

எங்கள் தந்தை - நீங்காத நினைவுகள். (ப.நெ)அய்யா பழ . நெடுமாறன்  அவர்கள்
எங்கள்  தந்தை அறநெறி யண்ணல் பவழ விழா  மலரில் எழுதிய கட்டுரை.
   எங்கள் தந்தையார் தம்மை முழுமையாக தமிழ் த தொண்டிற்கு அர்ப்பணித்துக் கொண்டார் என்று சொன்னால் அது மிகையாகாது. குடும்ப
நலனை விட த தமிழன்னையின் சேவையையே பெரிதாக மதித்தார். தமிழ் மீது அவர் கொண்ட பற்று பரம்பரையாக  அவருக்கு க்  கிடைத்த பேறாகும். எங்கள்
பாட்டனார் திரு.கிருஷ்ணபிள்ளை அவர்கள் புத்தக வணிகம் செய்து வந்தார்.
விவேகாநந்தா  பெயரில் சொந்த அச்சகம் ஒன்றினையும் அவர் நடத்தி வந்தார். மதுரையின் மிகப்பழைமையான அச்சகம் இதுவே. இது 1924ஆம் ஆண்டில்
தொடங்கப் பெற்றது. மதுரைப்புதுமண்டபத்தில் சென்னை பி.நா.சிதம்பர முதலியார் புத்தகக்கடை ஒன்று இருந்தது. அதன் நிருவாகப் பொறுப்பு  முழுவதையும் எங்கள் பாட்டனார் கவனித்து வந்தார். சிறு வயதில் நான் என் பாட்டனாருடன் பலமுறை அந்தப் புத்தகக் கடைக்கு ச சென்றிருக்கின்றேன்.
 புது மண்டப வாயிலில் அவர் நுழைந்தால் வழி நெடுக இருக்கும் கடைக்காரர்களும்  மக்களும் அவருக்கு பயபக்தியுடன் வணக்கம் செலுத்துவார்கள். அந்நாளில் இருந்த தமிழ்ப்புலவர்களும் , நாடக ஆசிரியர்களும் எங்கள் பாட்டனாரைக் கண்டு பேசுவதற்காக அடிக்கடி வருவார்கள். அவர்கள் எழுதிய பல்வேறு நூல்களை யும் எங்கள் பாட்டனார்  பதிப்பித்தார். குறிப்பாக த தமிழ் நாடக உலகின் வழிகாட்டியும்  மாபெரும் மேதையுமான தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் எழுதிய ஒன்பது நாடக               நூ ல்களை முதன்முதலாக அச்சிட்டு வெளியிட்ட பெருமை எங்கள் பாட்டனாரசாரும்.  மேலும் புகழ் பெற்ற எழுத்தாளரான பி.ஸ்ரீ. முதன் முதல் எழுதிய ஆண்டாள் சரித்திரம் என்னும் நூலையும் எங்கள் பாட்டனாரே பதிப்பித்தார்.

No comments:

Post a Comment