Thursday, November 29, 2012

நிருவாகத துறையில்  அவரை 
கலைத்தந்தை கருமுத்து தியாகராச செட்டியார். (  சுந்தரராமன் )எல்.என்.எஸ்

என் எஜமானர் வள்ளல் கலைத்தந்தை கருமுத்து தியாகராஜ செட்டியார் அவர்களை ப் பற்றி எழுத வாய்ப்பு க் கிடைத்ததை  ஒரு பெரும பாக்கியமாகக்
கருதுகிறேன் .
 அவர் மனித குலத்தில் ஒரு அரிய  மாணிக்கம் .அஞ்சா நெஞ்சமும் தள ராத
ஊக்கமும்  அயராத உழைப்பும்  வே று  யாருக்கும்  கிட்டாத  ஆற்றலும் 
கொண்டவர் .எந்த க் காரியத்தை எடுத்துக் கொண்டாலும் நன்கு  ஆ லோசித்து
பலாபலன்களை த தெள்ளத்தெளியசிந்தித்த  பிறகே  அதில் இறங்குவார். 
இறங்கியபின்னர் நோக்கார்.  கருமமே  கண்ணாய்  பணியாற்றுவார். ஒரு சிறு ஆலையில் தொடங்கி,வெளிநாட்டு வல்லுனரும் போற்றிட பல   நவீ ன ஆலைகளை  அமைத்து ப பல்லாயிரம்  மக்கள்  வாழ வழிவகுத்த அந்த உத்தமரை என்றும்  மறக்க இயலாது.  அவரது ஆலைகளும்  கல்விக்கூடங்க ளும   அவருக்கு  என்றும்  அழியாத  சின்னங்களாக என்றென்றும்  விளங்கும் .     
     சட்டம்  அவருக்கு இனிப்பு ப பண்டம் மாதிரி. சட்ட நுணுக்கங்களை  நன்கு  ஆராய்ந்து , சட்ட நிபுணர்களும் சிறந்த வழக்கறி ஞ்ர்களும் பரவசமாகி  வியக்கும்  வண்ணம்  அலசி எடுத்து க் கூ றுவார்.தம் சட்ட ஞா னத்தால்  அவர் வென்ற  வழக்குகள். பல பல. அவற்றில்  அவர் கண்ட  வெற்றியால்  பலன் அடைந்த ஆளை நிருவாகத்தினர்  இந்தியா  முழுவதும்  இருக்கின்றார்கள்.
  அவர்கள் அவரைத தெய்வாமகவே  போற்றி ப புகழ்கிறார் கள் . 
நிருவாக இயல் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்  படிப்புத துறையில் ஒரு கலையாகத்தோன்றுவதற்கு  முன்னாலேயே  அதன்  அடிப்படைத்தத்துவங்களை  நன்கு அறிந்து தமது நிருவாக அமைப்பில் அவற்றை ப பெரிதும் பயன்படுத்தி இருக்கிறார். கோடிக்கணக்கில் வரவு செலவுகள் இருந்தும் தனது சொந்தக்ண க்கில் காசோலை  எழுதுவதோ       
கையெழுத்து இடவோ  இல்லை.  உரிமை பெற்ற உதவியாளர்களை த திறன் அறிந்து பொ றுக்கி ப்  பொறுப்பை அவர்களிடம்  விட்டு மேற்பார்வையை மட்டும் தம்மிடம்  வைத்து  கொள்வார். தம்  அலுவல கங்களில் வேலை  பார்க்கும்  யாரையும்  துச்சமாககே கருதாமல்  எல்லோரிடனும்  அளவளாவி  விஷ யங்களைகே கிரகித்துக் கொண்டு  தவறு நடக்கும்  இடங்களைக்கண்டு  பிடித்து  குற்றங்களை   உடனுக்குடன்   களைந்து  எறிவார்.  யாரும் அவரை     ஏ மாற்றி விடஇயலாது.. 
  ஆழ்ந்த  சமயப்பற்றும்  திடமான கடவுள்  நம்பிக்கையும் என்றும் அவர் உள்ளத்தில்  கோயில் கொண்டு  இருந்தது.  விதியின்  வலிமையையும்  அறிந்தவர். அவர் தோல்விகளை கண்டு  அயரக் கூ டியவர் அல்ல . பெருஞ் சிக்கல்களை யும்  வழிய இன்னல்களையும்  சந்திக்கும் நே ரத்தில் தான் அவர் முழுப்பொலிவுடன்  திகழ்வார். எத்தனை இன்னல்கள் வந்த போதிலும்  அவர் முகம் வாட்டமடைந்ததைகே கண்டி லேன்.  அது  போன்ற  சமயங்களில்  வருவோ ர்களிடம்  ஏதும் நே ராதது போல இன்முகம் காட்டிப் பே சிடுவார்.

karumuththu thiagarajn chettiar by L.N.S.Sundararaman


மதுரையில் உலகத்தமிழ் சங்கம் மீண்டும் விரைவில் கூடஉள்ளது. மாவட்ட
தமிழ் வளர்ச்சி த துறை  அதிகாரி உயர்திரு  பசும்பொன் அவர்கள்  அதன் தனி அதிகாரியாக  நியமிக்கப்பட்டுள்ளார்கள். கருமுத்து தியாகராசர்  அவர்கள்  தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள்கி.பழனியப்பனார்  ஆற்றிய தமிழ் த்தொண்டு  அச்சிட்டு  வழங்க அனுமதி தர  வே ண்டுகின்றே ன்  ச. இளமுருகன்     

Wednesday, February 1, 2012

*pasam*


                                                 பாசம்
தரணியில் தரிக்கும் போதே வரும் தாய்பாசம்
தரணியில் தலை நிமிர்ந்து நடக்கவைக்கும் தந்தை பாசம்
தான்  ஆடாவிட்டாலும் ஆடிவரும் தனது உடன்பிறப்புகளின் பாசம்
தான் என்ற நிலை வந்தவுடன் துணையின் பாசம்
தனக்கென்று குழந்தைகள் ஆனவுடன் பிள்ளையின்  பாசம்
தனக்கென்று ஒரு துணை வரும் வரை அப்பிள்ளையின் பாசம்
தான் தோன்றியாய் இருந்தால் இல்லை இப்பாசம்
தன் பிள்ளைகளின் பிள்ளைகள் மேல் தனிப்பேரப்பிள்ளை பாசம்
தரணியில் இருந்து பாசக்கயிறு இழுக்கும்போதும் பாசம் .

மரு.கோமதி அழகப்பன்  தனது பேரன் சூர்யாவிற்கு எழுதிய பாடல்

PASAM

                                                  பாசம்
தரணியில்  தரிக்கும்  போதே  வரும்  தாய்பாசம்
தரணியில்  தலை நிமிர்ந்து  நடக்கவைக்கும்  தந்தை  பாசம்
தான்  ஆடாவிட்டாலும் ஆடிவரும்   தனது உடன்பிறப்புகளின் பாசம்
தான் என்ற நிலை வந்தவுடன்  துணையின்  பாசம்
தனக்கென்று   குழந்தைகள்  ஆனவுடன்  பிள்ளையின்  பாசம்
தனக்கென்று    ஒரு  துணை  வரும்  வரை   அப்பிள்ளையின்   பாசம்
தான் தோன்றியாய் இருந்தால் இல்லை இப்பாசம்
தன்  பிள்ளைகளின்   பிள்ளைகள்  மேல்  தனிப்  பேரப்பிள்ளை பாசம்
தரணியில்  இருந்து  பாசக்கயிறு    இழுக்கும்போதும்  பாசம் .

மரு.கோமதி அழகப்பன்  தனது பேரன் சூர்யாவிற்கு எழுதிய பாடல்