Thursday, May 5, 2011

அழகொழுகும் அத்தனையும் சுவைக்கும் சீராளன்
ஆற்றூ பணி அனைத்திலுமே தனித்த நோக்கினன்
பழமரமாய்ப் பயன்கொழிக்க வங்கி கண்டான்
பல்விதமாய் எதிர்நோக்கும் பார்வை கொண்டான்
வளவளத்த நத்தை போலும் செய்கை செய்யான்
வளமொரு புயற்செய்கைவெண்டி நிற்பான்
கலகலத்த நகையாளன் தீரம் மிக்கான்
'கருமுத்து தியாகராசன்' நினைவு வாழ்க.
கொஞ்சு தமிழ் நூலோடு ஆய்ந்தானில்லை
குறையில்லாப் பருத்தியாலே நூலை ஆய்ந்தான்
அச்சந்தரும் துன்பத்தால் ஆட்டங்கண்டு
அயர்ந்தோர்க்குப்புகலாக்க கொடைகள் செய்வான்
மிஞ்சிவரும் பெரும்பொருளைக் கல்விக் காக்கி
மிகுகலையின் நிறுவனமாய் நிலைக்க வைத்தான்
பருத்தியை நூலாக்கிப் பாட்டாளி வாழ்வைப்
பொன்னாக்கிப் போற்றிய தொழில்வேந்தன்.

poem by professorv.s.alagappan

தொழிலின் வேந்தன்‍‍ பேராசிரியர்வெ.சு.அழக‌ப்பன்
விண்முட்டும் மலைக்குவட்டில் வீசி விட்ட வெண்ப‌னிபோல் வெள்ளை நிற‌ ஆடையாள‌ன்
க‌ண்முட்டும் அழ‌கின் உரு சிவ‌ந்த‌ மேனி க‌ட்டிட‌த்துக் க‌லைத்துறையில் த‌னித்த‌ மேதை
ப‌ண்முட்டும் வாச‌க‌த்தைக் குற‌ளாம் நூலைப் பாகுநிக‌ர் சீர்சிலம்பைக் குறிஞ்சிப் பாட்டைக்
க‌ண்ப‌ட்டுப்போமாறு க‌ற்ற‌ மேலோன் க‌ற்ற‌தைப்போற்றும் வாழ்க்கையாள‌ன்.

poem by Mayazagu

கண் இமைக்கும் நேரத்திலே,மின்னல் ஒளி வேகத்திலே தென்காசி கேந்திர‌மாம் திருக்குற்றால‌த்தில்
தொழிலாள‌ர் த‌ந்தைய‌வ‌ர்,செட்டியார் க‌ருமுத்து
தியாக‌ராச‌ர் திருமேனி, திட‌மான‌ பொன்மேனி
த‌ங்க‌த்த‌ளிர்மேனி ம‌ங்காத‌ எழில்மேனி
ம‌லைமேலே த‌லைகீழாய் த‌ரைநோக்கிசீறி வ‌ரும்
மூலிகை ப‌ல‌ க‌ல‌ந்த‌ மாபெரும் அருவியிலே
ம‌கிழ்வோடு உற‌வாடி நீராட வ‌ருகையிலே
மாய‌மாய் எம‌ன் அங்கு வ‌ந்த‌தைத்தான் யார‌றிவார்

poem by Mayazagu about karumuttu

தெய்வ மகன்
எழுதியவர் தொழிலாளி மாயழகு படிப்பு6ம் வகுப்பு ருக்மிணி ஆலை
சேதுபதி பூமியிலே,செட்டியார் சாதியிலே,
செக்கச் சிவந்த மகன், தெக்கூர் தந்த மகன்.
த‌மிழ‌ன்னை ம‌டியினிலே,த‌வ‌ழ்ந்தே வ‌ள‌ர்ந்த‌ ம‌க‌ன்
உழைப்பால் உய‌ர்ந்திட‌வே, உத்த‌ம‌னாய் வாழ்ந்த‌ ம‌க‌ன்
உமையாள் அருளுட‌னே, நிலையாய் அம‌ர்ந்த‌ ம‌க‌ன்,
கூட‌ல் மாந‌க‌ர் வ‌ந்து குடிகொண்ட‌ தெய்வ‌ம‌க‌ன்
கோவில் ப‌ல‌ சென்று, குறையின்றி வாழ்ந்த‌ ம‌க‌ன்
க‌ன்னித் த‌மிழ்ப்ப‌ற்று கொண்ட‌தொரு ந‌ல்முத்து
அண்ண‌ல்க‌ருமுத்து அவ‌தார‌பொன்முத்து
அன்பின் பெரு வித்து அவ‌ர் என்றும் ந‌ம்சொத்து.

Wednesday, May 4, 2011

MRRY.Karumuttu T.Kannan date of birth 9th May

தியாகராசர் ஆலையில் பணிபுரியும் மகளிர் பட்டுப்புடவை உடுத்தி தங்களது இல்லத்தில் நடைபெற இருக்கும் திருமணம் ஒன்றிற்க்கலந்து கொள்ள செல்வது போல உற்சாகமாக பெக்கொண்டு செல்வதை கப்பலூர் காலனிக்கும் ஆலைக்கும் இடைப்பட்ட தெருக்களில் காணலாம். மே தினத்தன்று ஆலை வ‌ளாகத்தில்
விழாநடத்தி ஊக்கத்தொகை வழங்கபடுகின்றது. 9.5.2011 கருமுத்து தி.கண்ணன் அவ‌ர்க‌ளின் பிற‌ந்த‌ நாள். உமாக‌ண்ண‌ன் ம‌ணிவிழா ஆண்டில் க‌லைத்த‌ந்தை ப‌ற்றி தமிழறிஞர்கள் எழுதிய‌ க‌ட்டுரைக‌ளை நாட்டுடைமை ஆக்க‌ வேண்டும்.
துபாயில் கண்காட்சி அரங்கின் வெளியே செல்லும் வாசல்களில் உங்களது இலவசப்பிரதிகளை எடுத்து செல்லுங்கள் என்று நிறைய நூல்களை அடுக்கி
வைத்துள்ளார்கள்.அது போல தியாகராசர் அறநிலையங்களில் ஆலைகளில்
நூல்களை பொது மக்களை சென்றடைய ஏற்பாடுகளைச்செய்ய வேண்டும்.
முத்த‌மிழ்க் காவ‌ல‌ர் கி.ஆ.பெ.விசுவ‌நாத‌ம் அவ‌ர்க‌ள் குறிப்பிட்ட‌தைப் போல‌ அர‌சு செய்ய‌ வேண்டிய‌ செய‌ல்க‌ளைக‌ருமுத்து செய்தார். அஎஅசு அவ‌ருக்கு செய்த‌து என்ன‌ ஒன்றுமில்லை. இப்ப‌டி க‌லைத்த‌ந்தை நூல்க‌ளை அர‌சு நாட்டுடைமை ஆக்க‌ வேண்டும். ச.இள‌முருக‌ன் துபாய்.5.5.2011

MRRY.Karumuttu T.Kannan date of birth 9th