Tuesday, December 11, 2012

பிறந்த நாட்கள், மறைந்த நாட்கள்  ஆகியற்றையெ ல்லாம் குறிப்பாக தமிழ் அறிஞர்களுடையதையும்  குறி க்கச்செய்தார். 
     
      பல்வேறு தமிழரிஞர்களின் நூல்களையெல்லாம் தமது அச்சகத்தின் மூல்ம் 
பதிப்பித்தார். தொடக்கப்பள்ளியில் பயிலும் சிறுவர்களுக்கென்று  புதுமையான முறையில் படங்கள்  நிறைந்த பாடப்புத்தகங்களை  முதன்முதலாக த்தமிழகத்தில் வெளியிட்ட பெருமை எங்கள் தந்தையாருக்கு உண்டு. அதிலும் அவர் தமிழ  மறக்கவில்லை.  தமிழ்க்கொடிவாசகம் என்று பெயரிட்டு 1வஹு முதல் 5வது வகுப்பு பாடப்புத்தகங்களாக  வெளியிட்டார்.
      அவரே நூ லாசிரியராகவும்  சிறந்த எழுத்தாளராகவும்  விளங்கினார்.  அந்த நாளில்  வெளிவந்த குடியரசு ,ஆனந்தவிகடன், சுதேசமித்திரன் போன்ற பலவாறு பத்திரிகைகளில்  பல்வேறு தலைப்புகளில் கட்டுரை அடிக்கடி எழுதினார் . விவேகாநந்தம் என்ற பெயரில் மாத இதழ்  ஒன்றினையும்  மதுரை மலர் என்ற பெயரில்  வார இதழ் ஒன்றினையும்  பலகாலம் நடத்தினார். சிறந்ததமிழ் அறிஞர்களை க்  கொண்டு  கட்டுரைகள் எழுதச்செய்து  அவற்றை வெளியிட்டார்.
      தியாக வாழ்வு
 எங்கள் தந்தையாரும்  அன்னையாரும் நடத்திய இல்வாழ்க்கை மற்றவர்களுக்கு முன் மாதிரியான இல்வாழ்க்கை ஆகும. எனக்கு நினைவு  தெரிந்த வரை ஒருமுறை கூ ட எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் இருவரும்  வாதமிட்டதை  நான் கண்டதே இல்லை. எங்கள் தந்தையார் விருப்பம் எதுவோ அதைத் தம் தலையாய கடமையாகக் கொண்டு  நிறைவேற்றி அதில் மகிழ்ச்சி கண்டவர். எங்கள் அன்னையார் அதைப்போல க்
குடும்பத்தைப்பற்றிய  சகல விஷயங்களையும் எங்கள் அன்னையாரின்  முழுப்பொறுப்பில்  எங்கள் தந்தையார் விட்டிருந்தார். செழுங்கிளை தாங்குதல்  என்ற சொற்றொடருக்கு இருவரும் இலக்கணமாக த்திகழ்ந்தனர். உறவினர்கள் பலரும் எங்கள் வீட்டில்  வளர்ந்தனர் எப்பொழுதும் 

No comments:

Post a Comment