Tuesday, May 24, 2011
k.shanmugasundram
மதுரை மலர் திருவள்ளுவர் நினைவு இதழ் 1951ல் வெளிவந்த கட்டுரை. மதுரை மலர் அறநெறியண்ணல் கி.பழநியப்பனாரால் வெளியிடப்பட்ட மலர்.திருக்குறள் எனாமல் போர்டுகள். வள்ளுவன் குறளை வையகம் முழுவதும் பரப்பும் நோக்கத்துடன் கருத்துரையுடன் திருக்குறள் அட்டைகள் பல்லாயிரக்கணக்கில் அச்சிட்டு இலவசமாக வழங்கியும் திரைப்படக்கொட்டகையில் குறள் சிலைடுகள் காண்பித்தும் சிறூசிறூ புத்தகங்கள் வெளியிட்டு வந்த எமது கழகத்தார் தற்சமயம் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்ட 3 அடி நீளம் 11/2 அடி அகலத்தில் எனாமல் போர்டுகள் தயாரித்து ஒவ்வொரு ஊரிலும் பஸ் நிலையம் போன்ற பொது இடங்களில் மாட்டி வைக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு போர்டிலும் வெவ்வேறு குறள்கள். இப்படி என் தந்தை க. சண்முகசுந்தரம் அவர்கள் தமிழ்த்தொன்டினை ஆரம்பித்து முத்தமிழ்க் காவலர் அவர்கள் வாயிலாக கருமுத்து தியாகராசர் அறக்கட்டளையின் மேலாளராக பணிபுரியும் வாய்ப்பினைப் பெற்றார்கள். ஐயா பழ நெடுமாறனது குறிஞ்சி இதழில் கட்டுரைகள் எழுதி வந்தார்கள். மத்ரை திருவள்ளுவர் கழக பொருளாளர். என் தந்தையின் வழியில் கோவையில் நிறுவி தொடர்ந்து பணி செய்ய விரும்புகின்றேன். ச.இளமுருகன் துபாய் 24.5.2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment