Tuesday, May 24, 2011

பஞ்சால் நூற்கப்படுவது நூல் பிற பொருளைப்பஞ்சோடு கலத்தல் பணமிழக்கும் வழி.
அரைக்கெண்டையை ஓட்டினால் அதிக உற்பத்தியேஅறுத்தெரிவதால் குறையும் உற்பத்தியே.
நூல் நூற்கவே பஞ்சு என்பர்கழிவுக்கும் அதுவே துணை.
அறுந்த இழைகட்டி தரத்தினைப்போற்று ஆரியாதுரிதமாக எடுத்து உற்பத்தியைக் கூட்டு.
பஞ்சினால் நூற்கப்பட்ட நூல் போல் ஆகாதேகழிவினால் நூற்கப்பட்ட நூல்.
பஞ்சை நூற்றலும் நூற்றதை விற்றலும் உலகில் பஞ்சாலையின் தொழில்.
நூற்ற‌தை விற்ற‌ல் விற்ற‌ லாப‌த்தில்ஊதிய‌ம் வ‌ழ‌ங்குவ‌து ப‌ஞசாலை.
உடை அணிந்து ம‌கிழும் மாந்த‌ர்க்கு உடை த‌ருவ‌து ப‌ஞசாலை.
ப‌ஞ்சு நூலைத்த‌ருதலால் ப‌ஞ்சுஉயிரினும் ஓம்ப‌ப்ப்டும்.
பஞ்சினால் நூற்க‌ப்ப‌ட்ட‌ நூல் சிறிதெனினும்த‌ர‌மான‌தெனில் ந‌ல்ல‌ விலை த‌ரும்.
எண்க‌ள் ஓட்டுவ‌தால் என்ன‌ ப‌ய‌ன்நூல் உற்ப‌த்தி கூடாவிடின்.
எப்ப‌ஞ்சு எந்நூலைத் த‌ரும் ஆய்ந்து அப்பஞ்சைஅப்ப‌ஞ்சை வ‌ழ‌ங்குவ‌து அறிவு.
ந‌ல்ல‌ ப‌ஞ்சை வ‌ழ‌ங்குவ‌து ந‌ன்று ந‌ன்ற‌ல்ல‌துஅன்றே நிறுத்துத‌ல் ந்ன்று.

k.shanmugasundram

மதுரை மலர் திருவள்ளுவர் நினைவு இதழ் 1951ல் வெளிவந்த கட்டுரை. மதுரை மலர் அறநெறியண்ணல் கி.பழநியப்பனாரால் வெளியிடப்பட்ட மலர்.திருக்குறள் எனாமல் போர்டுகள். வள்ளுவன் குறளை வையகம் முழுவதும் பரப்பும் நோக்கத்துடன் கருத்துரையுடன் திருக்குறள் அட்டைகள் பல்லாயிரக்கணக்கில் அச்சிட்டு இலவசமாக வழங்கியும் திரைப்படக்கொட்டகையில் குறள் சிலைடுகள் காண்பித்தும் சிறூசிறூ புத்தகங்கள் வெளியிட்டு வந்த எமது கழகத்தார் தற்சமயம் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்ட 3 அடி நீளம் 11/2 அடி அகலத்தில் எனாமல் போர்டுகள் தயாரித்து ஒவ்வொரு ஊரிலும் பஸ் நிலையம் போன்ற பொது இடங்களில் மாட்டி வைக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு போர்டிலும் வெவ்வேறு குறள்கள். இப்படி என் தந்தை க. சண்முகசுந்தரம் அவர்கள் தமிழ்த்தொன்டினை ஆரம்பித்து முத்தமிழ்க் காவலர் அவர்கள் வாயிலாக கருமுத்து தியாகராசர் அறக்கட்டளையின் மேலாளராக பணிபுரியும் வாய்ப்பினைப் பெற்றார்கள். ஐயா பழ நெடுமாறனது குறிஞ்சி இதழில் கட்டுரைகள் எழுதி வந்தார்கள். மத்ரை திருவள்ளுவர் கழக பொருளாளர். என் தந்தையின் வழியில் கோவையில் நிறுவி தொடர்ந்து பணி செய்ய விரும்புகின்றேன். ச.இளமுருகன் துபாய் 24.5.2011

Thursday, May 5, 2011

அழகொழுகும் அத்தனையும் சுவைக்கும் சீராளன்
ஆற்றூ பணி அனைத்திலுமே தனித்த நோக்கினன்
பழமரமாய்ப் பயன்கொழிக்க வங்கி கண்டான்
பல்விதமாய் எதிர்நோக்கும் பார்வை கொண்டான்
வளவளத்த நத்தை போலும் செய்கை செய்யான்
வளமொரு புயற்செய்கைவெண்டி நிற்பான்
கலகலத்த நகையாளன் தீரம் மிக்கான்
'கருமுத்து தியாகராசன்' நினைவு வாழ்க.
கொஞ்சு தமிழ் நூலோடு ஆய்ந்தானில்லை
குறையில்லாப் பருத்தியாலே நூலை ஆய்ந்தான்
அச்சந்தரும் துன்பத்தால் ஆட்டங்கண்டு
அயர்ந்தோர்க்குப்புகலாக்க கொடைகள் செய்வான்
மிஞ்சிவரும் பெரும்பொருளைக் கல்விக் காக்கி
மிகுகலையின் நிறுவனமாய் நிலைக்க வைத்தான்
பருத்தியை நூலாக்கிப் பாட்டாளி வாழ்வைப்
பொன்னாக்கிப் போற்றிய தொழில்வேந்தன்.

poem by professorv.s.alagappan

தொழிலின் வேந்தன்‍‍ பேராசிரியர்வெ.சு.அழக‌ப்பன்
விண்முட்டும் மலைக்குவட்டில் வீசி விட்ட வெண்ப‌னிபோல் வெள்ளை நிற‌ ஆடையாள‌ன்
க‌ண்முட்டும் அழ‌கின் உரு சிவ‌ந்த‌ மேனி க‌ட்டிட‌த்துக் க‌லைத்துறையில் த‌னித்த‌ மேதை
ப‌ண்முட்டும் வாச‌க‌த்தைக் குற‌ளாம் நூலைப் பாகுநிக‌ர் சீர்சிலம்பைக் குறிஞ்சிப் பாட்டைக்
க‌ண்ப‌ட்டுப்போமாறு க‌ற்ற‌ மேலோன் க‌ற்ற‌தைப்போற்றும் வாழ்க்கையாள‌ன்.

poem by Mayazagu

கண் இமைக்கும் நேரத்திலே,மின்னல் ஒளி வேகத்திலே தென்காசி கேந்திர‌மாம் திருக்குற்றால‌த்தில்
தொழிலாள‌ர் த‌ந்தைய‌வ‌ர்,செட்டியார் க‌ருமுத்து
தியாக‌ராச‌ர் திருமேனி, திட‌மான‌ பொன்மேனி
த‌ங்க‌த்த‌ளிர்மேனி ம‌ங்காத‌ எழில்மேனி
ம‌லைமேலே த‌லைகீழாய் த‌ரைநோக்கிசீறி வ‌ரும்
மூலிகை ப‌ல‌ க‌ல‌ந்த‌ மாபெரும் அருவியிலே
ம‌கிழ்வோடு உற‌வாடி நீராட வ‌ருகையிலே
மாய‌மாய் எம‌ன் அங்கு வ‌ந்த‌தைத்தான் யார‌றிவார்

poem by Mayazagu about karumuttu

தெய்வ மகன்
எழுதியவர் தொழிலாளி மாயழகு படிப்பு6ம் வகுப்பு ருக்மிணி ஆலை
சேதுபதி பூமியிலே,செட்டியார் சாதியிலே,
செக்கச் சிவந்த மகன், தெக்கூர் தந்த மகன்.
த‌மிழ‌ன்னை ம‌டியினிலே,த‌வ‌ழ்ந்தே வ‌ள‌ர்ந்த‌ ம‌க‌ன்
உழைப்பால் உய‌ர்ந்திட‌வே, உத்த‌ம‌னாய் வாழ்ந்த‌ ம‌க‌ன்
உமையாள் அருளுட‌னே, நிலையாய் அம‌ர்ந்த‌ ம‌க‌ன்,
கூட‌ல் மாந‌க‌ர் வ‌ந்து குடிகொண்ட‌ தெய்வ‌ம‌க‌ன்
கோவில் ப‌ல‌ சென்று, குறையின்றி வாழ்ந்த‌ ம‌க‌ன்
க‌ன்னித் த‌மிழ்ப்ப‌ற்று கொண்ட‌தொரு ந‌ல்முத்து
அண்ண‌ல்க‌ருமுத்து அவ‌தார‌பொன்முத்து
அன்பின் பெரு வித்து அவ‌ர் என்றும் ந‌ம்சொத்து.