Friday, March 29, 2013

bus conductor behaviour by k.shanmugasuntharam.

ஓடும் பஸ்ஸில்  தமிழ்நாடு நாளிதழ் 5.12.54  க.சண்முகசுந்தரம் .
      சமிபத்தில் நான்டவுன்  பஸ்ஸில் பயணம் செய்த பொழுது  அதில் வந்த கண்டக்டர்  சிறந்த நகைச்சுவையாளர். பஸ்ஸில் வந்த பயணிகள் அனைவரையும் தனது பேச்சால் சிரிக்க வைத்துக் கொண்டே வந்தார். அதே சமயம் தனது கடமையையும் சரிவர  ஆற்றி வந்தார்.
     பஸ் நிற்குமிட ங்களில் வண்டி  நின்றதும்  கீழே  நின்று கொண்டிருந்த பயணிகளை  தயவுசெய்து வண்டி அநியாயமாக  வெய்யிலில் நிற்கிறது.  என்று வேடிக்கையாக கே கூறினார். பயணிகளும் சிரித்துக் கொண்டே  வேகமாக ஏறினர் 
      வண்டி கடைசி ஸ்டாப்பை நெருங்கியதும்  யாராவது டிக்கெட் வாங்காதிருந்தால் உடனே வாங்கிவிடுங்கள்  இல்லையெனில் இரண்டு ரூபாய் கிடைக்கும். என்றார் இரண்டு ருப்பி கிடைத்தால்  நல்லது தானே என்றேன்.
       உங்களுக்கு கிடைக்கும் என்றா கூறினேன் . கம்பனிக்கு அல்லவா கிடைக்கும்  என்று கூறினேன்.  என்றார்.
       டிக்கட் வாங்காதவர்கள் இரண்டு ருப்பி அபராதம் கட்ட நேரிடும்  என்ற செய்தியும் நாசுக்காக கீறிய முறை பாராட்டத் தகுந்ததாக இருந்தது. இவரைப்போல மற்றகண்டக்டர்களும் பணியாற்றினால்  மரியாதை வாரம் என்று  கொண்டாட வேண்டிய அவசியம் இருக்காது எனக் கருதுகின்றேன். 

No comments:

Post a Comment