Monday, December 10, 2012

சிறப்பு மிக்க  விழாக்கள்  பல நடத்தி உள்ளனர்.  அவை இன்னமும்  தமிழக மக்கள் நெஞ்சங்களில் நின்று  நிலவுகின்றன  தமிழவேள் .அவர்களின்  மறைவிற்கு பின்னர் பல்வேறு  அமைப்புகளில்  தாம் வகி த்து  வந்த அத்தனைபதவிகளையும்  எங்கள்  தந்தையார் இராஜி னாமா  செய்து  அவற்றிலிருந்து  ஒதுங்கினார். தமிழவேள் இல்லாமல்  இனி  எந்த ப பொதுத் தொண்டிலும் ஈடுபடுவதில்லை  என்பது அவரது முடிவாக இருந்தது. எனது தந்தையாரின் நெஞ்சத்தில் தமிழவேள் அவர்கள் எத்தகைய இடத்தினை ப பெற்றிருக்கின்றார் என்பதை இது தெளிவாகக்காட்டுகிறது.
    தொழிலும் தமிழ்
    எங்கள் பாட்டனாருக்கு பின் குடும்பத்தொழிலான அச்சகம், புத்தக விற்பனைக்கடை ஆகியவற்றை ப பொறுப்பேற்றுக்கொண்டு  விரிவாக வளரச்செய்தார்கள். என் தந்தையார் புத்தகக்கடைபிள்ளை  வீடு  என்று  அந்தக்காலத்தில்  எங்கள்  குடும்பம்  வழங்கப்பட்டு வந்தது. அந்தப்பெருமையை  மேலும் வளர்த்தார். தொழிலையும் தமிழ்த் தொண்டாற்றுவதற்கு ரிய  கருவியாககருதினார். கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக  வெளிவரும்  விவேகா ந ந்தா நாட்காட்டி  தமிழ் நாடெங்கும் புகழ்பெற்றது.  மக்கள் விரும்பி  விலை கொடுத்து வாங்கும் நாட்காட்டியாக  அது இன்றளவும்  திகழுகின்றது. குறிப்பாக  மத்திய  தென் மாவட்டங்களில் அது இல்லாத வீடே  இல்லைஎன்று நிலைத்த  புகழ்  பெற்ற
அந்தகாலண்டரை விவேகாந ந்தா  நாட்காட்டி  எனத்திருத்தி  அதிலுள்ள குறிப்புகள் அத்தனையும்  தமிழாக மாற்றி  வெளியிடச்செய்தார். தமிழகத்தில்  வேறு எந்த நாட்காட்டியிலும் இல்லாத முறையில்  அதில் தமிழ் எண்களை  .
பயன்படுத்தி  தமிழ் எண் களை ப்பற்றி த்தெரியாத இந்தக்காலத்தில்  அதை  எல்லோரும்  சுலபமாக புரிந்து கொள்ள  அந்த த தமிழ் எண் களுக்கு நடுவில்  குறியீடுகளுக்கு ள்ளே ஆங்கில எண்களை ப போட்டு  வெளியிட்டு வருகின்றார். அதைபோலவே 'டைரி" என்பதை நாட்குறிப்பு எனத்தமிழில் வெளியிட்டார். 

No comments:

Post a Comment