பிள்ளைகளை ப் பேணிய பாங்கு
தாம் பெற்ற பிள்ளைகளை ஒருமுறை கூ ட எங்கள் தந்தையார் அடித்ததாக எனக்கு நினைவே இல்லை. சிறுவயதில் வேண்டுமானால் எங்கள் அன்னையாரிடம் அடிபட்டிருப் போமே தவிர எங்கள் தந்தையாரிடம் அத்தகைய தண்டனையை நாங்கள் எப்போதும் பெற்றதில்லை. பிள்ளைகளுக்கு அவர் கொடுத்த சுதந்திரத்தை வேறு யாரும் கொடுத்திருக்க முடியாது. படிப்பு விஷயத்தில் ஆகட்டும் அல்லது வளர்ந்த பின்னர் நாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் ஆகட்டும் எதிலும் எங்கள் தந்தையார் தலையிட்டதில்லை. அவ்வப்போது அறிவுரைகள் கூறுவார்களே தவிர எந்த துறையில் ஈடுபடவேண்டும் என்பதைப் பற்றி ஒருபோதும் அவர் வற்புறுத்தியது இல்லை.
எனது சகோதரிகளுக்கும் சகோதரர்களுக்கும் எனக்கும திருமணம் நடைபெற்றபோது அவற்றை த்தமிழ் த்திருமணங்களாக நடத்தி மகிழ்ந்தார். வரதட்சனை கொடுப்பதையும் வாங்குவதையும் அறவே வெறுத்தார். எங்கள் தந்தையார் ,தம் பெண்மக்களின் திருமணங்களிலும் ,புதல்வர்களின் திருமண ங்களிலும் இந்தக்கொடுமை தலை காட்டாத படி செய்தார்.
. அரசியல் துறையில் நான் தீ விரமாக ஈடுபடுவதற்கு அவர் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. மாணவப்பருவத்தில் இருந்து இன்று வரை என்னுடைய பொது வாழ்வில் குறுக்கிட்டு எந்த வகையிலும் எத்தகைய தடையும் அவர் விதித்தது இல்லை. மாறாக என்னைபலவகையிலும் ஊக்குவித்தார். அவ்வபோது அரசியல் நிலைமைகளைப் பற்றி மனம் திறந்து பேசி எனக்கு பல விஷயங்களில் வழிகாட்டியாக இருந்திருக்கிறார்கள். எனது தந்தையார் ஆற்றிய தமிழ்த்தொண்டும் பொ துத்தொண்டும் தமிழகமெங்கும் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ் அறிஞர்கள் ஆகியோரால் பெரிதும் மதித்து ப் பாராட்டப் பட்டுள்ளன. இன்னமும்
தமிழ் நாட்டிலுள்ள பலவாறு அரசியல் தலைவர்களும் மூத்த தமிழ் அறி ஞர் களும் என்னிடம் செலுத்து அன்பிற்கு அடிப்படையே எனது தநதையின் மீது அவர்கள் வைத்திருக்கிற மதிப்பின் விளைவாகும். பொது வாழ்க்கையில்
எனக்கு ஏற்பட்டிருக்கும் பல்வேறு வாய்ப்புகளுக்கு அவருடைய தன்னலம் கருதாத தொண்டு அடித்தளமாக அமைந்தது.

No comments:
Post a Comment