Sunday, March 24, 2013

தமிழ் வளர்த்த மதுரை ப .நெடுமாறன் 5.7.1967 இன்று பேருந்துகளிலும்  அரசு விடுதிகளிஉம் திருக்குறள் மிளிருவதற்கு  வழிவகுத்த பெருமை மதுரை திருவள்ளுவர் கழகத்திற்கும் கோம்பை த தமிழ் த் தொண்டர்  கழகத்திற்கும் உரியது.  தமிழ்த்தொண்டர்  கழகத்தை நிறுவிய திரு.க. சண் முகசுந தரம்  பல ஆண்டுகளுக்கு  முன்பாகவே பேருந்து நிலையங்களிலும் முக்கிய இடங்களிலும்  திருக்குறள் பலகைகளை  அமைத்து க குறள் பரப்பும்  பணியினைச் செய்தார். திருவள்ளுவர் கழக  வெள்ளி விழா 1967ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 முதல் 10ஆம் தேதி வரை  மாபெரும் விழாவாக  நடத்தப் பெற்றது. மதுரயில் நடைபெற்ற தமிழ் விழாக்களில்  இவ்வெள்ளி விழாவும் குறிப்பானதாகும்.
       இவ்விழாவில் வரவேற்பு கே குழுத் தலைவராக  தமிழவேள் பி.டி.இராசன்  அவர்களும் , பொதுச்செயலாளராகத் திரு கி.பழனியப்பன்  அவர்களும்  பொருளாளராக த திரு க.சண்முகசுந்தரம்  அவர்களும் மற்றும் பல தமிழ்த் தொண்டர்களும் இருந்து இவ்விழாவினை 
நடததினார்கள்.     
     குறளின் பெருமையை விளக்குவதாக  இவ்விழா  அமைந்தது. இவ்விழாப் பற்றிய  ஏனைய விவரங்களை த திருவள்ளுவர் கழக வெள்ளி விழா மலரில் காணலாம்
தமிழ் விழாக்கள் பல கண்ட மதுரை  அவற்றிற்கு எல்லாம்  சிகரம் வைத்தாற்

போல்  ஐந்தாம்  உலகத்தமிழ் மாநாட்டினைக் கொண்டாட விருக்கிறது.
தமிழர் பண் பாட்டின்  தொன்மையையும், சாவா மூவா த்தமிழ் மொழியின்  சீரிளமைத் த்திறன்  குன்றா பெருமையையும் கட்டிக்காத்து வரும் மதுரையில் இவ்விழா நடப்பது  எல்லாவகையிலும் சிறப்புடையதாகும்

 

No comments:

Post a Comment