Thursday, November 29, 2012

கலைத்தந்தை கருமுத்து தியாகராச செட்டியார். (  சுந்தரராமன் )எல்.என்.எஸ்

என் எஜமானர் வள்ளல் கலைத்தந்தை கருமுத்து தியாகராஜ செட்டியார் அவர்களை ப் பற்றி எழுத வாய்ப்பு க் கிடைத்ததை  ஒரு பெரும பாக்கியமாகக்
கருதுகிறேன் .
 அவர் மனித குலத்தில் ஒரு அரிய  மாணிக்கம் .அஞ்சா நெஞ்சமும் தள ராத
ஊக்கமும்  அயராத உழைப்பும்  வே று  யாருக்கும்  கிட்டாத  ஆற்றலும் 
கொண்டவர் .எந்த க் காரியத்தை எடுத்துக் கொண்டாலும் நன்கு  ஆ லோசித்து
பலாபலன்களை த தெள்ளத்தெளியசிந்தித்த  பிறகே  அதில் இறங்குவார். 
இறங்கியபின்னர் நோக்கார்.  கருமமே  கண்ணாய்  பணியாற்றுவார். ஒரு சிறு ஆலையில் தொடங்கி,வெளிநாட்டு வல்லுனரும் போற்றிட பல   நவீ ன ஆலைகளை  அமைத்து ப பல்லாயிரம்  மக்கள்  வாழ வழிவகுத்த அந்த உத்தமரை என்றும்  மறக்க இயலாது.  அவரது ஆலைகளும்  கல்விக்கூடங்க ளும   அவருக்கு  என்றும்  அழியாத  சின்னங்களாக என்றென்றும்  விளங்கும் .     
     சட்டம்  அவருக்கு இனிப்பு ப பண்டம் மாதிரி. சட்ட நுணுக்கங்களை  நன்கு  ஆராய்ந்து , சட்ட நிபுணர்களும் சிறந்த வழக்கறி ஞ்ர்களும் பரவசமாகி  வியக்கும்  வண்ணம்  அலசி எடுத்து க் கூ றுவார்.தம் சட்ட ஞா னத்தால்  அவர் வென்ற  வழக்குகள். பல பல. அவற்றில்  அவர் கண்ட  வெற்றியால்  பலன் அடைந்த ஆளை நிருவாகத்தினர்  இந்தியா  முழுவதும்  இருக்கின்றார்கள்.
  அவர்கள் அவரைத தெய்வாமகவே  போற்றி ப புகழ்கிறார் கள் . 

No comments:

Post a Comment