Friday, December 7, 2012

மீனாட்சி சுந்தரனார் , டாக்டர் சிதம்பரநாதனார் ,பேராசிரியர் சு.வெள்ளை
வாரண னார், டாக்டர் இராசமாணிக்கனார் ,பேராசிரியர் அ
.கி.பரந்தாமனார்  டாக்டர் மு.வரதராசனார் ,டாக்டர் நா.பாலுசாமி ,பேராசிரியர் 
அ.மு.பரமசிவானந்தம் , எஸ்.ஆழ்வார்  ஐயங்கார் ,டி.ஏ.வி.நாதன் ,திருவாசகமணி,பாலசுப்ரமணியம் ,திருக்குறள்  முனிசாமி போன்ற தமிழ் அறிஞர்கள்,எங்கள் தந்தையாருக்கு சிறந்த  நண்பர்களாக விளங்கினார்கள்.
  எங்கள்  தந்தையாருக்கு ப பத்திரிகை த்துறையில் இருந்த ஈடுபாட்டின்
 விளைவாக 
பசுமலை நாவலர் ச.சோமசுந்தர பாரதி யார் அவர்களிடமும் அவர்களின் குடும்பத்தினரிடமும் எங்கள் தந்தையாருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.
 நாவலர் அவர்களின் மகள் (திருமதி)லட்சுமி பாரதி ,மருமகன் கிருஷ்ணசாமி பாரதியார் நாவலர் அவர்களின் மற்றொரு புதல்வி டாக்டர் லலிதா காமேசுவரன் போன்றோர் எங்கள் குடும்பத்துடன் இன்றளவும் நெருங்கிய
தொடர்பு கொண்டவர்கள்.
       டாக்டர் தெ.பொ  

Thursday, December 6, 2012

தமிழ்த் திருநாள் விழாக்குழுவின் செயலாளராக பொறுப்பேற்றுச சிறப்புற   
நடத்தினார்.
      தாம் உருவாக்கி வளர்த்த திருவள்ளுவர் கழகத்தின்வெ  ள் ளி விழாவினையும் திருவள்ளுவரின் ஈராயிரம் ஆண்டு விழாவினையும்
 கோலாகலமாக நடத்தி மகிழ்ந்தார்.
     தமிழ் அறிஞர்கள் அவர்கள் வாழும் காலத்திலேயே பாராட்டப்பட வேண்டும்
என்பதில்  எங்கள் தந்தையாருக்கு இருந்த தணியாத  ஆர்வத்தின் காரணமாக
 நாவலர் ,கணக்காயர் , டாக்டர் ச.சோமசுந்தர பாரதியாரின் 80ஆம் ஆண்டு விழாக்குழுவின்  செயலாளர்களாக ப்பொறுப்பேற்று அதைகண்டோர் வியக்கும் வண்ணம்  மதுரையில் நடத்தினார். அதைப் போலத்தமிழ்ப பெரியார்
திரு அ.கி.பரந்தாமனார்  ஔவை சு.துரைசாமிப்பிள்ளை,பேரறி ஞர்  கார்மேகக்
கோனார் , கல்வெட்டறிஞர் , சதாசிவப்பண்டாரத்தார், ஆட்சி ச சொற்காவலர்   
கி.இராமலிங்கனார்,முத்தமிழ்க் காவலர் கி.ஆ.. விசுவநாதம் ,குறள்  வேந்தர்
பண்டித மீ. கந்தசாமிப்புலவர் ,பேராசிரியர்  திரு.எ.மு.பரமசிவானந்தம் போன்ற 
பலருக்கும் விழ எடுத்தார்.மகிழ்ந்தார்.
     இல்லம் நாடி வரும் தமிழ் அறிஞர்களை வரவேற்று உபசரிப்பதிலும், அவர்களோடு இலக்கிய உரையாடல் நிகழ்த்துவதிலும்,எங்கள் தந்தையாருக்கு த தணியாத வேட்கை இருநதது. எங்கள் தா ய்வ ழிபாட்டனார் 
திருநெல்வேலி திரு. ஆறுமுகம் பிள்ளை அவர்களுக்கு மிகவும் நெருக்கமான
வரான சொல்லின் செல்வர் ரா,பி .சேதுப்பிள்ளை அவர்களிடம்  எங்கள்
தந்தையாருக்கு இருந்த பயபக்தி அளவிட முடியாதது. அவரும் மதுரை வரும் போதெல்லாம் எங்கள் இல்லத்திற்கு வந்து தங்கி விருந்துண்டு உரையாடி
மகிழ்ந்து செல்வார்.
     வித்துவான் திரு.இராகவய்யங்கார் , கோவை சிவககவிமணி சி.கே .சுப்ரமணிய முதலியார் , திருவனந்தபுரம் இசைச்செல்வர் தி. இலக்குமணப பிள்ளை  தமிழ்ப்பேரறிஞர்  திருஸ்.வையாபுரிபிள்ளை ,பண்டிதமணி
மு.கதிரேசன் செட்டியார் ,மறைமலைஅடிகள் ,பேராசிரியர் ஆ.கார்மேகக்கோனார் ஆ.மு. சரவணமுதலியார் , திரு.அருணாசலம் பிள்ளைரசிகமணி  டி.கே.சிதம்பரநாதமுதலியார் ,பாவநாசம இலக்கும
சுவாமிகள். திரு நடேச முதலியார்  தமிழிசை வித்தகர்  குடந்தை ச ச்ந்தரசேனார் ,அருணாசலக்கவிராயர் ,எம்.எஸ்.பூர்ணலிங்கம்பிள்ளை ,அப்பனைய்யங்க்கார் ,நல்லுசாமிப்பிள்ளை சுந்தரமூர்த்தி  ஓதுவார். அருணாசல க்கவுண்டர் போன்ற பழம் பெரும் தமிழறிஞர் களின்    
தொடர்பு எங்கள் தந்தையாருக்கு இருந்தது.
தற்பொழுது  சென்னைப்பல்கலைக்கழகத் தின்  தமிழ்த்துறைத்தலை வராக
விளங்கும் டாக்டர் ந. சஞ்சீவி அவர்களின்  தந்தையான பெரும்புலவர் திரு.நடேச முதலியார் அவர்கள் எங்கள் தந்தையின் தமிழாசிரியராக விளங்கினார். அவர் ஊட்டிய தமிழறிவு எங்கள் தந்தையாரைச சிறந்த தமிழ் அறிஞராக  உருவாக்கிற்று.
      இளமையில் தமிழ்நாடு வாலிபர் சங்கம்  என்ற  அமைப்பினை நிறுவி மதுரையில் தீவிரமாக வேலை செய்தார். இரண்டாவது உலகப்போரின் போது
பர்மாவிலிருந்து உயிர்தப்பி ஓடி வந்த தமிழர்களுக்கு இச்சங்கம் பெரும் பேருதவி புரிந்தது.
      திருக்குற்றாலத்திருந்த திரு.தி.ப.சுப்ரமணிதாசு  அவர்களை மதுரைக்கு அழைத்து வந்து மதுரையில் திருவள்ளுவர் கழகத்தை நிறுவி அதனுடைய
 செயலாளராகவும் தலைவராகவும் தற்போது புரவலாராகவும்  இருந்து
எங்கள் தந்தையார் ஆற்றி வரும் தொண்டு தமிழகம் அறிந்த ஒன்று.
     அதைப்போலவே  மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர பணியினை
 ஏ ற்று அதைபுனர்நிர்மாணம செய்து ம் செ ந்தமிழ்க்கல்லூரியை நிறுவியும்
செந்தமிழ் இதழை வெளியிட வழி வகுத்தும்  இவற்றுக்கெ ல்லாம் சிகரம் வைத்தாற்போல தமிழ்சசங்கத்தின்  பொன்விழாவை  இந்த  நாடே வியப்புற  
நட த்தியும்  அருந்தொண்டாற்றி னார்கள்..
     1942ல் மதுரையில் முத்தமிழ் மாநாடு என்ற பெயரில் ஒரு மாபெரும் மாநாட்டினை நடத்த முன்னின்று  பணியாற்றினார்.
    1948ல் சனவரி 1-2ல் தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் சார்பில் மதுரையில் நடைபெற்ற  
எங்கள் தந்தை - நீங்காத நினைவுகள். (ப.நெ)அய்யா பழ . நெடுமாறன்  அவர்கள்
எங்கள்  தந்தை அறநெறி யண்ணல் பவழ விழா  மலரில் எழுதிய கட்டுரை.
   எங்கள் தந்தையார் தம்மை முழுமையாக தமிழ் த தொண்டிற்கு அர்ப்பணித்துக் கொண்டார் என்று சொன்னால் அது மிகையாகாது. குடும்ப
நலனை விட த தமிழன்னையின் சேவையையே பெரிதாக மதித்தார். தமிழ் மீது அவர் கொண்ட பற்று பரம்பரையாக  அவருக்கு க்  கிடைத்த பேறாகும். எங்கள்
பாட்டனார் திரு.கிருஷ்ணபிள்ளை அவர்கள் புத்தக வணிகம் செய்து வந்தார்.
விவேகாநந்தா  பெயரில் சொந்த அச்சகம் ஒன்றினையும் அவர் நடத்தி வந்தார். மதுரையின் மிகப்பழைமையான அச்சகம் இதுவே. இது 1924ஆம் ஆண்டில்
தொடங்கப் பெற்றது. மதுரைப்புதுமண்டபத்தில் சென்னை பி.நா.சிதம்பர முதலியார் புத்தகக்கடை ஒன்று இருந்தது. அதன் நிருவாகப் பொறுப்பு  முழுவதையும் எங்கள் பாட்டனார் கவனித்து வந்தார். சிறு வயதில் நான் என் பாட்டனாருடன் பலமுறை அந்தப் புத்தகக் கடைக்கு ச சென்றிருக்கின்றேன்.
 புது மண்டப வாயிலில் அவர் நுழைந்தால் வழி நெடுக இருக்கும் கடைக்காரர்களும்  மக்களும் அவருக்கு பயபக்தியுடன் வணக்கம் செலுத்துவார்கள். அந்நாளில் இருந்த தமிழ்ப்புலவர்களும் , நாடக ஆசிரியர்களும் எங்கள் பாட்டனாரைக் கண்டு பேசுவதற்காக அடிக்கடி வருவார்கள். அவர்கள் எழுதிய பல்வேறு நூல்களை யும் எங்கள் பாட்டனார்  பதிப்பித்தார். குறிப்பாக த தமிழ் நாடக உலகின் வழிகாட்டியும்  மாபெரும் மேதையுமான தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் எழுதிய ஒன்பது நாடக               நூ ல்களை முதன்முதலாக அச்சிட்டு வெளியிட்ட பெருமை எங்கள் பாட்டனாரசாரும்.  மேலும் புகழ் பெற்ற எழுத்தாளரான பி.ஸ்ரீ. முதன் முதல் எழுதிய ஆண்டாள் சரித்திரம் என்னும் நூலையும் எங்கள் பாட்டனாரே பதிப்பித்தார்.

வள்ளல் மனம் என்கின்ற
வானத்தை அளவெடுக்க த்
தெரியாமல் திகைக்கின்றோம் 

.  தும்பைப் பூப போன்ற ஆடை
    தூய்மையே நிறை ந்த உள்ளம் !

   இவருடைய நெற்றியிலே
   இறைச்சின்னம் ....
  நெஞ்சினிலே தமிழ்ச்சின்னம்
   அண் ண லிவர்  வெற்றியிலே
   உண்மையெனும் விழுச்சின்னம்.

    உலகமனிதர்களில் -இவர் ஓ
    உலோக  மனிதர்
    தங்கம் இவருடைய
   நெஞ்சுக்குள் தங்கும்
   வெள்ளி தலை மீது வீற்றிருக்கும்
  ஆமாம் !
  நரை
 காலம் இவர் தம் தலைக்கு ச
 சூட்டிய கௌரவ  வெள்ளிக்கிரீடம் !
 உலக மனிதர்களில் _இவரொரு
  உலோக மனிதர்.
  இவர்
 இனிய பண்பில் எதுகை மோ னை
 ஒழுக்கத்துரையாய்  உயர்ந்த வெண்பா

வெள்ளைத் தாமரையை விட்டெழுந்து
கலைமகள் இவருடைய
உள்ளத்தாமரையில் இடம்கேட்டாள்.
      விருந்தோம்பல்
தமிழ்த்தொண்டும் மதத் தொண்டும்
பூமியிலே செய்யும் புறத் தொண்டு ...
வயிற்றுக்கு செய்யும் வளமான தொண்டுதான்.
அன்பர்கட்கு செய்யும் அறத்தொண்டு
அதனால் தான்
உணவை அமுதென்று ஓதுகின்றார்கள்.
அற நெறி  அண்ணல் -ஓர்
   அமுதநநூல  கம்
ஆயிரமாயிரம்
வயிறுகள் .. அதன்
வாசகர்கள்.
 இவருடைய

படைப்புக்களை ருசித்து ப படிக்கும்  
வயிறு களில் ஆங்காங்கே
புடைப்புகள் தெரியு,ம்.
 ஊ சியைப்போல ஒல்லியாய்
இருப்பவர்க்கும் இவர் வீட்டு ப
பந்தியில் உட்கார்ந்தால்
தொந்தி விழும்.
 விருந்தும் மருந்தும் மூ ன்று நாள் என்பார்கள்.
முப்பது நாள் இருந்தாலும் _இவ்ர்வீட்டு
விருந்து குறையாது.

  பெற்ற பெருமைகளில்  பெரிய பெருமை எது.? மு.மேத்தா

தமிழ்ச்சங்கப பணிபுரிந்து
 குழந்தைகளாய நாங்கள் எல்லாம்
 தவழ விழா நடத்திய
 தந்தைக்கு இன்றிங்கே
 பவழ விழா நடக்கிறது.

 இது ஒரு தேர்த்திருவிழா !
 அறநெறி அண்ணலின்
 அத்தனை பெருமைகளும்
 திரண்டு நிற்கிறது தேராக

குழந்தைகள் நாங்களெல்லாம்
 கூடி ஆசையுடன்
 வடமிழுக்கப பார்க்கின்றோம் 
வரவில்லை _ஆதலினால்
படமெடுக்க பார்க்கின்றோம்.!
கேமிரா கிடைக்க வில்லை
ஆதலினால்
பாட்டெழுதி நீட்டுகிறோம்.!

அப்போதும் எங்கள்
வார்த்தைகட்குச சிறகு
 வளராத காரணத்தால் _இந்த