Sunday, March 24, 2013

பசுமையான நினைவுகள் க.சண் முகசுந்தரம் காசாளர் கணக்கர், மதுரை தியாகராசர் பொறியியல் கட்டிடப் பிரிவு, மதுரை 15          1963 ஆம் ஆண்டு
                 
   அன்ன சத்திரம் ஆயிரம் கட்டல் , ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
   அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோ ர
 ஏழைக்கு எழு த்து அறிவித்தல்.  -  என்பது மகாகவி பாரதியார் வாக்கு. . ஓர்
ஏழைக்கு எழுத்தறிவிப்பது கோடிபுண்ணியம். ஆண்டு தோறும் பல நூறு  மாணவர்களுக்கு எழுத்தறிவு ஊட்டும் பணியை ஆற்றும்  திருமலைச்
செட்டியாரவர்களது குடும்பத்தாரின் சீரிய கல்வித்தொண்டு பெரும் பாராட்டு ம் போற்றுதலுக்கும் உரியது. இக்கல்வி நிலையத்துடன் நான் பன்னிரண்டு ஆண்டுகள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தேன் . அதுபோழ்து  நடந்த மறக்க முடியாத ஒரு சில நிகழ்ச்சிகளை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

    1940ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் கோம் பை நகர அஞ்சலகத தலைவனாக பொறுப்பு ஏற்றேன். ஊரோ  புதிது. ஊரிலுள்ள மக்கள் எவ்வாறு இருப்பார்களோ என்றெல்லாம் சிந்தித்தது உண்டு.
சிறிது அச்சப்பட் டதுண்டு.  மக்கள் எவ்வளவு நல்ல மனம் படைத்தவர்கள். நற்செயல்களுக்கு எத்துணை ஆர்வத்துடன் பேராதரவு தருபவ ர்கள்
என்பதெல்லாம்  நாட்கள் செல்ல ச் செல்ல த்  தெரிய வந்தது.
    அவ்வாறு இல்லையெனில் எனது இல்லத்திலேயே  சிறு அளவில்  தொடங்கப்பட்ட "தமிழ் இல்லம்"நாளடைவில் பெரிதாக வளர்ந்து  நாடு முழுவதும் குறளை  ப் பரப்பி இருக்கமுடியுமா? கம்பம் பள்ளத்தாக்கு , குறிப்பாக க் கோம்பை  மக்களின் நல்லாதரவு இல்லாவிடில், "மதுரை மாவட்ட த்தமிழ்த்தொண்டர் கழகம் "தோன்றி த்திருக்குறள் அட்டைகள் , குறள் எனாமல் பலகைகள்  குற ள் சினிமா சிலைடுகள்  ஆயிரக்கணக்கில்  ஆக்கித  தமிழர்கள் எங்கெங்கு  வாழ்கின்ரார்களோ அங்கெலாஐ ம்  அனுப்பி குறள்  மணம் கமழ செய்ய முடிந்து இருக்குமா  ? இத்துணை த்தொண்டுகள்  நிகழ்வதற்கும் ஒரு நிலை களனாக த் திகழ்ந்தது இன்று பொன்விழா கே கொண்டாடும்
டும்  பள்ளிக்கட்டிடம். பள்ளிபொறுப்பளர்களின் உற்ற உதவியும் தடையின்றி கே கிடைத்தது.

No comments:

Post a Comment