Thursday, December 6, 2012

தமிழ்த் திருநாள் விழாக்குழுவின் செயலாளராக பொறுப்பேற்றுச சிறப்புற   
நடத்தினார்.
      தாம் உருவாக்கி வளர்த்த திருவள்ளுவர் கழகத்தின்வெ  ள் ளி விழாவினையும் திருவள்ளுவரின் ஈராயிரம் ஆண்டு விழாவினையும்
 கோலாகலமாக நடத்தி மகிழ்ந்தார்.
     தமிழ் அறிஞர்கள் அவர்கள் வாழும் காலத்திலேயே பாராட்டப்பட வேண்டும்
என்பதில்  எங்கள் தந்தையாருக்கு இருந்த தணியாத  ஆர்வத்தின் காரணமாக
 நாவலர் ,கணக்காயர் , டாக்டர் ச.சோமசுந்தர பாரதியாரின் 80ஆம் ஆண்டு விழாக்குழுவின்  செயலாளர்களாக ப்பொறுப்பேற்று அதைகண்டோர் வியக்கும் வண்ணம்  மதுரையில் நடத்தினார். அதைப் போலத்தமிழ்ப பெரியார்
திரு அ.கி.பரந்தாமனார்  ஔவை சு.துரைசாமிப்பிள்ளை,பேரறி ஞர்  கார்மேகக்
கோனார் , கல்வெட்டறிஞர் , சதாசிவப்பண்டாரத்தார், ஆட்சி ச சொற்காவலர்   
கி.இராமலிங்கனார்,முத்தமிழ்க் காவலர் கி.ஆ.. விசுவநாதம் ,குறள்  வேந்தர்
பண்டித மீ. கந்தசாமிப்புலவர் ,பேராசிரியர்  திரு.எ.மு.பரமசிவானந்தம் போன்ற 
பலருக்கும் விழ எடுத்தார்.மகிழ்ந்தார்.
     இல்லம் நாடி வரும் தமிழ் அறிஞர்களை வரவேற்று உபசரிப்பதிலும், அவர்களோடு இலக்கிய உரையாடல் நிகழ்த்துவதிலும்,எங்கள் தந்தையாருக்கு த தணியாத வேட்கை இருநதது. எங்கள் தா ய்வ ழிபாட்டனார் 
திருநெல்வேலி திரு. ஆறுமுகம் பிள்ளை அவர்களுக்கு மிகவும் நெருக்கமான
வரான சொல்லின் செல்வர் ரா,பி .சேதுப்பிள்ளை அவர்களிடம்  எங்கள்
தந்தையாருக்கு இருந்த பயபக்தி அளவிட முடியாதது. அவரும் மதுரை வரும் போதெல்லாம் எங்கள் இல்லத்திற்கு வந்து தங்கி விருந்துண்டு உரையாடி
மகிழ்ந்து செல்வார்.
     வித்துவான் திரு.இராகவய்யங்கார் , கோவை சிவககவிமணி சி.கே .சுப்ரமணிய முதலியார் , திருவனந்தபுரம் இசைச்செல்வர் தி. இலக்குமணப பிள்ளை  தமிழ்ப்பேரறிஞர்  திருஸ்.வையாபுரிபிள்ளை ,பண்டிதமணி
மு.கதிரேசன் செட்டியார் ,மறைமலைஅடிகள் ,பேராசிரியர் ஆ.கார்மேகக்கோனார் ஆ.மு. சரவணமுதலியார் , திரு.அருணாசலம் பிள்ளைரசிகமணி  டி.கே.சிதம்பரநாதமுதலியார் ,பாவநாசம இலக்கும
சுவாமிகள். திரு நடேச முதலியார்  தமிழிசை வித்தகர்  குடந்தை ச ச்ந்தரசேனார் ,அருணாசலக்கவிராயர் ,எம்.எஸ்.பூர்ணலிங்கம்பிள்ளை ,அப்பனைய்யங்க்கார் ,நல்லுசாமிப்பிள்ளை சுந்தரமூர்த்தி  ஓதுவார். அருணாசல க்கவுண்டர் போன்ற பழம் பெரும் தமிழறிஞர் களின்    
தொடர்பு எங்கள் தந்தையாருக்கு இருந்தது.

No comments:

Post a Comment