Tuesday, November 12, 2024

அய்யா பழ. நெடுமாறன் அவர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நல்லக்கண்ணு நூற்றாண்டு விழா அழைப்பிதழை வழங்கினார்கள் 91 வயதில் நெல்லையில் இருநது சென்னை பயணம்

Wednesday, January 24, 2024

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று அய்யா பழ.நெடுமாறன் அவர்களை சந்தித்தார்கள்.ருக்மிணி ஆலையில் பணியாற்றிய பொழுது 291மேலமாசி வீதியில் பழ.நெடுமாறனது இல்லத்தில் குடும்ப த்துடன் வசித்தேன். TNTUC தொழிற்சங்கம் அய்யாவைக் கொண்டு துவங்கினேன்.கருமுத்து தியாகராசர் பற்றி கண்ணதாசன் அவர்களிடம் கவிதை குத்தாலிங்க அத்தான் முன்னிலையில் எழுதி வாங்கி ருக்மாக் இதழில் கி.பழநியப்பனார் வெளியிட்டார்கள். பெருநதலைவர் காமராஜர் பேச்சு செய்தி நாளிதழ் வெளியீட்டு விழாவில் ஜெயபால் சொற்படி பதிவு செய்தேன்.மீனாட்சி அம்மன் கோவில் 1963 குடமுழுக்கு சமயம் அம்மன் சன்னதி முக்குறுணிப் பிள்ளையார் குறுக்குப்பாதை ஸ்வாமி சொக்கநாதர் சுற்றுச்சுவரில் செதுக்கப்பட்ட திருவிளையாடல் சிற்பங்கள் தமிழில் விளக்கம் எழுதிய தை கி.பழநியப்பனார் ஆற்றிய அருந்தொண்டுகள் பற்றி அறிவேன்.ச.இளமுருகன் ஹரி ஈஸ்வர் பவனம் 49 நேரு காலனி கோயமுத்தூர் 41 9688994522=31.10.2023

Wednesday, January 3, 2024

எம்.ஜி.ஆர் முதலமைச்சர். மேதகு பிரபாகரனுக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது அவருக்கு உளவுப் பிரிவினால் தெரிவிக்கப்பட்டது.பிரபாகரன் மதுரையில் தப்பிச்செல்ல ஏற்பாடுகளைச் செய்தார்.

Tuesday, January 2, 2024

இன்று பழ.கோமதிநாயகம் நீர்வளமேம்பாட்டுத்துறை நிபுணர்.உயர்அதிகாரி.சென்னை மாநிலம். தம்பி இராமக்கிருஷ்ணன் மகள் லட்சுமிப்பிரியா நாத்தனார் எங்களை வந்து சந்தித்தார்.கோமதிநாயகம் அலுவலகத்தில் ஒரு வேலை காலியாக இருப்பதாகக்கூறினார்கள் சிறிதும் தாமதம் செய்யாமல் அறநெறியண்ணல் நூலினை க் கொடுத்து அவர் இருக்கும் அலுவலகம் சென்று கொடுக்க வேண்டினேன்.வேலை போட்டுக் கொடுத்தார்.மாமா என வாய் நிறையக் கூப்பிடுவார் இன்றளவும் அப் பெண்மணி தொடர்பில் உள்ளார். கோமதிநாயகம் பல குடும்பங்கள் வாழ வழி செய்த வள்ளல்
K.k.நகரில் அண்ணன் சந்திரபால் வீட்டில் இருந்து அரசின் போக்கினைக்கண்டித்து அறிக்கைகள் எழுதி வைப்பார் நெடுமாறன். அதனை மாலைமுரசு அலுவலகத்தில் சேர்த்து விடுவேன்.எல்லா பத்திரிகை களும் வெளியிட்டன. தல்லாகுளம் பெட்ரோல் பங்கில் சிங் வேடமிட்டு நெடுமாறன் கட்சிக்காரர்களை சந்திப்பார்.கோரிப்பாளையம் கவுன்சிலர் வேலாயுதம் முக்கியமானவர். மந்தித்தோப்பு மணிக்கட்டி சுவாமி தங்கராஜ் செல்லூர் காமராசு பாண்டுரங்கன் குறிப்பிடத்தகுந்தவர்கள்.தெற்குவாசல் மாணிக்கம் மதுரை வீரன் கோவில் ச பிச்சைக்கணபதி முன்னணி வீரர்கள் கலைஞரின் ஆட்சி. பத்திரிக்கைகள் மதுரை குறிஞ்சி நெடுமாறன் கட்டபொம்மன் ரவுண்டானாவில் தப்பி ஓட முயற்சி என தலையங்கம் எழுதின காலமது. மதுரை முத்துவிற்கும் நெடுமாறன் அவ்ர்கட்கும் பனிப்போர் நடந்தது.கலைஞர் டென்ஸன் ஆனார். தா.கிருஷ்ணன் வடக்குமாசி வீதிக் கூட்டத்தில் உட்கட்சிப்பூசலின் விளைவாக தப்பி வந்தேன் என அலறினார். கலைஞரைத்தூங்க விடாமல் ஆட்டங்காட்டினார் நெடுமாறன். ஒருநாள் சந்திரா டாக்கீஸ் படம் முடிந்து மக்கள் செல்கையில் 291 மேலமாசி வீட்டின் சுவர்மீது ஏறி தி.மு.க முத்துவின் ஆட்கள் மாடிவழியே உள்ளே குதிக்க முயன்ற னர். கோழிக்கண்ணன் குரூப் சோடாபாட்டிலை வீசி ரவுடி களை விரட்டினர் காவலுக்கு வந்த போலீஸ் இடையில் மாட்டிக்கொண்டனர். கதவைத்திறந்து அனுமதி த்து போலீஸ்காரர்களைக்காப்பாற்றினோம். நெடுமாறன் வீட்டிற்கு காவல் வந்த காவல்துறை அதிகாரி நன்றி தெரிவித்தார் த மங்கம்மா சத்திரம் பெரியார் நிலையம் அருகே கைது செய்யப்பட்ட நெடுமாறனுக்கு மேலமாசி வீதி அக்கா நாகம்மை சொக்கலிங்கம் அவர்கள் தந்த உணவை SP கந்தசாமி அவர்கள் அனுமதி பெற்று பரிமாறினேன்.மதுரை ஜெயிலில் விஸ்வநாதன் அண்ணன் கல்யாணி மதினி கவனித்துக் கொண்டார்கள்.

Monday, January 1, 2024

24 நவம்பர் 1973 செய்தி நாளிதழ் மதுரை வெளியீட்டு விழாவிற்கு அய்யா பழ நெடுமாறன் அவர்கள் பெருந்தலைவர் காமராஜரை அழைத்து இருந்தார். செய்தியின் ஆசிரியர் திருவாருர் எம்.ஜெயபால் அண்ணன் அவர்கள் என்னை தமுக்கம் மைதானம் தல்லாகுளம் சென்று பெருந்தலைவர் பேச்சினை ஒலிப்பதிவு செய்து கொண்டு வரும்படி கூறினார்கள்.கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் செட்டியார் அவர்கள் பேரன் இராஜாசண்முகம் மீனாட்சி ஆச்சியிடம் நேஷனல் பானோஸோனிக் டேப் ரெக்கார்டர் வாங்கிக்கொண்டு மைக்செட் காரரிடம் அனுமதி வாங்கி ஒரு சடம்பு கொண்டு கட்டி பதிவு செய்தேன். ' மாவீரன் நெடுமாறன் அஞ்சா நெஞ்சன் எனப்புகழுரை நிகழ்த்தினார்.தினமணி கோயங்கா அவர்கள் முனிச்சாலையில் அச்சாகி வெளிவந்த நாளிதழில் யுனிக் இபுராஹிம் வள்ளியப்பா செட்டியாரின் பேட்டி ஹரே ராமா ஹரே கிருஷ்ணா வெளிவந்தது. இறுதியில் நடிகர் திலகம் சிம்மக் குரலோன் செவாலியர் சிவாஜி கணேசன் பேசினார்கள்.அப்போது தொண்டர் ஒருவர் மேடையிலேறி ஒரு துண்டுச் சீட்டினைக்கொடுத்தார்.கலைஞர் அரசு துக்ளக் இதழைப் பறிமுதல் செய்து விட்டது என ஆவேசமாகக் கத்திக்கொண்டே மேடையில் இருந்து ஓடி விட்டார். கூட்டம் கலைந்து மக்கள் சிதறி ஓடினார்கள்.நானும் செய்வதறியாது திகைத்து நின்றேன். ஒருவாறு தெளிந்து டேப்ரிக்கார்டருன் நடந்தே மேலமாசிவீதி வந்து அண்ணன் ஜெயபால் அவர்களிடம் டேப்ரிக்கார்டரைப் போட்டுக் காட்டினேன். மறுநாள் செய்தி வெளிவந்தது.