Thursday, May 5, 2011

poem by Mayazagu about karumuttu

தெய்வ மகன்
எழுதியவர் தொழிலாளி மாயழகு படிப்பு6ம் வகுப்பு ருக்மிணி ஆலை
சேதுபதி பூமியிலே,செட்டியார் சாதியிலே,
செக்கச் சிவந்த மகன், தெக்கூர் தந்த மகன்.
த‌மிழ‌ன்னை ம‌டியினிலே,த‌வ‌ழ்ந்தே வ‌ள‌ர்ந்த‌ ம‌க‌ன்
உழைப்பால் உய‌ர்ந்திட‌வே, உத்த‌ம‌னாய் வாழ்ந்த‌ ம‌க‌ன்
உமையாள் அருளுட‌னே, நிலையாய் அம‌ர்ந்த‌ ம‌க‌ன்,
கூட‌ல் மாந‌க‌ர் வ‌ந்து குடிகொண்ட‌ தெய்வ‌ம‌க‌ன்
கோவில் ப‌ல‌ சென்று, குறையின்றி வாழ்ந்த‌ ம‌க‌ன்
க‌ன்னித் த‌மிழ்ப்ப‌ற்று கொண்ட‌தொரு ந‌ல்முத்து
அண்ண‌ல்க‌ருமுத்து அவ‌தார‌பொன்முத்து
அன்பின் பெரு வித்து அவ‌ர் என்றும் ந‌ம்சொத்து.

No comments:

Post a Comment