Sunday, April 7, 2013

தியாகராசர் கலைகல்லூரியில் புகுமுகவகுப்பில் படித்தேன். 1959-60 இல்  தமிழ் பாடம் நடத்த வந்த பேராசிரியர்கள் சி.இலக்குவனார், ^^ஒள வை 
துரைசாமிப் பிள்ளை , ^ஒளவை நடராச,ன், நா.பாலுசாமிஅ , .கி பரந்தாமனார்,   
ஆகியோர் வந்தனர். கருமுத்து மாணிக்கவாசக தியாகராசன் அவர்கள் எங்களுடன் படித்தார். அவருக்கு வரும் மதிய உணவை எங்ளு க்கு அளித்து  விட்டு  எங்களது  விருந்தாளியாக விடுதியில் உணவு அருந்துவார். எளிமையாக பழகுவார். நீச்சல்  குளத்தில் இறங்கி நீசல் அடிப்பார். பாகப்பிவினை ப படம் சிந்தாமணி திரையரங்கில் நடைபெற்ற பொழுது எங்களுடன் பார்த்து ரசித்தார். ஜோதி கிருஷ்ணா என்று ஒரு உணவகம் இப்பொழுது எம்.எஸ்.பி. இராஜா ஹார்டு வேர்  உள்ளது. அங்கு எங்களுடன்  மதிய உணவு   பின்பு டெல்லி வாலாவில்  டிபனும் சாப்பிட்டு உள்ளோம். அந்த  ஆண்டு நடந்த நீச்சல் போட்டியில் இளமுருகன்  வெற்றி பெற்றார். தியாகராசன் கைதட்டி  உற்சாகப்படுத்தினார். கலைஅன்னை திருமதி இராதா தியாகராசன்  அவர்கள் கையால் பரிசு வணங்கி வாங்கினோம். 

No comments:

Post a Comment