Wednesday, June 1, 2011
ஜுன் மாதம் ஒன்றாம் தேதி தினமலரில்
ஷார்ஜா ரோலா அல்முபாரக் சென்டரில் உள்ள ஏசியன் பேலஸ் ஹோடேலில் இலக்குமணன் முதன்மை மேலாளர், துபாய் தமிழ் சங்க தலைவர் ரமேஷ் விஸ்வநாதன் அவர்கள் முன்னிலையில் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி பழைய மாணவர்கள் நூற்றி நாற்பது குடும்பத்தாருடன் கூடி கருமுத்து கண்ணன் அவர்கள் வாழ்த்து செய்தியுடன் கலந்து உரையாடல் நிகழ்ச்சி மே மாதம் ஆறாம் தேதி நடத்தினர். திரு. சிவக்குமார், இராஜா , மன்னவன் ஆகியோருக்கு கருமுத்து தியாகராசர் படம் கொடுக்கப்பட்டது.
Saturday, May 28, 2011
பழ.நெடுமாறன் துபாயில்

இலக்கியப்பேச்சாளர் தமிழ் ஆர்வலர் திரு.பழ .நெடுமாறன் மே ௨௭ வெள்ளிக்கிழமை அல் கிசைஸ் பெண்கள் உயர் தொழில் நுட்பக்கல்லூரி துபாயில் சொற்பொழிவு ஆற்றினார்கள். பஞ்சாலை கவிஞரும் அவரது துணைவியார் திருமதி கல்யாணியும் தலைவர் பழ . நெடுமாறன் அவர்களை சந்தித்தோம் . சந்திக்க உதவிய தோழர்கள் கோவிந்தராஜ் , பழனி , ஆனந்தன், மலை , மதன், சிவபெருமாள் ஆகியோருக்கு எங்களது நன்றி.உலகத்தமிழர் பேரமைப்பு க்கு நிதி தாருங்கள்.
Tuesday, May 24, 2011
பஞ்சால் நூற்கப்படுவது நூல் பிற பொருளைப்பஞ்சோடு கலத்தல் பணமிழக்கும் வழி.
அரைக்கெண்டையை ஓட்டினால் அதிக உற்பத்தியேஅறுத்தெரிவதால் குறையும் உற்பத்தியே.
நூல் நூற்கவே பஞ்சு என்பர்கழிவுக்கும் அதுவே துணை.
அறுந்த இழைகட்டி தரத்தினைப்போற்று ஆரியாதுரிதமாக எடுத்து உற்பத்தியைக் கூட்டு.
பஞ்சினால் நூற்கப்பட்ட நூல் போல் ஆகாதேகழிவினால் நூற்கப்பட்ட நூல்.
பஞ்சை நூற்றலும் நூற்றதை விற்றலும் உலகில் பஞ்சாலையின் தொழில்.
நூற்றதை விற்றல் விற்ற லாபத்தில்ஊதியம் வழங்குவது பஞசாலை.
உடை அணிந்து மகிழும் மாந்தர்க்கு உடை தருவது பஞசாலை.
பஞ்சு நூலைத்தருதலால் பஞ்சுஉயிரினும் ஓம்பப்ப்டும்.
பஞ்சினால் நூற்கப்பட்ட நூல் சிறிதெனினும்தரமானதெனில் நல்ல விலை தரும்.
எண்கள் ஓட்டுவதால் என்ன பயன்நூல் உற்பத்தி கூடாவிடின்.
எப்பஞ்சு எந்நூலைத் தரும் ஆய்ந்து அப்பஞ்சைஅப்பஞ்சை வழங்குவது அறிவு.
நல்ல பஞ்சை வழங்குவது நன்று நன்றல்லதுஅன்றே நிறுத்துதல் ந்ன்று.

k.shanmugasundram
மதுரை மலர் திருவள்ளுவர் நினைவு இதழ் 1951ல் வெளிவந்த கட்டுரை. மதுரை மலர் அறநெறியண்ணல் கி.பழநியப்பனாரால் வெளியிடப்பட்ட மலர்.திருக்குறள் எனாமல் போர்டுகள். வள்ளுவன் குறளை வையகம் முழுவதும் பரப்பும் நோக்கத்துடன் கருத்துரையுடன் திருக்குறள் அட்டைகள் பல்லாயிரக்கணக்கில் அச்சிட்டு இலவசமாக வழங்கியும் திரைப்படக்கொட்டகையில் குறள் சிலைடுகள் காண்பித்தும் சிறூசிறூ புத்தகங்கள் வெளியிட்டு வந்த எமது கழகத்தார் தற்சமயம் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்ட 3 அடி நீளம் 11/2 அடி அகலத்தில் எனாமல் போர்டுகள் தயாரித்து ஒவ்வொரு ஊரிலும் பஸ் நிலையம் போன்ற பொது இடங்களில் மாட்டி வைக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு போர்டிலும் வெவ்வேறு குறள்கள். இப்படி என் தந்தை க. சண்முகசுந்தரம் அவர்கள் தமிழ்த்தொன்டினை ஆரம்பித்து முத்தமிழ்க் காவலர் அவர்கள் வாயிலாக கருமுத்து தியாகராசர் அறக்கட்டளையின் மேலாளராக பணிபுரியும் வாய்ப்பினைப் பெற்றார்கள். ஐயா பழ நெடுமாறனது குறிஞ்சி இதழில் கட்டுரைகள் எழுதி வந்தார்கள். மத்ரை திருவள்ளுவர் கழக பொருளாளர். என் தந்தையின் வழியில் கோவையில் நிறுவி தொடர்ந்து பணி செய்ய விரும்புகின்றேன். ச.இளமுருகன் துபாய் 24.5.2011
Thursday, May 5, 2011
கொஞ்சு தமிழ் நூலோடு ஆய்ந்தானில்லை
குறையில்லாப் பருத்தியாலே நூலை ஆய்ந்தான்
அச்சந்தரும் துன்பத்தால் ஆட்டங்கண்டு
அயர்ந்தோர்க்குப்புகலாக்க கொடைகள் செய்வான்
மிஞ்சிவரும் பெரும்பொருளைக் கல்விக் காக்கி
மிகுகலையின் நிறுவனமாய் நிலைக்க வைத்தான்
பருத்தியை நூலாக்கிப் பாட்டாளி வாழ்வைப்
பொன்னாக்கிப் போற்றிய தொழில்வேந்தன்.

poem by professorv.s.alagappan
தொழிலின் வேந்தன் பேராசிரியர்வெ.சு.அழகப்பன்
விண்முட்டும் மலைக்குவட்டில் வீசி விட்ட வெண்பனிபோல் வெள்ளை நிற ஆடையாளன்
கண்முட்டும் அழகின் உரு சிவந்த மேனி கட்டிடத்துக் கலைத்துறையில் தனித்த மேதை
பண்முட்டும் வாசகத்தைக் குறளாம் நூலைப் பாகுநிகர் சீர்சிலம்பைக் குறிஞ்சிப் பாட்டைக்
கண்பட்டுப்போமாறு கற்ற மேலோன் கற்றதைப்போற்றும் வாழ்க்கையாளன்.

Subscribe to:
Posts (Atom)