Wednesday, December 29, 2010

பயனையும் இன்னும் அவர்கள் எண்ணியிருக்கும் அறங்களின்பயனையும் தமிழ்நாடு விரைவில் எய்தும் என்பது உறுதியே. குறிப்பு: ச.இளமுருகன் அவர்கள் ருக்மிணி ஆலையில் பணியாற்றினார்கள். பண்டிதமணி அவர்களின் மகன் சுப்ரமணியன் அவர்கள் மேலாளர் . அத்தை மகளை திரு மணம் செய்த பிறகு தனது தந்தையை தன்னுடன் தங்கி உணவு உண்ண வேண்டினார். எதற்கு சிரமம் என தந்தை மறுக்க இளமுருகன் தனது மேலாளர் அவர்களிடம் வாய்மொழியாக கேட்டு க்கொண்டு தலைமறைவு ஆனார். தந்தையும் இளமுருகனுடன் சேர்ந்தார். மேலாளர் ஒத்துழைத்தார்கள்.

கலைத்தந்தை-பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்

பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் அவர்கள் தனது திருவாசகம்-திருச்சதகம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ள செய்தி. அறிவு, அன்பு முதலிய நற்குணங்களும் கடவுள் வழிபாடு ஒழுக்க முதலிய நற்செயல்களும் ஒருங்கு வாய்க்கப பெற்றவர் என் இனிய நண்பர் ஆ.தெற்கூர் திருவாளர் கருமுத்து தியாகராசச்செட்டியார். இவர்கள் நல்லூழ் வய த்தாலும் தம் முயற்சியாலும் மதுரை, கோயம்பத்தூர் சேலம் புதுக்கோட்டை முதலிய நகரங்களில் நூற்றல் நெய்தல் தொழில்களுக்கு உரிய பெரிய எந்திர சாலைகளை அமைத்து பல ஏழை மக்கள் பிழைப்பதற்கு வழியுண்டாக்கினார். அத்தொழில் பெருஞ் செல்வம் அடைந்தார்கள். இளம்பருவத்தே இலங்கையில் தமிழ் புலமை மிக்க சிற்கைலாசம்பிள்ளை அவர்களிடம் குறிஞ்சி பாட்டு சிலப்பதிகாரம் நூல்களை பயின்றார்கள். தமிழ் இலக்கிய சுவையில் ஈடுபாடும் அதன் வளர்ச்சியில் பேரார்வமும் உடையவர்கள். திருவாசகத்தையும் திருக்குறளையும் தம் கண் போல் போற்றி வருபவர்கள். சிறு பருவம் தொட்டு என்பால் பிறழாத அன்பும் மதிப்பும் உடையவர்கள். இவர்கள் பிறந்த ஊரில் ஒரு கல்வி நிலையம் நிறுவி யுள்ளார்கள். மேலும் தாம் பிறந்த ஊரில் ஒரு கல்வி நிலையம் நிறுவியுள்ளார். மலும் தம் வாழ்க்கைக்கு நல்லிடனாக அமைத்துக் கொண்ட மதுரை மாநகரில் கல்லூரிகள் காணும் வேட்கை மிகுந்து முயன்று வருகின்றார்கள். அம்முயற்சியின்

Tuesday, December 28, 2010

கலைஅன்னை சுழல் கோப்பை வழங்கினார்கள். ஏ.ஏஸ் .பிரகாசம் ஜெயா தொலைக்காட்சியில் குறிப்பிட்டார்கள். கருமுத்து தோற்றுவித்த ஆலைகளின் நுழைவாயிலில் வெண்கலத் தகடுகளால் ஆன யானை இருக்கும். பள பள வென்று வெங்கலம் மின்னும். காண்போரை வியக்க வைக்கும். அதை த தாண்டி நுழைந்தால் தோட்டக்காரன் சிலையினையும் இருமடங்கும் மகளிர் விளக்கேந்தி இருக்கும் பளிங்கு சிலையில் இருப்பதைக்காணலாம் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பே . விசுவநாதம் அவர்கள் இந்தி எதிர்ப்பு மாநாட்டினை திருச்சிராப்பள்ளியில் கூட்டினார்கள். கருமுத்து தியாகராசர் தமிழ் வாழ்க என தமிழ்க்கொடி ஏற்றினார்கள். முத்தமிழ் காவலர் விசுவநாதம் வாழ்க்கை வரலாற்றினை சந்தோசம் அவர்கள் தயாரிக்க முத்துராமன் இயக்கினார்கள்..

Monday, December 27, 2010

திரை உலகினில் ஜெமினி நிறுவனம் இரும்புத்திரை திரைப்படத்தினை மீனாட்சி ஆளை பரவையில்திரைப்படமாக்கியது. தி.மு.க. வை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா அவர்கள் தியாகராசர் பொறியியல் கல்லூரி கட்ட இலவசமாக இடத்தினை வழங்கிட ஆணையிட்டார்கள்.
புரட்சி தலைவர் பொன்மனசெம்மல் அவர்கள் தியாகராசர் கல்லூரிக்கு சுழற்கோப்பை ஒன்றை வழங்கினார்கள். ஆண்டு தோறும் கல்லூரிகள் இடையே நாடகப் போட்டியினை நடத்தி வெற்றி பெறும்நாடகக்குழுவிற்கு அச்சுழல் கோப்பையை வழங்க சொன்னார்கள்.பிரகாசம் எழுதிய மாண்டவன் மீண்டான் நாடகம் தியாகராசர் கல்லூரிக்கு சுழல் கோப்பையை பெற்றுத் தந்தது. சாலமன் பாப்பையா அவர்கள் தந்தையாகவு ம இளமுருகன் மகனாகவும் நடித்தனர்.
பஞ்சு கொள்முதல் வழக்கு பஞ்சு விலை பேரம் பற்றிய வழக்கு நூல்விலை கட்டுப்பாடு பற்றிய வழக்கு நூல்கட்டுகள் பறிமுதல் வழக்கு என மீனாட்சி ஆலையில் வழக்கறிஞர்கள் குழு அமைத்து நீதி மன்றங்களில் வெற்றி பெற்றார்.
கலைத்தந்தை க்கு கோவில் கட்டும் அளவிற்கு அகில இந்திய ஆலை முதலாளிகள் பயன்பெற்றனர். ஆயிரம் பிரச்னைகள் பற்றித்தான் என ஆனந்த விகடன் தனது மதுரை மாவட்ட மலரில் எழுபதில் குறிப்பிட்டு இருந்தது. குடும்பங்களில் சந்ததிகளிடம் மரபணுக்கள் வழியாக சில அபூர்வ பண்புகள் நீடித்து நிலவி வருவதாக நவீன விஞ்ஞான ம கூறுகின்றது. கருமுத்து தியாகராசரின் குணநலன்களை அவரது மகன் கருமுத்து கண்ணனிடம் காணலாம்.
விரித்த படியே கவிழ்த்து மேசை மீது வைத்தார். ஆனால் மீண்டும் பயன்படவில்லை இறக்கின்ற தருவாயில் கூட தமிழ்புலவர்களே அவரது நெஞ்சில் நிறைந்துள்ளார்கள். முன்னால் குடியரசுத் தலைவர்கள் வி.வி.கிரி வெங்கட்டராமன் ஆகியோர் அவரது மாளிகைக்கு பதவியில் இருந்த போது வருகை புரிந்து உள்ளார்கள். ஜெயப்பிரகாச நாராயணன் மீனாட்சி ஆலைக்கு வந்துள்ளார்கள். வருமான வரி இலாகாவினர் நிர்வாக இயக்குனர் சம்பளத்திற்கு வரிவிதித்த பொழுது வரிகட்டாமல் வழக்கிட்டு வென்றார். அகமதாபாத் ஜவுளிக் கழகம் மலர் ஒன்றினை கருமுத்துவிற்காகவெளியிட்டு கௌரவித்தது.
காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க. சொற்பொழி வாளர்களை பேரறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி நாவலர் நெடுஞ்செழியன் கவியரசு கண்ணதாசன் ஆகியோர்களை தியாகராசர் கலைகல்லூரியில் உரையாற்ற அழைத்தார். சென்னைக்கு வந்திருந்த உலகத்தமிழ் மாநாட்டில் கலந்து கொண்ட உள்நாடு வெளிநாடு தமிழ் அறிஞர்கட்கு விருந்தும் பரிசும் அளித்தார். திருக்குற்றாலத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை புறநானுற்றில் மோசி கீரனார் பாடிய மாசற விசித்த என த்தொடர் வரும் பாடல் எழுந்த சூழலை டாக்டர் மூ.வ. அவர்கள் எடுத்து கூறினார்கள். அதைப்பக்கம் பிறழாமல் வை. அதனை தனியே எழுதி வைக்கவேண்டும் என்று கருமுத்து கூற கலைஅன்னை அந்நூலை