Tuesday, March 26, 2013

மதுரை மலர் -திருவள்ளுவர் நினைவு இதழ். திருக்குறள் எனாமல் போர்டுகள்

வள்ளுவன் குறளை வையகம் முழுவதும் பரப்பும் நோக்கத்துடன்  கருத்துரையுடன் திருக்குறள் அட்டைகள் பல்லாயிரக்கணக்கில்  அச்சிட்டு  இலவசமாக வழங்கியும் சினிமாக்களில்  குறள்  சிலைடுகள்  காண்பித்து ம் சிறு சிறு புத்தகங்கள் வெளியிட்டும் வந்த எமது கழகத்தார் தற்சமயம் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்ட 3 அடி நீளம்  1 1/2 அடி அகலத்தில்  எனாமல் போர்டுகள் தயாரித்து ஒவ்வொரு ஊரிலும் பஸ்  நிலையங்களில்  பொது இடங்களில் மாட்டி வைக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு போர்டிலும் வெவ்வேறு குறள் .
மதுரை மாவட்ட த தமிழ்த்தொண்டர் கழகம்  செயலகம் கோம்பை.
அறி வுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
 என்னுடையரேனும் இலர்.  கருத்துரை : அறிவுடையவர்களே  எல்லா செல்வமும் உடையவர்கள். அறிவில்லாதவர்கள்எ   த்தகைய செல்வம் பெற்றிருந்தாலும்  அவர் இல்லாதவரே ஆவர்.  பொருளுதவி.....................
 அரை நூற்றாண்டு  சென்றாலும் வெய்யில் மழை காற்றுக்கு கே கேட்டுப் போகாத  அது மாதிரி போர்டு ஒன்று தயாரித்து பொது இடத்தில் மாட்டி  வைக்க  கழகத்தாருக்கு ரூபாய் 30 முப்பது மட்டும் செலவாகிறது. அத்தொகையை மனமுவந்து அளிக்கும் அன்பரின் பெயர் முகவரி  அந்த  போர்டின் அடியில் பொருளுதவி இன்னார் என்ற பகுதியில்  குறி ப்பிடபடுவதால் வியாபாரிகள் போன்றவர்கட்கு விளம்பரம்  போன்றும் பயன்படுகின்றது. . சில அன்பர்களின் பொருளுதவியால் ஏற்கெனவே  சில போர்டுகள்  தயாரிக்கப்பட்டு  கோம்பை, தேனி, வத்தலக்குண்டு  முதலான  ஊர்களில் பொது இடங்களில் மாட்டி வைக்கப்பட்டு  திருக்குறட் கருத்துக்கள்  பரவி மக்களுக்கு ப புத்துனார்ச்சி யை ஊட்டி வருகின்றன. இத்தொண்டில்  ஈடுபட விரும்பும் அன்பர்கள் "மதுரை மாவட்ட தமிழ்த் தொண்டர் கழகம்  செயலகம் கோம்பை  என்ற முகவரிக்கு போர்டு ஒன்றுக்கு  ரூபாய் முப்பது வீதம் அனுப்பி  தமிழ் நாட்டிலுள்ள எல்லா ஊர்களிலும் மாட்டி வைக்க  உதவி புரியுமாறு வேண்டுகிறேன் .
    க. சண்முகசுந்தரம்  தலைவர்
 
ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றி த
தாழாது உஞற்று பவர் -குறள் 
  தளர்ச்சியின்றி முயற்சி  செய்வோர் விதியென்று
 சொல்லப்படும்  ஊழையும்  வெ ல்லுவர.   

No comments:

Post a Comment