Thursday, April 28, 2011

message sent to District collecter Madurai through Dinamalar.com from sharjah

பெருமதிப்பிற்குரிய மாவட்ட் ஆட்சியாளர் அவர்கட்கு தங்களது செயல்பாடுகள் பாராட்டத் தக்கவை. மதுரை மேலமாசி வீதியில் 251 கதவு எண்ணில் ஒரு கதர்க்கடை உள்ளது. தமிழ்நாடு அரசு விழா ஒன்றினை நடத்தியது. மகாத்மா காந்திஜி அவர்கள் மதுரைக்கு 22.9.1921ல் வருகைதந்த பொழுது இக்கட்டிடம் மீனாட்சி ஆலையின் கருமுத்து தியாகராசரின்அலுவலமாக செயல்பட்டு வந்தது. இக்கட்டிடத்தில் தான் தேசத்தந்தை அரைஆடை அணிந்தார்கள். தினமலர் மதுரைமாவட்டமலர் 23.7.2008 & 30.7.2008 செய்தி புகைப்படத்துடன் வெளியாகி உள்ளது. செய்தியைப் பார்த்த பின்னர்பொதும‌க்க‌ளில் ஒருவ‌னாக‌ அங்கு சென்றேன். எங்க‌ளை அங்குள்ள‌ மாடிக்குஅனும‌திக்க‌வில்லை. ல‌ட்ச‌க்க‌ண‌க்கில் செல‌வ‌ழித்து தேச‌த்த‌ந்தையைப் பூட்டி வைத்துள்ளார்க‌ள். பிர‌தி வ‌ருட‌ம் அக்டோப‌ர் மாத‌ம் 2 ஆம் தேதி ம‌ட்டும க‌த‌ர்த்துறை அதிகாரிக‌ளுக்கான‌ வ‌ருகைக்காக‌ தேச‌த்த‌ந்தை காத்து உள்ள‌ நிலைமை. உங்க‌ள் வீட்டில் உங்கள் த‌ந்தையை இப்ப‌டிப் பூட்டி வைப்பீர்களா என‌க்கேட்கத் தான் என்னால் முடிந்தது. ஆவன செய்ய வேண்டுகின்றேன்.இங்கு பர்துபாயில் ஒருமியூஸியம் உள்ளது. அங்கு கட்டிட தொழிலாளர்கள்,மீனவர்கள்,தையற்கலைஞர்கட்கு சிலைகள் வைத்து உள்ளனர் என்றால் தேசத்தந்தைக்கு சொல்லவா வேண்டும். பஞ்சாலைக்கவிஞர்ச.இள்முருகன்பஞ்சாலை.ப்ளாக் ஸ்பாட்.காம்.

No comments:

Post a Comment