Wednesday, March 27, 2013

fun at a marriage because of mic artile by shanmugasundaram

தினமணிக் கதிர். 14.4.1972  விலை 50 காசு. கே.சண்முகசுந்தரம்.

டே   கட்டாதே  கட்டாதே
 நண்பர் ஒருவருடைய திருமண  வீட்டிற்கு சென்றிருந்தேன். மந்திரம் ஊதிக் கொண்டிருந்த ப்ரோகிதருக்கு முன்னாலேயே மைக் வைக்கப பட்டிருந்தது.  மந்திர ஒலியுடன் இடையிடையே மண வறையை ச சுற்றி நின்று கொண்டிருந்தவர்கள் போட்ட கூச்சலும் ஒலிபெருக்கியில் கேட்டுக் கொண்டிருந்தது புரோகிதர் சடங்குகளை முடித்துக் கொண்டு தாலியை எடுத்து மணமகன் கையில் கொடுத்து கே கட்டசொன்னார். அந்த சமயத்தில் "டே  கட்டாதே,கட்டாதே ëன்று ஒலிபெருக்கி அலறவே மணமகன் திடுக்கிட்டான். 
  மணமக்களுடைய பெற்றோர்களும் உறவினர்களும்  ஒன்றும் புரியாமல்  திகைத்து நின்று விட்டனர். விஷயம் வேறு  ஒன்றும் இல்லை. மணமக்களுக்கு பின்னால் நிறு கொண்டிருந்த  ஒரு வாண்டுபயல்  மணமகளுடைய  சேலைத்தலைப்பை மணமகனுடைய வேட்டியுடன்  விளையாட்டுக்காக முடிச்சுப் போட்டுக் கொண் டிருந்தான். அவனுக்குப்பின்னால் நின்று அதைப்பார்த்த பெரியவர் போட்ட கூச்சல் தான் அது.  . 

No comments:

Post a Comment