Sunday, December 25, 2011

முடியும் என்று சொல்லியே முடித்து விட்டார்களே
நெஞ்சு இருக்கும் வரைக்கும் உன் நினைவு இருக்கும்
நாங்கல்லாம் என்று கூறி நீங்கி விட்டாய்
அழுகின்ற கண்ணீர் கொதிஉள்ளம் தனை குளிர்விக்குமா
ஏட்டில் எழுதி வைத்தேன் அழுத்தியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமட இறைவா கூட்டி சென்ற இடம் ஏதடா
துன்பத்திலே ஒரு சொல்லினை சொல்லி சிரிக்க செய்திடுவாய்
பாண்டியம்மா பெத்த பிள்ளை பாண்டிநாடு புகுந்த தம்மா
உறைவிடம் தந்த மகள் உறைந்து போனதம்மா
உடை எடுத்து தந்த மகள் உள்ளத்தை உடைத்ததம்மா
உணவு தந்த மகள் உலகை விட்டு மறைந்ததம்மா

கீதாவிற்கு அஞ்சலி

விழிகளில் கண்ணீர் மல்க வழியெல்லாம் உந்தன் சிந்தனை
ஆசையிலே பாத்தி கட்டி அன்பை விதைத்தாய்
அல்லும் பகல் காத்திருந்து பறி கொடுத்தோம்
தட்டிப்பறித்து விட்டாரே சஞ்சலம் கொள்ள வைத்தாரே
நினைவாலே கவி எழுதி உனக்காக வைத்தேன்
மறு பிறவி எடுத்து வா மருமகளே
நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே
தாய் கொண்டு வந்ததை நோய் கொண்டு போன தோ
கடிந்து ஒரு சொல் சொல்லியதில்லை அதனால்
ஒடிந்து போனது எங்கள் மனம் அறிவாயா

Tuesday, December 20, 2011

குடல் இரைப்பை நோயா

ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்னைக்கு சென்று சிகிச்சை பெறுங்கள். விபரங்கட்கு 9688994522

Tuesday, August 9, 2011

உயர்திரு .பழ நெடுமாறன் ஆதரவாளர் பஞ்சாலைக் கவி இளமுருகன் .

VGP means very good person border vGP means variety of goods possessor for sales VGP m
eans very good promotors VGP means Very Good in prompt டெலிவெரி
வங்கக் கடலோரம் தங்கக் கடற்கரை
பொங்கும் அலையோசை எங்க வி ஜி பி புகழ் பாடும்
கர்ண மகராஜனுக்கு கவச குண்டலம்
வி ஜி பி குடும்பத்தார்க்கு கோட்டும் சூட்டும்
உள்ளத்து நல்ல உள்ளம் வி ஜி பிக்கு
தமிழுக்கு வழங்காது உறங்க மாட்டார்
நாலும்இரண்டும் சொல்லுக்குறுதி
சொல்லும் செயலும் வி ஜி பி க்கு உறுதி
முத்தமிழ் வளர்த்திட உலகத்தமிழ் ச சங்கம்
முத்தமிழ்ககாவலர் கி.ஆ.பெ திரை ப படம் வி ஜி பி
வள்ளுவன் சிலை தனை உலகினுக்கு தன செலவில்
தந்து வான் புகழ் கொண்ட வி ஜி பி.
யாமறிந்த தொழில் அதிபர்களில் வள்ளுவன் சிலைக்காக
தடையின்றி பணம் வாரி வழங்கும் விஜி பி.
தமிழ் அறிஞ்ர தனிக் கண்டால் தன்னை மறந்து பேசிடுவார்.
காவியமே பாடலாம் சந்தோசத்திற்காக
ஆவியும் அளிப்பார் தமிழுக்காக
வாழிய வி ஜி பி வாழ்க நற்றமிழர்
வாழிய சந்தோசம் வழிய தாய்த்திரு தமிழ்நாடு.
உயர்திரு பழ. நெடுமாறன் அவர்களை உலகிற்கு த தந்த
ஆசான் அறநெறி அண்ணல் கி. பழநியப்பனார்அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் வடக்காடி வீதி திருவள்ளுவர் கழக நிறுவனர் அவர்களை நினைவில் நிறுத்தி
பாடலை எழுதியவர் பஞ்சாலை க கவிஞர் இளமுருகன்.

Wednesday, August 3, 2011

கலைமாமணி செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் பவள விழா

நாள் : ஆகஸ்ட் பதினைந்து இரண்டாயிரத்து பதினொன்று.
இடம் : வி.ஜி.பி. பீச் ரிசார்ட் , சோழமண்டபம், கிழக்கு கடற்கரை சாலை சென்னை
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள்
டாக்டர் (திருமதி)ராதா தியாகராசன் அவர்கள் இயற்றிய ஆலைஅரசர் கருமுத்து
தியாகராசர் வரலாற்று நூலினில் தேசத் தந்தை மகாத்மா காந்தி கலைத்தந்தை கருமுத்து தியாகராசர் இல்லத்தில் அரை ஆடை அணிந்த வரலாற்று சிறப்புமிக்க
செய்தி இடம் பெற்றது போல வி.ஜி.பி. உலகத்தமிழ்ச சங்கம் தயாரித்து சுப.முத்துராமன் இயக்கிய முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் வாழ்க்கை வரலாற்றில் திருச்சிராப்பள்ளியில் ஏழு எதிர்க்கட்சிகள் கூடி நடத்திய மாநாட்டின் படங்களை இடம் பெறச்செய்தவர் வி.ஜி.பி. என்பதை உலகத்தமிழர்கள் பாராட்டி நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றார்கள். படங்கள் விளக்கங்களோடு பிரசுரிக்கப்பட்டுள்ளது. பஞ்சாலை கே கவிஞர் ச,இளமுருகன்

Wednesday, June 1, 2011

ஜுன் மாதம் ஒன்றாம் தேதி தினமலரில்

ஷார்ஜா ரோலா அல்முபாரக் சென்டரில் உள்ள ஏசியன் பேலஸ் ஹோடேலில் இலக்குமணன் முதன்மை மேலாளர், துபாய் தமிழ் சங்க தலைவர் ரமேஷ் விஸ்வநாதன் அவர்கள் முன்னிலையில் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி பழைய மாணவர்கள் நூற்றி நாற்பது குடும்பத்தாருடன் கூடி கருமுத்து கண்ணன் அவர்கள் வாழ்த்து செய்தியுடன் கலந்து உரையாடல் நிகழ்ச்சி மே மாதம் ஆறாம் தேதி நடத்தினர். திரு. சிவக்குமார், இராஜா , மன்னவன் ஆகியோருக்கு கருமுத்து தியாகராசர் படம் கொடுக்கப்பட்டது.

Saturday, May 28, 2011

பழ.நெடுமாறன் துபாயில்



இலக்கியப்பேச்சாளர் தமிழ் ஆர்வலர் திரு.பழ .நெடுமாறன் மே ௨௭ வெள்ளிக்கிழமை அல் கிசைஸ் பெண்கள் உயர் தொழில் நுட்பக்கல்லூரி துபாயில் சொற்பொழிவு ஆற்றினார்கள். பஞ்சாலை கவிஞரும் அவரது துணைவியார் திருமதி கல்யாணியும் தலைவர் பழ . நெடுமாறன் அவர்களை சந்தித்தோம் . சந்திக்க உதவிய தோழர்கள் கோவிந்தராஜ் , பழனி , ஆனந்தன், மலை , மதன், சிவபெருமாள் ஆகியோருக்கு எங்களது நன்றி.உலகத்தமிழர் பேரமைப்பு க்கு நிதி தாருங்கள்.